உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவகச்சேரி தேர்தல் தொகுதி (Chavakacheri Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி நகரையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் உள்ளடக்கியதாகும். மார்ச் 1960 இல் இத்தேர்தல் தொகுதியில் இருந்து கிளிநொச்சி நகரம் பிரிக்கப்பட்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியாகப் புதிய தொகுதி அமைக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் சாவகச்சேரி தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1947 வி. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1956
1952
1956 வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1977
1960 (மார்ச்)
1960 (சூலை)
1965
1970
1977 தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தராசு 11,813 85.51%
  சி. ஆர். தம்பையா ஐக்கிய தேசியக் கட்சி வீடு 2,002 14.49%
தகுதியான வாக்குகள் 13,815 100.00%
நிராகரிக்கப்பட்டவை 186
மொத்த வாக்குகள் 14,001
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,377
வீதம் 49.34%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தராசு 14,801 72.33%
  அருணாசலம் நமசிவாயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] சைக்கிள் 5,663 27.67%
தகுதியான வாக்குகள் 20,464 100.00%
நிராகரிக்கப்பட்டவை 168
மொத்த வாக்குகள் 20,632
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,692
வீதம் 67.22%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] வீடு 15,952 64.77%
வி. குமாரசுவாமி தராசு 8,677 35.23%
தகுதியான வாக்குகள் 24,629 100.00%
நிராகரிக்கப்பட்டவை 206
மொத்த வாக்குகள் 24,835
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,922
வீதம் 66.14%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] வீடு 13,907 65.26%
  வி. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 6,930 32.52%
  ஏ. எஸ். கனகரத்தினம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 473 2.22%
தகுதியான வாக்குகள் 21,310 100.00%
நிராகரிக்கப்பட்டவை 173
மொத்த வாக்குகள் 21,483
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,822
வீதம் 83.20%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] வீடு 14,799 86.00%
  எஸ். கே. திரவியநாயகம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 2,410 14.00%
தகுதியான வாக்குகள் 17,209 100.00%
நிராகரிக்கப்பட்டவை 135
மொத்த வாக்குகள் 17,344
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,822
வீதம் 67.17%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] வீடு 16,316 69.41%
  எம். சிவானந்தன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 7,191 30.59%
தகுதியான வாக்குகள் 23,507 100.00%
நிராகரிக்கப்பட்டவை 220
மொத்த வாக்குகள் 23,727
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,452
வீதம் 77.92%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] வீடு 15,473 54.49%
  வி. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 12,921 45.51%
தகுதியான வாக்குகள் 28,394 100.00%
நிராகரிக்கப்பட்டவை 84
மொத்த வாக்குகள் 28,478
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 33,072
வீதம் 86.11%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வ. ந. நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 20,028 63.27%
வி. குமாரசுவாமி சுயேட்சை தராசு 10,810 34.15%
எஸ். பி. மயில்வாகனம் கண் 419 1.32%
கந்தையா ஆசை ஜெரோமி சுயேட்சை Omnibus 289 0.91%
சதாசிவம் நடராஜா விளக்கு 111 0.35%
தகுதியான வாக்குகள் 31,657 100.00%
நிராகரிக்கப்பட்டவை 91
மொத்த வாக்குகள் 31,748
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 36,959
வீதம் 85.90%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வ. ந. நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[11].

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  5. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  6. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
  11. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.