சங்கற்ப நிராகரணம்
Appearance
சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட ஒரு நூலாகும். இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச் சமயத் தத்துவங்களை மறுத்து எழுதப்பட்டது.
- ஈசுவர அவிகார வாதம்
- ஐக்கிய வாதம்
- சங்கிராந்த வாதம்
- சிவசம வாதம்
- சைவ வாதம்
- நிமித்தகாரண பரிணாம வாதம்
- பாடாண வாதம்
- பேத வாதம்
- மாயா வாதம்
என்னும் ஒன்பது சமயவாதங்கள் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது.[1]
- சிவசங்கிராந்த வாதம்
- சிவாத்துவித வாதம்
என்னும் இரண்டு சமயவாதங்களும் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது.[2][தெளிவுபடுத்துக]
நூல்
[தொகு]இந்த நூல் 474 குறள் வெண்பாக்களால் ஆனது.
- ஆதுலர்க்கு(நோயாளிகளுக்கு)ச் சாலை அமைத்து அன்பால் மருந்தளித்தல்
- ஆரியமும் செந்தமிழும் ஆராய்தல்
- திருப்பணி செய்தல்
- பொருள் வழங்குதல்
முதலான அறங்கள் இந் நூலில் போற்றப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டுக்கு நூலிலுள்ள ஒரு குறள்
[தொகு]கொண்டல்போ லுங்கரத்தான் என்றால் கொடைஎணுவர்
கொண்டலுரு கையிற் கொளார்.
- 'கொண்டல் போலும் கரத்தான்' என்றால் கொண்டல் என்னும் மேகத்தின் உருவம் அவன் கையில் இல்லை. கொண்டல் போல் கைம்மாறு கருதாமல் வழங்கும் கொடை அவன் எண்ணத்தில் உள்ளது. - என்பது இந்தப் பாடலின் பொருள். எண்ணம் என்னும் சித்தத்தின் முடிவுதான் சித்தாந்தம் என்பதை வலியுறுத்தும் பாடல் இது. சாக்கியர் கல் எறிந்து அருள் பெற்றதை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.
நூலிலுள்ள மற்றொரு குறள்
[தொகு]நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை
என்றும் சிவன்தாள் இணை.
- நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்துக் கிடந்தாலும், நடந்துகொண்டிருந்தாலும் சிவனது திருவடிகளை நினைக்க வேண்டும் என்பது இதன் பொருள். நினைப்பதுதான் சித்தாந்தம் என்பது இதிலும் வலியுறுத்தப்படுவது காண்க.
உசாத்துணைகள்
[தொகு]- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
- உமாபதி சிவாச்சாரியார், சங்கற்ப நிராகரணம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005