கௌதம புத்தர்
கௌதம புத்தர் | |
---|---|
தன் முதல் சமயச் சொற்பொழிவை ஆற்றும் புத்தரின் சிலை, சாரநாத். குப்தர் காலம், அண். பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டு. சாரநாத் தொல்பொருளியல் அருங்காட்சியகம் (பி(பி) 181).[a] | |
சுய தரவுகள் | |
பிறப்பு | சித்தார்த்த கௌதமர் அண். பொ. ஊ. மு. 563 அல்லது பொ. ஊ. மு. 480 |
இறப்பு | அண். பொ. ஊ. மு. 483 அல்லது பொ. ஊ. மு. 400 (அகவை 80)[1][2][3][c] |
நினைவிடம் | எரியூட்டப்பட்டார்; நீறு இவரை பின்பற்றியவர்களுக்கு இடையே பிரித்துக் கொள்ளப்பட்டது |
மனைவி | யசோதரை |
குழந்தைகள் | |
பெற்றோர்கள் |
|
அறியப்படுதல் | புத்த மதத்தை தோற்றுவித்ததற்காக |
வேறு பெயர்(கள்) | கௌதம புத்தர் சாக்கியமுனி ("சாக்கியர்களின் முனிவர்") |
பதவிகள் | |
முன் இருந்தவர் | காசாப புத்தர் |
பின் வந்தவர் | மைத்திரேயர் |
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.[4]
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழி காட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
புத்தரின் வரலாறு
[தொகு]சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;
- ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
- ஒரு நோயாளி
- அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
- நாலாவதாக ஒரு முனிவன்
இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.
கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும்.
பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார்.
எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைத் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.
இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது "எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்.[5] புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர்.[6]
இறப்பு
[தொகு]கௌதம புத்தர் குசிநகரத்துக்குச் செல்லும் வழியில் பாவாவில் உள்ள மாந்தோப்புக்குச் சென்றபோது அவரது கடைசி உணவான ஸூகர மத்தவத்தை (பன்றி இறைச்சி) அவருக்குப் பிச்சையாக அளித்த ஸுந்த கம்மாரபுத்த ஒரு கம்மாளர் மகன் ஆவார் . ஸுந்தவின் பிச்சையை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, புத்தர் கொடிய ரத்த பேதியால் அவதிப்பட்டார் . உயர் புரத (இறைச்சி) உணவின் காரணமாக இந்த நிலை க்ளோஸ்ட்ரிடியல் நெக்ரோடைசிங் என்டரிடிஸாக இருந்திருக்கலாம். மாமிசம் தேரவாதத்தில் உயர் நிலையில் உள்ள பிக்குகளை மதிக்கும் அடையாளமாக பிச்சையாக வழங்கப்படுகிறது .
பரிநிர்வாணத்திற்குள் நுழைவதற்கு முன் , புத்தர் ஆனந்தரிடம் ஸுந்தவைப் பார்க்கச் சொன்னார். மேலும் அவரது உணவுக்கும் அவர் நோய்வாய்ப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதனால் எந்தப் பழியோ வருத்தமோ உணர வேண்டாம் என்றும் கூறினார்; மாறாக, ததாகதவுக்கு மரணம் அடையும் முன் அவரது கடைசி உணவை வழங்குவது, புத்தத்தை அடைவதற்கு முன் அவரது முதல் உணவை அவருக்கு வழங்குவதற்கு சமமான பலனைத் தந்தது , இதனால் அவர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கூறினார்.[1]
புத்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவச் சிற்பங்கள் |
|
பெயர் விளக்கம்
[தொகு]சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர்.
