உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்துபாத் (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்துபாத்
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புடி. எம். ஜெயமுருகன்
எம். அப்பு
கதைபாலு ஆனந்த்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. அகமது
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்மனிதன் சினி ஆட்சு
வெளியீடுசெப்டம்பர் 15, 1995 (1995-09-15)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்துபாத் (Sindhu Bath) பாலு ஆனந்த் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மன்சூர் அலி கான்,[1] கஸ்தூரி, சங்கவி, ஆர். சுந்தர்ராஜன், செந்தில், கோவை சரளா, ஜெய்கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. எம். ஜெயமுருகன் மற்றும் எம். அப்பு தயாரிப்பில், தேவா இசையில், 15 செப்டம்பர் 1995 ஆம் தேதி வெளியானது.[2]

நடிகர்கள்

[தொகு]

மன்சூர் அலி கான், கஸ்தூரி, சங்கவி, ராஜன் பி. தேவ், ஆர். சுந்தர்ராஜன், செந்தில், கோவை சரளா, ஜெய்கணேஷ், ரா. சங்கரன், கிருஷ்ணமூர்த்தி, எம். சி. நடராஜன், பி. அசோக்ராஜன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, கர்ணன், ராதா ராணி.

கதைச்சுருக்கம்

[தொகு]

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும் மயில்சாமி (மன்சூர் அலி கான்) வங்கி கொள்ளை ஒன்றில் மாட்டிக்கொள்கிறான். கொள்ளையன் முத்துவை, போலீசில் பிடித்துக் கொடுக்கிறான் மயில்சாமி. ஒரு நல்ல காரியத்திற்காக தான் திருடியதாக சொல்லும் முத்துவுடன் சேர்ந்து மயில்சாமியும் காவல் நிலையத்திலேயே பணத்தை விட்டுவிட்டு தப்பி ஓடுகிறான்.

முத்துவின் முதலாளி வீட்டில் மயில்சாமி தங்க அனுமதி கிடைத்தது. தன் முதலாளியின் மகள் ஷோபனாவின் (கஸ்தூரி) திருமணத்திற்காத தான் திருடியதாக கூறுகிறான் முத்து. சாரங்கன் தான் ஷோபனாவின் தந்தை என்று மயில்சாமிக்கு தெரியவந்தது.

கடந்த காலத்தில், ஏழை வளையல் வியாபாரியாக இருக்கும் மயில்சாமி, கண்ணாத்தாவை (சங்கவி) திருமணம் செய்கொள்ள, கோவில் நகையை திருடச் சொன்னார் சாரங்கன். மயில்சாமியும் நகையை கொண்டுவந்து கொடுக்க, தன் வாக்கை மீறி தப்பிவிடுகிறார் சாரங்கன். பின்னர், கண்ணாத்தா தற்கொலை செய்கொள்ள, திருடிய குற்றத்திற்காக பிடிபடுகிறான் மயில்சாமி.

தன்னை கடந்த காலத்தில் ஏமாற்றிய சாரங்கனை பழிவாங்க உறுதியாக இருந்தான் மயில்சாமி. மயில்சாமியின் எண்ணம் நிறைவேறியதா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

[தொகு]

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். வைரமுத்து மற்றும் டி. எம். ஜெயமுருகன் எழுதிய பாடல்கள் 1995 ஆம் ஆண்டு வெளியானது.[3]

பாடல்களின் பட்டியல்

[தொகு]
  1. வா வா கன்னி தேனே
  2. ஜல் ஜல் வளையல்
  3. ஜன் ஜனக்கு
  4. சிந்துபாத் கோட்டையிலே
  5. வா வா கன்னி தேனே வானம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள்.!". Tamil360Newz. 19 August 2021. Archived from the original on 1 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.
  2. "சிந்துபாத் / Sindubath (1995)". Screen 4 Screen. Archived from the original on 1 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.
  3. "Sindhu Bath (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. September 5, 1995. Archived from the original on 1 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]