உள்ளடக்கத்துக்குச் செல்

சாராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா'ஸ்
இயக்கம்ஜூட் அந்தானி ஜோசப்
தயாரிப்பு
  • பி. கே. முரளி தரன்
  • சந்தா முரளி
கதைஅக்‌ஷய் ஹரீஷ்
இசைஷான் ரஹ்மான்
நடிப்பு
  • அண்ணா பென்
  • சன்னி வெய்ன்
ஒளிப்பதிவுநிமிஷ் ரவி
படத்தொகுப்புரியாஸ் கே. பத்தர்
கலையகம்ஆனந்தா விசன்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ[1]
வெளியீடுசூலை 5, 2021 (2021-07-05)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

சாரா'ஸ் (Sara's) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அக்‌ஷய் ஹரீஷ் எழுத, ஜூட் அந்தானி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் சன்னி வெய்ன் மற்றும் அண்ணா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [2] இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரியாஸ் கே. பத்தர் படத்தொகுப்பை செய்துள்ளார். இப் படமானது 2021 சூலை 5 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது [3] [4]

கதைச்சுருக்கம்

[தொகு]

20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணான சாரா வின்சென்ட், கர்ப்பம் தரிப்பது, குழந்தைப்பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் ஒரு பெண். திரையுலகில் இணை இயக்குநராக பணிபுரியும் இவளது மிகப்பெரிய கனவு ஒரு சார்பிலா இயக்குனராக வேண்டும் என்பதுதான். இவள் தனது 30 களின் முற்பகுதியில் ஜீவன் பிலிப்பை என்ற தன்னை ஒத்த சிந்தனையுடைய ஒரு இளைஞனை மணக்கிறாள். அவனும் குழந்தைப் பேறு குறித்த இவளது பார்வைக்கு ஏற்றவனாக இருக்கிறான். இந்நிலையில் ஒரு விபத்துபோல திட்டமிடாதக் கருவுருவை சாரா எதிர்கொள்கிறாள். குழந்தைப் பேறில் ஆர்வமற்ற ஜீவன் தன் முடிவில் இருந்து மாறுகிறான். தன்கனவுகள் கலைந்துவிடக்கூடும் எனக் குழந்தைப்பேற்றைத் தவிர்ப்பதில் சாரா உறுதி காட்டுகிறாள். குழந்தையா லட்சியமா என்ற ஊசலாட்டத்தில் சாரா என்ன முடிவு எடுக்கிறாள் என்பதே கதையின் முடிவு.

நடிகர்கள்

[தொகு]
  • சாரா வின்சென்டாக அண்ணா பென்
  • சாராவின் கணவர் ஜீவன் பிலிப்பாக சன்னி வேய்ன்
  • சாராவின் தந்தை வின்சென்டாக பென்னி பி. நயரம்பலம்
  • ஜீவனின் தாயார் ரீத்தாமா பிலிப்பாக மல்லிகா சுகுமாரன்
  • தயாரிப்பாளர் சந்தீப்பாக பிரசாந்த் நாயர் ஐ. ஏ. எஸ்
  • சாராவின் வகுப்பு தோழியாக ஸ்ரீலட்சுமி ஹரிதாஸ்
  • ஜீவனின் சகோதரியாக டாக்டர் சந்தியா பிலிப்பாக தன்யா வர்மா
  • டாக்டர் ஹபீஸாக சித்திக்
  • நடிகர் திவாகரனாக விஜயகுமார்
  • ஹரிகிருஷ்ணன் (ஜீவனின் சக) அர்ஜுன்
  • லிஸ்ஸியாக ஸ்ரீந்தா (4 குழந்தைகளின் தாய்)
  • தயாரிப்பாளராக ஜிபு ஜேக்கப்
  • தயாரிப்பாளராக கோட்டயம் பிரதீப்
  • மோலியாக துஷாரா
  • காயத்ரியாக மார்கரீத்
  • இஷாவாக விருத்தி விஷால்
  • நடிகர் ராகுலாக சிஜு வில்சன்
  • சாராவின் பள்ளி அன்பாக அல்தாஃப் மனாஃப்
  • லிசியின் கணவராக அஜூ வர்கீஸ் (கேமியோ தோற்றம்)
  • ஷான் ரஹ்மான் தன்னைப் போலவே (கேமியோ தோற்றம்)
  • வினீத் ஸ்ரீனிவாசன் தன்னைப் போலவே (கேமியோ தோற்றம்)

வெளியீடு

[தொகு]

சாரா'ஸ் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 சூலை 5 அன்று வெளியானது [5] [6]

குறிப்புகள்

[தொகு]

 

  1. "Sunny Wayne and Anna Ben's next film Sara's to stream on OTT". The News Minute. 25 June 2021. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  2. Shilpa Nair Anand (30 June 2021). "Anna Ben on how she became Sara in Jude Anthany Joseph's 'Sara's'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 June 2021.
  3. "Sara's movie review: Anna Ben's film is a relevant tale about woman's right over her body and to give birth". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  4. Sara's Review: An ode to women, child-free by choice!, பார்க்கப்பட்ட நாள் 2021-07-05
  5. ChennaiJuly 1, Janani K.; July 1, 2021UPDATED; Ist, 2021 17:15. "Anna Ben and Sunny Wayne's Sara's to release on Amazon Prime Video on July 5". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06. {{cite web}}: |first3= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  6. Jha, Lata (2021-07-02). "Amazon Prime Video to premiere Malayalam film 'Sara's on 5 July". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாராஸ்&oldid=3841084" இலிருந்து மீள்விக்கப்பட்டது