வரலாற்று ரீதியான சித்தார்த்த கௌதமர்
[தொகு]புத்தரின் வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து, பயிற்றுவித்து, மகாஜனபத சகாப்தத்தின் போது பிம்பிசாரரின் (அண். 558 – அண். 491 BCE, அல்லது அண். கி. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்கின்றனர்.[7][8][9] பிம்பிசாரர் மகத நாட்டின் ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். அஜாதசத்ரு பிம்பிசாரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவ்வாறாக சமண தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிந்தைய காலத்தில் புத்தர் வாழ்ந்தார்.[10][11] "பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை, கற்பித்தல், இறப்பு" ஆகியவற்றின் பொதுவான வரிசை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,[12] பாரம்பரிய சுயசரிதைகளில் உள்ள பல விவரங்களின் உண்மைத்தன்மை பற்றி குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது.[13][14]
கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483 வரை என்று வரையறுத்தனர்.[1][15] தற்போது சிறிது காலத்திற்கு முன்னர் இவரது இறப்பு பிந்தைய நாட்களில் கி. மு. 411 மற்றும் கி. மு. 400க்கு இடையில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது,[16][17][18] பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கி. மு. 400 க்கு 20 வருடங்கள் முன்னர் அல்லது பின்னர் ஆகிய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று அறுதியிட்டு கூறினர்.[1][19][note 1] எவ்வாறாயினும், இந்த மாற்று காலவரிசைகளை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.[24][25][note 2]
வரலாற்றுச் சூழல்
[தொகு]ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் சாக்ய இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் இருந்தது.[30] இவரது பொதுவான பெயர் "சகமுனி" அல்லது "சாக்யமுனி" ("சாக்கியர்களின் முனிவர்"). அது ஒரு சிறிய குடியரசு அல்லது தன்னல குழுவாக இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார்.[30] புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்துஎன்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா என கூறப்படுகிறது.
- வார்டர் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "புத்தர் […] சாக்ய குடியரசில் பிறந்தார். அது கபிலவஸ்துவின் நகர அரசு ஆகும். அது வட இந்திய எல்லைக்கு அப்பால் தற்கால நேபாள எல்லைக்குள் இருந்த ஒரு மிகச்சிறிய அரசு ஆகும்".[31]
- வால்ஷே என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "இமயமலைகளின் ஓரத்தில் வாழ்ந்த சாக்ய இனத்தை சேர்ந்தவர் புத்தர். இவரது உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் வட இந்திய எல்லைக்கு சில மைல்கள் வடக்கே அமைந்துள்ளது. இவரது தந்தை உண்மையில் அரசர் கிடையாது. மாறாக, இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். பிற்காலத்தில் இவரது தந்தை அரசர் என்று புனையப்பட்டது. அவரும் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தார். ஆனால் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தவர்கள் பகுதி அளவிற்கே அரசருக்கு ஒப்பானவர்கள் ஆவர். அந்த நேரத்தில் வட இந்தியாவில் இருந்த சில அரசுகள் ராச்சியங்களாகவும் மற்றவை குடியரசுகளாகவும் இருந்தன. சாக்ய குடியரசானது தெற்கே இருந்த கோசலை அரசின் சக்தி வாய்ந்த அரசருக்கு கட்டுப்பட்டு இருந்தது".[32]
- பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை.[33] அது வட இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள பிப்ரவா,[34][35][36] அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்டாக இருக்கலாம்.[37][38][33] இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன.[38]
புராணம் கலந்த வாழ்க்கை
[தொகு]பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்
