உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தகா யானை சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தகா யானை சரணாலயம் (Chandaka Elephant Sanctuary) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக்கின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு இருப்பு ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயிரியல் பிராந்தியத்தின் குர்தா மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சந்தகா காடு 175.79 (67.87 சதுரமைல்) பரப்பளவைக் கொண்ட பீடபூமியாகும். கோர்தா மற்றும் கட்டாக் மாவட்டங்களின் சிறிய பரந்த குன்றுகளாகும். இது டிசம்பர் 1982 இல் யானை காப்பகமாக நியமிக்கப்பட்டது.

தாவரங்கள்

[தொகு]

இதன் தாவர பன்முகத்தன்மை ஆறு வகைகளில் விநியோகிக்கப்படுகிறது. அதாவது, இரண்டாம் நிலை ஈரமான இதர அரை பசுமையான காடுகள், ஈரமான இருவேல்காடுகள், கடலோர குங்கிலியக் காடுகள், மூங்கிலரிசி, நடப்பட்ட தேக்கு, எட்டிமரம், சால், புங்கை, தேக்கு மற்றும் சித்தா ஆகியவை முக்கிய மர இனங்கள் குறைவான வளர்ச்சி விநியோகத்தைக் கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தின் பொதுவான மருத்துவ தாவரங்கள் பூனைக்காலி,சீந்தில், ஒரு சில வகை ஆர்க்கிட், பாசிகள், பிரையோபைற்றுகள் மற்றும் இலைகன்கள் போன்றவைகளும் காணப்படுகின்றன..

விலங்குகள்

[தொகு]
சந்தகா தம்பாரா காட்டுக்குள் யானைகள்
தெராசு அணை, இருப்புக்குள் அமைந்துள்ளது

இந்திய யானைகள் இங்கு வாழும் முதன்மையான இனங்களாகும். இது வாழ்விடத்தின் உற்பத்தித்திறனைக் குறிக்கிறது. [1] [2] சிறுத்தை உயிரியல் பிரமிட்டின் உச்சியில் உள்ளது. புள்ளிமான், கேளையாடு, சருகுமான், காட்டுப்பன்றி, பொதுவான குரங்கு, செம்முகக் குரங்கு, சிறிய இந்திய சிவெட், பொதுவான இந்திய முங்கூஸ், சிறிய இந்திய முங்கூஸ், முரட்டுத்தனமான முங்கூஸ், எறும்புண்ணிகள், தேன் கரடி, தேன் வளைக்கரடி, இந்திய ஓநாய் மற்றும் கழுதைப்புலி ஆகியவை இப்பகுதியின் பிற பாலூட்டிகளாகும். வன சாலைகள், வன திறப்புகள், புல் நிலங்கள், நீர்நிலைகளின் முன்கூட்டியே மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் கூட 3-7 குழுக்களாக புள்ளிமானகள் காணப்படுகிறது. காட்டு நாய்கள் அவ்வப்போது காணப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆராய்ச்சியாளர்கள் காட்டில் ஒரு புலி மற்றும் அவற்றின் குட்டியின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்; 2012 குளிர்காலத்தில், அவர்கள் அந்த இரண்டின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

சரணாலயத்தின் முக்கிய பறவைகளாக மயில், சிவப்பு காட்டுக்கோழி, கொண்டை பாம்புண்ணிக் கழுகு, பெரிய கொம்பு ஆந்தை, கருந்தலை மாங்குயில், கூகல் மற்றும் கல் சுருன்டு போன்றவையாகும். குமர்குண்டி நீர்த்தேக்கம், குளிர்காலத்தில், பல புலம்பெயர்ந்த வாத்து இனங்களுக்கு ஒரு இடைக்கால வேட்டையாடும் மற்றும் உணவளிக்கும் களமாக செயல்படுகிறது. குறிப்பாக நீலச்சிறகி மற்றும் கிளுவை, பின்டெயில், புள்ளி மூக்கு வாத்து மற்றும் சிவப்புத்தாரா வாத்து மற்றும் வெள்ளைக்கண் வாத்து, சிறிய சீழ்க்கை சிரவி, சிறு முக்குளிப்பான், குள்ளத் தாரா, நீர்க்காகம், கம்புள் கோழி, சிறிய நீல மீன்கொத்திகள் போன்றவை மற்ற குடியுரிமை பறவைகளாகும். சூலை மாதத்தில் நீர்த்தேக்கம் புலம்பெயர்ந்த பறவைகளின் தங்குமிடமாக மாறுகிறது. முக்கியமாக திறந்த வாய் நாரைகள், குளத்துக் கொக்கு, வெள்ளைக் கொக்கு மற்றும் நீர்க்காகங்கள். பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய மாதங்களில் பட்டாம்பூச்சிகள் ஏராளமாக வருகை புரிகின்றன.

ஊர்வனவற்றில், இந்திய மலைப்பாம்பு மற்றும் வங்காள உடும்பு போன்றவை இங்கு மிகவும் பொதுவானவை. பச்சோந்தி, அரணை, ஆமை, கண்ணாடி விரியன், புல்விரியன், கட்டு விரியன், கண்குத்தி பாம்பு, திருவாங்கூர் குக்குரி பாம்பு ஆகியவை ஊர்வனவற்றைக் குறிக்கின்றன. சதுப்புநில முதலைகள் இங்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பெரிய நீர்நிலைகளுக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க வகையில் இந்த இடத்தை தழுவிக்கொண்டன.

இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (2002 இல்) இந்த சரணாலயத்தில் 37 வகையான பாலூட்டிகள், 167 வகையான பறவைகள், 33 வகையான ஊர்வன, 13 வகையான நீர்நில வாழ்வன மற்றும் 28 வகையான மீன்களைப் பதிவு செய்தது. [3]

பார்வை கோபுரங்கள்

[தொகு]

பார்வையாளர்களுக்கு வனவிலங்குகளைக் கண்காணிக்க ஏராளமான கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. பறவைகள் மற்றும் விலங்குகளை கவனிப்பதற்கு கொச்சிலாபெரானா, பிடகாடியா மற்றும் சாரிச்சக் கண்காணிப்புக் கோபுரங்கள் சிறந்தவை என்றாலும், குமர்குண்டி மற்றும் அம்பிலோவில் உள்ளவை ஓய்வு இல்லங்களின் வசதியைக் கொண்டுள்ளன. அங்கு ஒரு இரவு தங்க முடியும்.

இங்கு இரு நீர் தேக்கங்கள் உள்ளன. தேராசு அணை மற்றும் ஜும்கா அணை, இந்த இருப்புக்குள் அமைந்துள்ளது. தேராசுக்கு அருகிலுள்ள குடிசைகள் சந்தகா இருப்புநிலையின் அழகிய காட்சியையும், வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

காட்சிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தகா_யானை_சரணாலயம்&oldid=3781544" இலிருந்து மீள்விக்கப்பட்டது