சிரிகன் சரோயன்சிரி
சிரிகன் சரோயன்சிரி | |
---|---|
பிறப்பு | 1986 யசோதன், தாய்லாந்து |
தேசியம் | தாய்லாந்து |
கல்வி | திரையம் உதோம் சுக்சா உயர்நிலைப் பள்ளி தம்மசாத் பல்கலைக்கழாகம் |
பணி | வழக்கறிஞர் |
சிரிகன் சரோயன்சிரி (Sirikan Charoensiri) (பிறப்பு 1986) சூன் சரோன்சிரி என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் தாய்லாந்து மனித உரிமை வழக்கறிஞர் ஆவார். இவர் மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்கறிஞர்களுடன் பணிபுரிகிறார். மேலும் புதிய ஜனநாயக இயக்கத்தின் பதினான்கு மாணவர் ஆர்வலர்களின் சட்ட பிரதிநிதிகளில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் தாய்லாந்து அதிகாரிகளிடமிருந்து துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். அத்துடன் மனித உரிமை வழக்கறிஞராக இவர் பணியாற்றியது தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது. இராணுவ ஆட்சிக்குழுவால் தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் தாய்லாந்து வழக்கறிஞராவாவார்.
கல்வி
[தொகு]சிரிகன் சரோயன்சிரி 1986இல் தாய்லாந்தில் பிறந்தார். யசோதன் மாகாணத்தின் யசோதனில் வளர்க்கப்பட்டார். இவர் திரையம் உதோம் சுக்சா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கல்லூரியில் ஆயத்தக் கல்வியைப் பெற்று, பின்னர் சட்டப் பள்ளியில் நுழைந்தார். 2009இல் தம்மசாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பட்டம் முடித்த பின்னர், சரோயன்சிரி பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையத்துடன் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் சித்திரவதை தடுப்பு சங்கம் மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அமைப்புடன் சித்திரவதை தடுப்பு, தென் தாய்லாந்து கிளர்ச்சி தொடர்பான மனித உரிமைகள் கவலைகள் மற்றும் விதியை அமல்படுத்துவதும் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். 2 ஆண்டுகளாக சட்ட முன்முயற்சியின் நடைமுறையிலும் ஈடுபட்டார் . 2013ஆம் ஆண்டில், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தைப் படிப்பதற்காக எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டங்களில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.
தொழில்
[தொகு]தனது சட்டப்படிப்பு முடிந்ததும், சரோயன்சிரி சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தில் பணிபுரிந்தார். 2014 மே 22 அன்று, தாய்லாந்து இராணுவத்தின் தளபதி பிரயுத் சான்-ஓ-சா தலைமையிலான தாய்லாந்து ஆயுதப்படைகள் சதித்திட்டத்தை நிகழ்த்தியபோது, சட்ட விஷயங்களை கையாள்வதற்கு ஒரு தனி நிறுவனத்தை அமைப்பதன் அவசியத்தை இவர் உணர்ந்தார். ஏனெனில் வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அணுக தடை விதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இராணுவம் ஒரு வாரண்ட் இல்லாமல் மக்களை கைது செய்து, குற்றச்சாட்டுகள் இல்லாமல் தடுத்து அவர்களை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருந்தது. மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்கறிஞர்களுடன் இவர் இணைந்து நிறுவியபோது, இது ஆரம்பத்தில் ஒரு ஆலோசனை மையமாக உருவாக்கப்பட்டது. விரைவில் அது மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் குழுவாக விரிவடைந்தது. மேலும் இதற்கு மனித உரிமை மீறல்கள் குறித்து பணியாற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் குழுக்களால் நிதியளிக்கப்பட்டது..