[தொகு]பௌத்த மரபின் படி, கௌதமர் லும்பினியில் பிறந்தார்.[39][41] இந்த இடம் நவீன கால நேபாளத்தில் உள்ளது.[e] இவர் கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார்.[33][f] பண்டைக் கால கபிலவஸ்து அமைந்திருந்த சரியான தளமானது அறியப்படவில்லை.[43] தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள பிப்ரவா[34] அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்[38] ஆகியவற்றில் ஓர் இடமாக இது இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களுமே சாக்கியர்களின் நிலப்பரப்புக்குள் அமைந்திருந்தன. இவை இரண்டும் வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன.[38][b]
பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பேரரசர் அசோகர் லும்பினி தான் கௌதமர் பிறந்த இடம் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். அங்கு பின் வரும் கல்வெட்டை கொண்ட ஒரு தூணை நிறுவினார்: "இங்கு தான் சாக்கியர்களின் முனிவரான (சாக்கியமுனி) புத்தர் பிறந்தார்".[44]
மகாவஸ்து மற்றும் லலிதவிஸ்தாரா போன்ற பிந்தைய வாழ்க்கை வரலாற்று நூல்களின் படி, சுத்தோதனரின் மனைவியும், இவரது தாயுமான மாயா (மாயாதேவி) தேவதகாவைச் சேர்ந்த ஓர் இளவரசி ஆவார். தேவதகா என்பது கோலியர்களின் இராச்சியத்தின் பண்டைக் கால தலைநகரம் ஆகும். இது நேபாளத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, சித்தார்த்தர் தன் தாயின் வயிற்றில் கருவுற்ற இரவில் ஆறு வெள்ளை தந்தங்களை உடைய ஒரு வெள்ளை யானையானது தன் வலது பக்கத்தில் உட்புகுந்ததாக இராணி மாயா கனவு கண்டார்.[45][46] 10 மாதங்கள் கழித்து சித்தார்த்தர் பிறந்தார்.[47] சாக்கியர்களின் மரபின் படி இவரது தாய் இராணி மாயா இவரை தன் வயிற்றில் சுமந்த போது குழந்தை பிறப்புக்காக தனது தந்தையின் இராச்சியத்திற்கு சொல்வதற்காக கபிலவஸ்துவிற்கு சென்றார்.
பயணம் செல்லும் வழியில் லும்பினியில் ஒரு தோட்டத்தில் ஒரு குங்கிலிய மரத்தின் அடியில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதமர் (சமக்கிருதம்: கௌதமர்) என்று அழைக்கப்பட்ட ஒரு மேற்குடி சத்திரிய (பளி: கட்டியர்) குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. கௌதமர்கள் சாக்கியர்களின் ஒரு பிரிவினராக இருந்தனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் நவீன கால எல்லைக்கு அருகில் வாழ்ந்த அரிசி விவசாயிகளின் ஒரு பழங்குடியினமாக சாக்கியர்கள் திகழ்ந்தனர்.[48][42][49][g] இவரது தந்தை சுத்தோதனர் "சாக்கிய இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக" இருந்தார்.[31] இவரது தலை நகரம் கபிலவஸ்து ஆகும். புத்தரின் காலத்தின் போது விரிவடைந்து கொண்டிருந்த கோசல இராச்சியத்தால் கபிலவஸ்துவானது பிற்காலத்தில் இணைக்கப்பட்டது.
ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் இளம் வயது குறித்து மிகவும் சிறிய தகவல்களையே கொண்டுள்ளன.[51][52] பிந்தைய வாழ்க்கை வரலாறுகள் இளம் வயது கௌதம புத்தரின் வாழ்வில் ஓர் இளவரசராக மற்றும் இவர் சந்தித்த பிரச்சினைகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்டுள்ளன.[53] இசுவாகுவின் (பாளி: ஒக்ககம்) சூரிய குலத்தைச் சேர்ந்த ஒரு மரபு வழி முடியரசராக புத்தரின் தந்தை சுத்தோதனரை இவை குறிப்பிட்டன. இதை ஏற்றுக் கொள்ள சில வரலாற்றாளர்கள் மறுக்கின்றனர். சுத்தோதனர் வெறுமனே ஒரு சாக்கிய மேற்குடி சத்திரிய (பாளி: கட்டியர்) இனத்தை சேர்ந்தவர் என்கின்றனர். சாக்கிய குடியரசானது மரபு வழி முடியாட்சியாக இல்லை என்று பல அறிஞர்கள் எண்ணுகின்றனர்.[[[Wikipedia:Citing_sources|
புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற மற்றும் இறப்பு ஆகிய நாட்கள் தேரவாத பௌத்த நாடுகளில் வைசாகம் எனவும், இவர் தன் தாயின் வயிற்றில் உருவான நாளை போசோன் என்றும் பரவலாக கொண்டாடுகின்றன.[58] நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் புத்தரின் பிறந்த தினமானது புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பௌர்ணமி நாளில் புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது.
