உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல் வால் டாட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் வால் டாட்லர்
Grey-tailed tattler
Breeding plumage
Non-breeding plumage
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
T. brevipes
இருசொற் பெயரீடு
Tringa brevipes
(Vieillot, 1816)
வேறு பெயர்கள் [2]

Heteroscelus brevipes
Heterosceles brevipes
Heteractitis brevipes

சாம்பல் வால் டாட்லர் அல்லது பாலினேசியன் டாட்லர் (grey-tailed tattler அல்லது Polynesian tattler, Tringa brevipes (முன்னர் Heteroscelus brevipes[3][4]) என்பது டிரிங்கா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறு கரையோரப் பறவை ஆகும். இதன் ஆங்கிலப் பெயரான டாட்லர்ஸ் (tattlers) என்பது அதன் சத்தமான அழைப்பைக் குறிக்கிறது.[5] இதன் மரபணுப் பெயரான டிரிங்கா (Tringa) என்பது புதிய லத்தீனில் ஆற்று உள்ளானைக் குறிப்பிட ஆல்ட்ரோடோட்லியால் 1599 பழைய லத்தீனை அடிப்படையாக்க் கொண்டு இடப்பட்டது. பிரிவிபிஸ் (brevipes) என்ற சொல் லத்தீனின் brevis என்ற சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது இதற்கு "குறுகிய", மற்றும் பாதம், "கால்" என்பது பொருளாகும்.[6]

இந்த டாட்லர் பறவைகள் வடகிழக்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இனப்பெருக்கத்துக்குப் பிறகு, தென்கிழக்கு ஆசியா முதல் ஆத்திரேலியாவரை இடம் பெயர்கின்றன. இப்பறவை இதுவரை இந்தியாவில் தென்பட்டதில்லை இந்நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டின், பழவேற்காட்டில் 2017 செப்டம்பர் 30 காணப்பட்டதாக அடையாளம் கணப்பட்டுள்ளது.[7]

விளக்கம்

[தொகு]

இவை நீளமான இறகுகள், வால், கறுப்பு நிறத்தில் நேரான அலகு, மஞ்சள் நிறக் குட்டைக் கால்களைக் கொண்டு இருக்கும் இந்தப் பறவைகள், கடல் பகுதிகளில் தென்படக் கூடியது. கணுக்காலிகள், பூச்சிகள், மீன்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tringa brevipes". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2014. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Tringa brevipes on Avibase
  3. Banks, Richard C.; Cicero, Carla; Dunn, Jon L.; Kratter, Andrew W.; Rasmussen, Pamela C.; Remsen, J. V. Jr.; Rising, James D. & Stotz, Douglas F. (2006): Forty-seventh Supplement to the American Ornithologists' Union Check-list of North American Birds பரணிடப்பட்டது 2006-07-14 at the வந்தவழி இயந்திரம். Auk 123(3): 926–936. DOI: 10.1642/0004-8038(2006)123[926:FSTTAO]2.0.CO;2
  4. Pereira, Sérgio Luiz & Baker, Alan J. (2005): Multiple Gene Evidence for Parallel Evolution and Retention of Ancestral Morphological States in the Shanks (Charadriiformes: Scolopacidae). Condor 107(3): 514–526. DOI: 10.1650/0010-5422(2005)107[0514:MGEFPE]2.0.CO;2
  5. "Tattler". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)(Subscription or UK public library membership பரணிடப்பட்டது 2016-02-04 at the வந்தவழி இயந்திரம் required.)
  6. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 77, 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  7. ந. வினோத் குமார் (6 அக்டோபர் 2017). "சென்னைக்கு வந்த சைபீரியப் பறவை!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_வால்_டாட்லர்&oldid=3765450" இலிருந்து மீள்விக்கப்பட்டது