சீன மொழி
சீன மொழி | |
---|---|
汉语/漢語 ஆன்யூ, 中文 சொங்குவென் | |
நாடு(கள்) | சீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள் |
பிராந்தியம் | (majorities): கிழக்கு ஆசியா (சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (அண்ணளவாக 1.176 பில்லியன் காட்டடப்பட்டது: 1984–2000) |
சீன-திபெத்திய
| |
Standard forms | |
பேச்சு வழக்கு |
வூ (சங்கைனீசு உள்ளடங்கலாக.)
மின் (அமோய், தாய்வானீசு உள்ளடங்கலாக.)
யுவே (கத்தோனீசு, தைசானீசு உள்ளடங்கலாக.)
|
சீன எழுத்துக்கள், சுயின் புகாவோ, இலத்தீன், அரேபியம், சிரில்லிக், பிரெயில் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சீனா தாய்வான் மொரிசியசு |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழி கட்டுப்பாடு | In the PRC: National Language Regulating Committee[1] In the ROC: Mandarin Promotion Council In Singapore: Promote Mandarin Council/Speak Mandarin Campaign[2] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | Variously: zho — Chinese (generic) cdo — Min Dong cjy — Jinyu cmn — Mandarin cpx — Pu Xian czh — Huizhou czo — Min Zhong gan — Gan hak — Hakka hsn — Xiang mnp — Min Bei nan — Min Nan wuu — Wu yue — Cantonese |
சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும்.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ச்சிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.
சீன எழுத்து மொழி
[தொகு]முதன்மைக் கட்டுரை: சீன எழுத்து மொழி
சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.
சீன மொழியின் ஒலிப்பியல்
[தொகு]சீனப் பேச்சு மொழி இடத்துக்கிடம் வேறுபடும். ஒரு நிலப்பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு மொழி வேற்று நிலப்பகுதி மக்களின் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அப்படி இருக்கையில் அதை வேறு மொழியாகவும் வகைப்படுத்தும் முறையும் இருக்கின்றது.
பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) உரோமன எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். உரோம எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதல்ல.
பின்யின் முறையானது உரோம எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஹான்யூ பின்யின் (Hanyu Pinyin (Simplified Chinese: 汉语拼音; Traditional Chinese: 漢語拼音; pinyin: Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.
குரலோசை
[தொகு]அனைத்து வகையான சீன மொழிகளிலும் குரலோசை பயன்படுத்தப்படுகின்றது. வடசீனாவில் காணப்படும் சில கிளை மொழிகளில் குறைந்த அளவாக மூன்று குரலோசைகள் காணப்படுகின்றன.
ஹன்சி | பின்யின் | சுருதி எல்லைக்கோடு | பொருள் |
---|---|---|---|
妈/媽 | mā | உச்ச மட்டம் | "அம்மா" |
麻 | má | உச்ச உயர்ச்சி | "சணல் செடி வகை" |
马/馬 | mǎ | கீழ்ச் செல்லும்-உயர்ச்சி | "குதிரை" |
骂/罵 | mà | உச்ச வீழ்ச்சி | "கடிந்து கொள்" |
吗/嗎 | ma | நடுநிலை | கேள்விச் சொல் |
தரமான மாண்டரீன் குரலோசைகளுடன் தரமான கண்டனிய குரலோசைகளை ஒப்ப்டுகையில் ஒன்பது வேறுபாடு மிக்க குரலோசைகள் காணப்படுகின்றன.
