உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்பிச் செவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளூரோபிரான்சியா மெக்லாய் விலங்கின் வலது பக்கத்தில் சிப்பிச் செவுள்

சிப்பிச் செவுள் (Ctenidium)(டினிடியம்) என்பது சுவாச உறுப்பு அல்லது செவுள் ஆகும். "சிறிய சீப்பு" என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான ktenidion என்பதிலிருந்து பெறப்பட்டது. இது பல மெல்லுடலிகளில் காணப்படுகிறது. இந்த அமைப்பு ஈரோட்டுடலிகள், தலைக்காலிகள், பாலிபிளகோபோரான்கள் (கைட்டான்கள்) மற்றும் நன்னீர் நத்தைகள் மற்றும் கடல் நத்தைகள் போன்ற நீர்வாழ் வயிற்றுக்காலிகளில் காணப்படுகிறது.[1] சில நீர்வாழ் வயிற்றுக்காலிகளில் ஒற்றைச் சீப்பு வரிசையில் அமைந்துள்ளது. மற்றவற்றில் இணையாகக் காணப்படும்.

ஒரு சிப்பிச் செவுள் சீப்பு அல்லது இறகு போன்ற வடிவத்தில் உள்ளது. இதன் மையப் பகுதி பல இழைகள் அல்லது தட்டு போன்ற கட்டமைப்புகள் நீண்டு, வரிசையாக இருக்கும். இது மென்மூடிக்குழி தொங்கி காணப்படும். இது வாயு பரிமாற்றத்திற்கான பகுதியை அதிகரிக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruppert Invertebrate Zoology: A Functional Evolutionary Approach.
  2. Respiratory system பரணிடப்பட்டது 2020-08-09 at the வந்தவழி இயந்திரம் The apple snail. Retrieved 2012-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பிச்_செவுள்&oldid=3817390" இலிருந்து மீள்விக்கப்பட்டது