பிந்தைய வாழ்க்கை வரலாற்று புராணங்களின் படி, இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எதிர் காலத்தை கணித்து கூறும் துறவியான அசிதர் தன்னுடைய மலை வாழ்விடத்தில் இருந்து பயணித்து புத்தரைக் காண வந்தார். "ஒரு மகா மனிதனுக்குரிய 32 அறிகுறிகள்" குழந்தையிடம் உள்ளதா என்று ஆராய்ந்தார். பிறகு புத்தர் ஒரு மகா மன்னன் (சக்கரவர்த்தி) அல்லது ஒரு மகா சமயத் தலைவர் ஆகிய இருவரில் ஒருவராக ஆவார் என்று கூறினார்.[59][60] புத்தர் பிறந்த 5ஆம் நாளில் ஒரு பெயர் சூட்டும் விழாவிற்கு சுத்தோதனர் ஏற்பாடு செய்தார். புத்தரின் எதிர் காலத்தை கணித்து கூறுவதற்காக எட்டு பிராமண அறிஞர்களை வருமாறு வேண்டினார். அனைவரும் இதே போன்ற கணிப்பை கூறினர்.[59] இதில் மிகவும் இளையவரான கௌந்தேயன் என்பவர் மட்டுமே தீர்க்கமாக சித்தார்த்தர் ஒரு புத்தராக மாறுவார் என்று கணித்து கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரைத் தவிர்த்த முதல் அருகதராகவும் கௌந்தேயன் உருவானார்.[61]
தன்னுடைய சமய தேடலுக்காக வெளியேறும் வரையில் தன் காலத்தில் இருந்த ஆதிக்கமிக்க சமய போதனைகளை கௌதமர் அறிந்திருக்கவில்லை என்று ஆரம்ப கால நூல்கள் பரிந்துரைக்கின்றன. இவரது தேடலானது மனிதர்களின் துன்பத்திற்கு எது காரணமாக அமைகிறது என்பதனால் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது.[62] பல்வேறு பௌத்த சமய பிரிவுகளைச் சேர்ந்த ஆரம்ப கால பௌத்த நூல்களின் படியும், இந்திய நூல்களின் மொழி பெயர்ப்பாக கிழக்காசியாவில் எழுதப்பட்ட ஏராளமான நூல்களின் படியும், கௌதமருக்கு யசோதரை என்ற ஒரு மனைவியும், ராகுலன் என்ற ஒரு மகனும் இருந்தனர்.[63] இது தவிர ஆரம்ப கால நூல்களில் புத்தர் "(எனது பெற்றோரின் வீட்டில்) நான் செல்லமாக, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன் துறவிகளே" என்று குறிப்பிட்டுள்ளார்.[64]
புராணங்கள் கலந்த வாழ்க்கை வரலாறுகளான லலிதவிஸ்தாரா போன்றவை இளம் கௌதமரின் சிறப்பான போர் ஆற்றல் குறித்த கதைகளையும் குறிப்பிடுகின்றன. பிற சாக்கிய இளைஞர்களுக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் இவர் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றன.[65]
துறவு
[தொகு]கௌதமர் ஓர் உயர்ந்த ஆன்மிக இலக்கை தேடியது மற்றும் சமய குருவுக்குரிய வினை முறை பயிற்சி அளிக்கப்படாத வாழ்க்கையால் விரக்தியடைந்தது ஆகியவற்றுக்கு பிறகு, ஒரு துறவி அல்லது சிரமனராக உருவானதை ஆரம்ப கால நூல்கள் வெறுமனே குறிப்பிடும் அதே நேரத்தில், பிந்தைய புராணம் கலந்த வரலாறுகள் புத்தர் எவ்வாறு ஒரு யாசகராக ஆனார் என்பதை ஒரு விரிவான, விளக்கங்களுடன் கூடிய, கவனத்தை ஈர்க்கக்கூடிய கதையாக குறிப்பிடுகின்றன.[53][66]