முதல் வழக்கு
[தொகு]2015 ஆம் ஆண்டில், சரோயன்சிரி ஆங்காங்கின் "இனிடியம் மீடியா" என்ற அமைப்பின் புகைப்பட பத்திரிகையாளர் அந்தோனி குவான் ஹோக்-சுன் என்பவரை தடுப்பிலிருந்து வெளிக் கொணர்ந்தார். பிரம்மன் கோயில் மீது குண்டுவெடிப்பு குறித்து அறிக்கை அளிக்க தாய்லாந்திற்கு வந்த குவான், தாய் ஆயுதத்தின் சட்டங்களின் கீழ் பொருட்கள் கட்டுப்படுத்தப்படுவதை அறியாமல், ஒரு பிளாக் ஜாக்கெட் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளைக் கொண்டு வந்தார். அவர் ஆங்காங்கிற்கு திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
[தொகு]அதே ஆண்டு 14 ஜனநாயக சார்பு மாணவர் எதிர்ப்பாளர்கள் 2015 சூனில் கைது செய்யப்பட்டு தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். மாணவர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதாக சரோயன்சிரி மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். [1] மாணவர் கைது செய்யப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ உத்தரவுக்கு இணங்க மறுத்ததாகவும், ஆதாரங்களை மறைத்ததாகவும் சரோயன்சிரி குற்றம் சாட்டப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது இவரது வாடிக்கையாளர்களின் கைபேசி எண்களைப் பெற்றதும், அவற்றை அவரது காரில் பாதுகாத்ததும் குற்றச்சாட்டுகள் ஆகும். [2] அடுத்த நாள், தனது தேடலை முடிக்க தனது காரை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததற்காக இவர் காவல்துறைக்கு எதிராக புகார் அளித்தார். [3] இந்த உரிமைகோரலின் விளைவாக காவல்துறைக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சரோயன்சிரி மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. [4] [5]
ஜெனீவாவில் நடைபெற்ற 33வது பொது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், சக சதி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு சரோயன்சிரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. [6] [7] சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கூக்குரலைத் தாண்டி, ஒரு வழக்கறிஞருக்கு இராணுவ ஆட்சிக்குழுவால் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். [8] [9]
கௌரவங்கள்
[தொகு]2017 மே 19 அன்று சிரிகன் சரோயன்சிரி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நான்காவது எல் 4 எல் விருதைப் பெற்றார். இந்த விருதை கொலம்பியாவைச் சேர்ந்த ஆண் வழக்கறிஞர் ஜார்ஜ் மோலானோ 2015ஆம் ஆண்டில் வென்றிருந்தார். ஒரு பெண் இந்த விருதை வென்றது இதுவே முதல் முறையாகும். [10]
குறிப்புகள்
[தொகு]- ↑ Fernquest, Jon (30 June 2015). "Student protests: UN, EU slam charges against students". Bangkok Post (Bangkok, Thailand). http://www.bangkokpost.com/learning/learning-news/608368/student-protests-un-eu-slam-charges-against-students. பார்த்த நாள்: 11 December 2016.
- ↑ Chanwanpen, Kasamakorn (20 March 2016). "Young Lawyer Sirikan Charoensiri Finds Herself Being Prosecuted After Representing the New Democracy Movement". The Sunday Nation (Bangkok, Thailand) இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220093147/http://www.pressreader.com/@Su_Wilkinson.1/8v7GuSxheZax0MufURFEJANY3gr_3_nDvR1wa01v_Ng1. பார்த்த நாள்: 11 December 2016.
- ↑ "Human rights lawyer accused of defying police order | Prachatai English". Prachatai (Bangkok, Thailand). 2 February 2016. http://prachatai.org/english/node/5822. பார்த்த நாள்: 2016-12-08.
- ↑ "Police press charges against human rights lawyer for defying their orders | Prachatai English". Prachatai (Bangkok, Thailand). 13 May 2016. http://prachatai.org/english/node/6160. பார்த்த நாள்: 2016-12-08.
- ↑ "ทนายความศูนย์ทนายความเพื่อสิทธิมนุษยชน รับทราบข้อกล่าวหาโดยเจ้าหน้าที่ตำรวจ". Washington, D. C.. 13 May 2016. http://www.benarnews.org/thai/news/TH-lawsuit-05132016191200.html. பார்த்த நாள்: 11 December 2016.
- ↑ "Embattled human rights lawyer accused of sedition | Prachatai English". Prachatai (Bangkok, Thailand). 28 September 2016 இம் மூலத்தில் இருந்து 11 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161211194131/http://prachatai.org/english/node/6601.
- ↑ "Human rights lawyer charged with sedition". The Sunday Nation (Bangkok, Thailand). 23 October 2016 இம் மூலத்தில் இருந்து 11 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161211195831/http://www.nationmultimedia.com/news/national/30298197.
- ↑ "Drop sedition charge". Arab Times (Al Shuwaikh, Al Asimah, Kuwait). 25 October 2016 இம் மூலத்தில் இருந்து 11 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161211200207/http://www.arabtimesonline.com/wp-content/uploads/pdf/2016/oct/25/ATKWT20161025.pdf.
- ↑ "Amnesty campaigns against unfair trial of Thai human rights lawyer". The Nation (Bangkok, Thailand). 15 November 2016 இம் மூலத்தில் இருந்து 16 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161116144225/http://www.nationmultimedia.com/news/breakingnews/30300064.
- ↑ ‘The Voice of Rights’, about lawyers and freedom of expression