சந்திர மோகன் (தெலுங்கு நடிகர்)
ம. சந்திர மோகன் | |
---|---|
நடிகர் சந்திர மோகன் | |
பிறப்பு | மல்லம்பள்ளி சந்திரசேகர ராவ் 23 மே 1941 பம்மிடிமுக்கலா, கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 நவம்பர் 2023[1] | (அகவை 82)
பணி | நடிகர் |
சந்திர மோகன் (Chandra Mohan) (23 மே 1941 – 11 நவம்பர் 2023) (மல்லம்பள்ளி சந்திரசேகர ராவ்) ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களிலும், ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்ததற்காக பெயர் பெற்றவர். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் ஏழு நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.[2] ரங்குலா ரத்னம் போன்ற வெற்றிகளில் நடித்ததற்கு விமர்சன வரவேற்பைப் பெற்றார். பதகாரெல்லா வயசு (1978) படத்திற்காக நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து சிறந்த நடிகருக்கான மாநில நந்தி விருதைப் பெற்றார். சிரி சிரி முவ்வா (1978) படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார். இவரது முதல் தமிழ் படம் நாளை நமதே (1975). சீதம்மலட்சுமி, இராதா கல்யாணம், ரெண்டு ரேல்ல ஆரு, சந்தம்மா ராவே இராம் ராபர்ட் ரகீம் போன்றவை முன்னணி நடிகராக நடித்ததில் சில. [3] [4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 1945 அல்லது 1946 இல் [5] ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள பம்மிடிமுக்கலாவில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். மேதூருவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் பாபட்லா வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவருக்கு சின்னய்யா என்ற சகோதரரும், சத்தியவதி என்ற மூத்த சகோதரியும் உள்ளனர். இவர் மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கே. விஸ்வநாத்த்தின் உறவினர்.
ஆரம்ப கால வாழ்க்கையில்
[தொகு]சந்திர மோகன் 1966 ஆம் ஆண்டில் ரங்குலா ரத்னம் திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். 1968ஆம் ஆண்டில், வாணிஸ்ரீயுடன் ஒரு அக்கறையுள்ள சகோதரனாக நடித்த சுக துக்காலு என்றப் படத்தில் நடித்தற்காக இவர் விருதுகளைப் பெற்றார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veteran Telugu Actor Chandra Mohan Breathed His Last!". https://www.vcinema.com/news-article/veteran-telugu-actor-chandra-mohan-breathed-his-last?feedtab=.
- ↑ "My First Break: Chandra Mohan". The Hindu. Archived from the original on 28 August 2011.
- ↑ "Chandramohan really worth Rs 300 Cr?". The Times of India. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
- ↑ "Old Heroine's Lucky Hero - AP Chit-Chat". AP Chit-Chat. Archived from the original on 22 October 2014.
- ↑ "My First Break: Chandra Mohan". The Hindu. Archived from the original on 28 August 2011."My First Break: Chandra Mohan". The Hindu. Archived from the original on 28 August 2011.
- ↑ "Chandramohan really worth Rs 300 Cr?". The Times of India. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014."Chandramohan really worth Rs 300 Cr?". The Times of India. Archived from the original on 15 October 2014. Retrieved 16 October 2014.
- ↑ "Old Heroine's Lucky Hero - AP Chit-Chat". AP Chit-Chat. Archived from the original on 22 October 2014."Old Heroine's Lucky Hero - AP Chit-Chat". AP Chit-Chat. Archived from the original on 22 October 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]