உள்ளடக்கத்துக்குச் செல்

சாரண மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரண மாவட்டம் (Scout district) என்பது சில சாரணர், பெண் வழிகாட்டிகள் இயக்க நிறுவனங்களுக்குள் உள்ள நிர்வாகப் பிரிவாகும்.

ஒரு மாவட்டத்தின் துல்லியமான உறவும் அமைப்பும் நாட்டிற்கு நாடு மாறுபடும் என்றாலும், உள்ளூர் சாரணர்களுக்கும் வழிகாட்டி குழுக்களுக்குத் திட்டங்களையும் ஆதரவையும் வழங்குவது சாரண மாவட்டங்களின் பொறுப்பாகும்.

ஐக்கிய இராச்சியம்

[தொகு]

சாரணர் சங்கம்

[தொகு]

சாரணர் சங்கம் தற்போது ஐக்கிய இராச்சியம் முழுவதும் 895 சாரண மாவட்டங்களைக் கொண்டுள்ளது.[1] ஒவ்வொரு மாவட்டமும் அதன் உறுப்பினர் சாரணர் குழுக்களுக்கான திட்டத்தையும் ஆதரவையும் வழங்குவதற்குப் பொறுப்பாகும்.

அமைப்பு

[தொகு]

ஒவ்வொரு சாரண மாவட்டங்களில் சராசரியாக 10 சாரணர் குழுக்கள் உள்ளன, அவை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு சாரணியம் தொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன.

ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட ஆணையரால் (DC) வழிநடத்தப்படுகிறது, அவர் உதவி மாவட்ட ஆணையர்கள் (ADCs) குழுவை நியமிக்க முடியும். வெவ்வேறு சாரணர் குழுக்களில் உள்ள பிரிவுகளுக்கு இடையே ஆதரவு மற்றும் தொடர்பை வழங்குவதற்காக குருளையர், சாரணர் பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ADC நியமிக்கப்படுகிறார். தேவை ஏற்படின் மாவட்ட ஆணையரால் மற்ற பதவிகளையும் உருவாக்க முடியும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Scouting in the United Kingdom" (PDF). The Scout Association. Archived from the original (PDF) on 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2006-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரண_மாவட்டம்&oldid=4108078" இலிருந்து மீள்விக்கப்பட்டது