ஹன்சி | ஜியுட்பிங் | சுருதி எல்லைக்கோடு | பொருள் |
---|---|---|---|
詩 | si1 | 上平 - உச்ச மட்டம் | 'கவிதை |
史 | si2 | 上上 - உச்ச உயர்ச்சி | வரலாறு |
弒 | si3 | 上去 - நடு மட்டம் | படுகொலை செய்வதற்கு |
時 | si4 | 下平 - உயர்ச்சி வீழ்ச்சி | நேரம் |
市 | si5 | 下上 - நடு-கீழ் உயர்ச்சி | சந்தை |
是 | si6 | 下去 - உயர்ச்சி மட்டம் | ஆமாம் |
色 | si7 | 上入 - உச்சத்தில் நிறுத்தப்பட்டது | நிறம் |
刺 | si8 | 中入 - நடுவில் நிறுத்தப்பட்டது | முள் |
食 | si9 | 下入 - நடு-கீழ் நிறுத்தப்பட்டது | சாப்பிடுவதற்கு |
சீன மொழியும் செம்மொழித் தகுதியும்
[தொகு]உலகில் பேசப்பட்டுவரும் ஒரு மொழிக்கு, செம்மொழி என்னும் தகுதியானது அம்மொழியில் காணப்படும் இலக்கிய வளம் மற்றும் தரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம் ஆகும். சீன மொழியில் ஏராளமான செவ்வியல் இலக்கியங்கள் செம்மொழித் தகுதியுடன் விளங்குவதால் ஏனைய மொழிகள் போல் சீனமும் செம்மொழி எனப் போற்றப்படுகிறது. [3]
செம்மொழிப் பண்புகள்
[தொகு]உலகில் 6000 த்திற்கும் மேற்பட்ட மொழிகள் காணப்படுகின்றன.இவற்றுள் மூவாயிரம் மொழிகள் மட்டுமே இலக்கண,இலக்கிய வளமுடையதாக உள்ளன.இவற்றுள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றுத் தொன்மையுடைய சிலவாகும்.அவற்றுள் சீன மொழியும் ஒன்று.ஒரு மொழியானது செம்மொழித் தன்மையுடையது என்பதற்கான அடிப்படைக் கூறுகளில் அம்மொழியின்
- தொன்மை
- பிறமொழிச் செல்வாக்கின்மை
- தாய்மை
- தனித்தன்மை
- இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும்
- பொதுமை
- நடுவுநிலைமை
- பண்பாடு,கலை நுட்ப வெளிப்பாடு
- விழுமிய சிந்தனை
- கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
- மொழிக் கோட்பாடு
போன்றவை தொகுப்பாக அமைந்திடுதல் இன்றியமையாததாகும். தவிர, ஒரு மொழியின் செம்மொழித் தகுதிப்பாட்டிற்கு அம்மொழியில் இடம்பெற்றுள்ள கருத்துப்பொருட்கள் (Incorporeal objects) மற்றும் காட்சிப்பொருட்கள் (Corporeal objects) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் கருத்துப் பொருள்களில் இலக்கியப் படைப்புகளும் காட்சிப் பொருள்களில் கலைப் படைப்புகளும் அடங்கும்.
உலகச் செம்மொழிகள்
[தொகு]- தமிழ் (Tamil)
- கிரேக்கம் (Greek)
- இலத்தீன் (Latin)
- அரேபியம் (Arabic)
- சீனம் (China)
- எபிரேயம் (Hebrew)
- பாரசீகம் (Persian)
- சமசுகிருதம் (Sanskrit)
சீன மொழி இலக்கியத்தின் முன்னோடிகள்
[தொகு]சீன மொழி இலக்கியம் 5000 ஆண்டுத் தொன்மை மிக்கது. சீன இலக்கிய வரலாற்றில் பொ.ஊ.மு. 3000 முதல் பொ.ஊ.மு. 600 வரை உள்ள காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படும். பொ.ஊ.மு. 600 முதல் பொ.ஊ. 200 வரையிலான காலத்தைத் தொன்மைக்காலம் என்கின்றனர். அதுபோல், சீன இலக்கிய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக, பொ.ஊ.மு. 600 கால கட்டத்தில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவோட்சு (Laotse) ஆகியோர் உள்ளனர். பொ.ஊ.மு. 3000 முதல் பொ.ஊ.மு. 600 வரையிலான சீன மொழி இலக்கியங்கள் கன்ஃபூசியஸால் நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. தமது படைப்பான தென்றலும் வாடையும் என்ற நூலை ஐந்தாவது தொகுதியாக எழுதி வெளியிட்டார். கன்பூசியஸ் தொகுத்த நான்கு தொகுதிகளில் சீன மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றியப் பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது பழம்பாடல் தொகுதியாகும். கன்ஃபூசியசுக்கு சற்று மூத்தவரும், சமகாலத்தவருமான லாவோட்சு என்ற அறிஞர் தாவ் என்ற நெறியைக் கண்டவர் ஆவார்.