பாளி மொழி ஆரியபரியேசன-சுத்தா ("உன்னதமான தேடல் குறித்த விவாதம்," மச்சிம நிகயம் 26) நூல் மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமத்தின் 204ஆம் பத்தி போன்றவற்றில் புத்தரின் ஆன்மீக தேடல் குறித்த ஆரம்ப கால குறிப்புகள் காணப்படுகின்றன.[67] தன்னுடைய வாழ்வும் முதுமை, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றை அடையும், மற்றும் இவற்றை விட சிறந்த ஒன்று (அதாவது விடுதலை, நிர்வாணம்) இருக்கும் ஆகியவை குறித்த எண்ணமே கௌதமர் துறவு மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றன என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.[68] தான் ஒரு சிரமனராக வந்ததற்கு புத்தர் கொடுத்த விளக்கத்தை இந்த ஆரம்ப கால நூல்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன: "இல்லற வாழ்க்கை, இந்த தூய்மையற்ற இடம் என்பது குறுகலானது - சமண வாழ்க்கையானது சுதந்திரமான வெட்ட வெளி காற்று போன்றது. பிழையற்ற, மிகவும் தூய்மையான மற்றும் பிழையற்ற புனித வாழ்வை ஓர் இல்லற வாழ்க்கை உடையவரால் வாழ்வது என்பது எளிதானது கிடையாது."[69] மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204, தர்மகுப்தக வினயம் மற்றும் மகாவஸ்து ஆகிய அனைத்து நூல்களுமே புத்தரின் இந்த முடிவை அவரது தாய் மற்றும் தந்தை எதிர்த்தனர் என்பதை ஒப்புக் கொள்கின்றன. புத்தர் துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் "கண்ணீர் உடைய முகங்களுடன் அழுக" ஆரம்பித்தனர்.[70][71]
தன்னுடைய அரண்மனையை விட்டு முதன் முறையாக வெளியுலகத்தை காண்பதற்காக கௌதமர் எவ்வாறு வெளியேறினார், மனிதர்கள் அடையும் துன்பங்களை இவர் கண்ட போது எவ்வாறு அதிர்ச்சி அடைந்தார் என்ற கதையையும் புராணம் கலந்த வரலாறுகள் குறிப்பிடுகின்றன.[72][73] ஒரு பெரிய சமயத் தலைவராக மாறுவதற்கு பதிலாக ஒரு மகா மன்னனாக கௌதமர் வர வேண்டும் என்பதற்காக சமய போதனைகள் மற்றும் மனிதர்கள் அடையும் துன்பங்கள் குறித்த நிகழ்வுகளை கௌதமர் காணாமல் இருக்க கௌதமரின் தந்தை எவ்வாறு இவரை மறைத்து வளர்த்தார் என்பதையும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.[74] பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாதக கதைகள் கௌதமர் ஒரு முதியவரைக் கண்டார் என்று குறிப்பிடுகின்றன. அனைவரும் ஒரு நாள் முதுமை அடைவார்கள் என்பதை கெளதமரின் தேரோட்டியான சந்தகன் விளக்கி கூறிய போது அரண்மனையைத் தாண்டி மேற்கொண்ட பயணங்களை இளவரசர் கௌதமர் மேற்கொண்டார். இத்தகைய ஒரு பயணத்தில் கௌதமர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், ஓர் அழுகிக் கொண்டிருந்த பிணம் மற்றும் தனக்கு அகத்தூண்டுதலாக விளங்கிய ஒரு துறவியையும் கண்டார்.[75][76][77] இவ்வாறு "நான்கு காட்சிகளை" கண்ட கதையானது விபசி என்ற ஒரு முந்தைய புத்தரை சித்தரித்திருந்த திக நிகயம் (திக நிகயம் 14.2) என்ற நூலின் முந்தைய பதிப்பில் இருந்து பெறப்பட்டதாக ஒரு சிலர் கருதுகின்றனர். விபசி என்ற ஒரு முந்தைய புத்தரின் இள வயது வாழ்க்கையை இந்நூல் சித்தரித்திருந்தது.[77]