சீன மொழியும் கற்றல் சிக்கல்களும்
[தொகு]சீன மொழியிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை 80,000 ஆகும். ஆனால், அவற்றில் அண்மைக் காலத்தில் உபயோகப்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாகும். இந்த 3,000 சீன மொழிக்குரிய எழுத்துகளை மனனம் செய்து படிப்பதென்பது கடினமான ஒன்று. சீன மொழிக்கான சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உள்ளன. அவையாவன:
- உச்ச ஒலிப்பு முறை (High Tone - High Frequency Tone),
- ஏற்ற ஒலிப்பு முறை (Rising Tone),
- கீழ் ஏற்ற ஒலிப்பு முறை (Falling Rising Tone),
- கீழ் ஒலிப்பு முறை (Falling Tone)
- சம ஒலிப்பு முறை (Neutral Tone) என்பதாகும். உதாரணத்திற்கு தமிழில் குறில் நெடில் என்ற இரண்டே உண்டு, ம (குறில்) - மா (நெடில்) ஆங்கிலத்திலும் குறில் நெடில் என்ற வகைகள் இல்லாவிட்டாலும் சொற்களுக்கு ஏற்ற ஒலிப்பை பெற முடியும் என்பது அதன் இலக்கணம் ஆகும். ஆனால், சீன மொழியில் ம்ம, ம்மா, ம்ஆஆஅ, ம (mma, mmaa,maaha, ma) ஆகிய நான்கு ஒலிப்பு முறைகளுக்கான சொற்களும் அவற்றிற்குரிய பொருளும் வேறு வேறானவை.[4]
சீன மொழியின் எழுத்து வரிவடிவத்தில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் பு-தொங்-வா எனப்படும் பொது வரி வடிவமும், தைவான் நாட்டில் தொன்மையான எழுத்து முறையான பாரம்பரிய மாண்டரின் எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றினிடையே பெருத்த வேறுபாடுகள் நிறைய உண்டு. பொது எழுத்து வடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகளே உள்ளன. பாரம்பரிய எழுத்து வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வடிவுரு ஆகியவை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆயினும், எழுபத்தைந்து விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானதாகவே இருக்கின்றன. பொதுவடிவத்தைப் படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த முப்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே கற்க இயலும். சீன மொழி மற்றும் அதன் பண்பாடு குறித்து ஆழ்ந்து படிக்கவும் கற்கவும் பாரம்பரிய எழுத்துகளை அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.china-language.gov.cn/ பரணிடப்பட்டது 2015-12-18 at the வந்தவழி இயந்திரம் (Chinese)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-04-04. பார்க்கப்பட்ட நாள் 2008-06-11.
- ↑ "உலகச் செம்மொழிகள் வரிசையில் தமிழின் தொன்மை". பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
- ↑ 4.0 4.1 "நான் அறிந்த வகையில் சீன மொழி !". பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/03/content_371457.htm The legacy and future of the Chinese language
- செவிக்கு இசையாகும் சீனமொழி பரணிடப்பட்டது 2007-08-28 at the வந்தவழி இயந்திரம்
சீன மொழியைக் கற்றல்
[தொகு]- தமிழ் மூலம் சீனம், பாடம் 1 பரணிடப்பட்டது 2007-05-28 at the வந்தவழி இயந்திரம் - (தமிழில்)
- தமிழரும் சீனரும் மணந்துகொண்டால்... சுப்பிரமணியன் சீனிவாசன் பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம்
- http://www.aboutchinese.info/beginnerschinese/learnchinesegrammar.html பரணிடப்பட்டது 2007-01-18 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்) - சீன மொழி - அறிமுகம்
- http://www.zapchinese.com/Chinese-lessons/Lesson08/Lesson08.htm - (ஆங்கில மொழியில்) - சீன மொழி எழுதுதல் - கீற்றுக்கோடுகள் இடும் முறை
- http://www.geocities.com/Tokyo/Palace/1757/scrittura/scrittura.htm பரணிடப்பட்டது 2007-11-07 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்) - சீன மொழி எழுதுதல் - வேர்க்குறியீடுகள்
- http://www.bbc.co.uk/languages/chinese/real_chinese/ - பிபிசி மொழிப் பயிற்சி
- http://www.chinese-outpost.com/language/default.asp Free Beginner's 'Introduction to Mandarin' Tutorial
- http://www.sacu.org/langchindex.html பரணிடப்பட்டது 2007-02-05 at the வந்தவழி இயந்திரம் Basic Chinese
- http://www.adsotate.com/textbook/?q=taxonomy/term/1 பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் Readings with hover support
- http://www.chineselearner.com/writing/strokes/stroke-examples3.html பரணிடப்பட்டது 2007-03-23 at the வந்தவழி இயந்திரம் Chinese Learner Learn Mandarin Chinese Online Free
- http://www.scribd.com/doc/180128181/Tamil-Chinese-Dictionary தமிழ் சீனம் பட அகராதி