தன்னுடைய அரண்மனையிலிருந்து கௌதமர் வெளியேறியதை இந்த புராணம் கலந்த வரலாறுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. நான்கு காட்சிகளை கண்டதற்கு பிறகு சீக்கிரமே கௌதமர் ஓரிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்தார். காண்பதற்கு இனியதற்ற பிணம் போன்ற நிலையில் தன்னுடைய வேலை பெண்கள் இருப்பதை கண்டது இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[78] தான் ஞானம் பெற்ற போது மிகவும் ஆழமாக பின்னர் தான் புரிந்து கொண்ட துக்கம் ("நிலையற்ற," "மனநிறைவின்மை")[79][80][81][82] மற்றும் துக்கத்தின் முடிவு ஆகியவற்றை இவ்வாறாக கண்டறிந்தார்.[83] தான் கண்ட அனைத்து காட்சிகளாலும் மனமாற்றமடைந்த கௌதமர் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நள்ளிரவில் அரண்மனையிலிருந்து வெளியேறி ஓர் அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை வாழ முடிவு செய்தார்.[75]
தன்னுடைய குதிரை கந்தகா மற்றும் சந்தகனுடன் கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறினார். தன்னுடைய மகன் ராகுலன் மற்றும் மனைவி யசோதரை ஆகியோரை விட்டு விட்டுச் சென்றார்.[84] அனோமியா ஆற்றுக்கு பயணித்தார். தன்னுடைய முடியை வெட்டினார். தன்னுடைய பணியாள் மற்றும் குதிரையை விட்டு விட்டு வனப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு துறவிகளுக்குரிய அங்கியை மாற்றிக் கொண்டார்.[85] எனினும், இக்கதையின் சில மாறுபட்ட பதிப்புகள், அனோமியா ஆற்றின் கரையில் பிரம்மாவிடமிருந்து அங்கிகளை கௌதமர் பெற்றார் எனக் கூறுகின்றன.[86]
புராணம் கலந்த வரலாறுகளின் படி, துறவி கௌதமர் முதன் முதலில் ராஜககத்திற்கு (தற்கால ராஜகிரகம்) தெருக்களில் யாசகம் வேண்டுவதற்காக சென்றார். மகதத்தின் மன்னனான பிம்பிசாரர் கௌதமரின் இந்த தேடல் குறித்து அறிந்தார். தன்னுடைய இராச்சியத்தின் ஒரு பகுதியை அளிக்க முன் வந்தார். கௌதமர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால், தான் ஞானம் பெற்றவுடன் முதன் முதலில் பிம்பிசாரரின் இராச்சியத்திற்கு வருகை புரிவேன் என்று உறுதியளித்தார்.[87][88]
துறவு வாழ்வும், விழிப்படைதலும்
[தொகு]தன்னை வருத்தி கடு முயற்சி செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட ஆண்டுகளின் போது கெளதர் தொலை தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்தார் என்றும், காடுகளில் வாழும் போது தான் அடைந்த பயத்தை இவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டி இருந்தது என்றும் மச்சிம நிகயம் 4 குறிப்பிடுகிறது.[90] நிகய-நூல்கள் துறவி கௌதமர் இரண்டு ஆசிரியர்களுக்கு கீழ் யோக தியானத்தை பயின்றார் என்றும் கூறுகின்றன.[91][92] ஆரியபரியேசன-சுத்தா (மச்சிம நிகயம் 26) மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றின் படி ஆலார காலமரின் பயிற்சியை முழுவதுமாக கற்றதற்குப் பிறகு அவர்களின் ஆன்மிக சமூகத்தின் ஒரு சமமான தலைவராக வரவேண்டும் என்று புத்தரை ஆலாரர் கேட்டுக் கொண்டார். ஆலரார் புத்தருக்கு "ஏதுமின்மையின் கோளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு தியான அடைதலை பயிற்றுவித்தார்.[93][94]
கெளதமர் இந்த பயிற்றுவிப்பில் திருப்தி அடையவில்லை. ஏனெனில், இது (உலக வாழ்வு மீதான) கடும் வெறுப்புணர்ச்சிக்கோ, நிர்ச்சலனத்திற்கோ, அற்றுப் போதலுக்கோ, அமைதி நிலைக்கோ, அறிவாற்றலுக்கோ, விழிப்படைதலுக்கோ, நிப்பானத்திற்கோ (நிர்வாணம்) இட்டுச் செல்லவில்லை. பிறகு உத்தக ராமபுத்திரரின் ஒரு மாணவனாக பயில ஆரம்பித்தார்.[95][96] இவர் மூலமாக உயர் நிலை தியான உணர்வு நிலைகளை புத்தர் அடைந்தார். இந்த உணர்வு நிலையானது "உணர்ந்தறியும் ஆற்றல் அல்லது உணர்ந்தறியா ஆற்றலின் கோளம்" என்று அழைக்கப்பட்டது. இந்த முறையும் தன்னுடைய ஆசிரியரால் அவருடன் இணைந்து கொள்ளுமாறு புத்தருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு முறை, ஏற்கனவே தான் கொண்ட அதே காரணங்களுக்காக புத்தர் திருப்தி அடையவில்லை. மீண்டும் தனது பயணத்தை புத்தர் தொடர ஆரம்பித்தார்.[97]
சில சூத்திரங்களின் படி, தனது தியான ஆசிரியர்களிடம் இருந்து விலகியதற்கு பிறகு கௌதமர் துறவிகளின் உத்திகளைப் பின்பற்ற ஆரம்பித்தார்.[98][i] ஆரம்ப கால நூல்களில் விளக்கப்பட்டுள்ள புத்தர் கேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள துறவு உத்திகளில் மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்ளுதல், வேறுபட்ட வகையிலான மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மனக் கட்டுப்பாடு ஆகியவையும் அடங்கும். புத்தர் மிகவும் இளைத்ததன் காரணமாக இவரது எலும்புகள் தோல் வழியாக தெரிய ஆரம்பித்தன என்று இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.[100] மகசச்சக-சுத்தா மற்றும் பெரும்பாலான அதன் இணை நூல்கள் துறவை அதன் மட்டு மீறிய உச்ச நிலைகளுக்கு கொண்டு சென்றதற்கு பிறகு நிர்வாணத்தை அடைவதற்கு இந்த உத்திகள் உதவில்லை என்பதை கௌதமர் உணர்ந்தார் என்றூ குறிப்பிடுகின்றன. தன்னுடைய இலக்கைத் தொடர்வதற்காக வலிமையை மீண்டும் பெற வேண்டும் என்ற தேவையை புத்தர் உணர்ந்தார்.[101] ஒரு பிரபலமான கதையானது சுஜாதா என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமப் பெண்ணிடமிருந்து பாலையும், அரிசி பாயாசத்தையும் புத்தர் எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்பதை கூறுகிறது.[102]
துறவில் இருந்து சற்றே இடை நிறுத்தத்தை புத்தர் எடுத்ததானது, இவரது ஐந்து தோழர்கள் இவரிடமிருந்து விலகுதற்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது. தன்னுடைய தேடலை கைவிட்டு விட்டு, ஒழுக்கமற்றவராக புத்தர் உருவாகிவிட்டார் என்று அவர்கள் நம்பியதால் இவ்வாறு விலகினர். இந்நிலையில் தன்னுடைய தந்தை வேலையில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு குழந்தையாக ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த போது தான் அடைந்த ஒரு முந்தைய தியான அனுபவத்தை கௌதமர் மீண்டும் ஞாபகம் கொண்டார்.[101] விடுதலை பெறுவதற்கான வழியானது தியானமே என்று உணர்ந்து கொள்ள இந்த நினைவானது இவருக்கு வழி வகுத்தது. புத்தர் அனைத்து நான்கு தியானங்களையும் கற்றார் என்றும், அதற்குப் பிறகு "மூன்று உயர்ந்த அறிவுகளையும்" (தெவிஜ்ஜா)[j] பெற்றார் என்றும், இறுதியாக நான்கு உயர்ந்த உண்மைகள் குறித்த முழுவதுமான புரிதலையும் பெற்றார் என்றும், இவ்வாறாக மீண்டும் மீண்டும் பிறக்கும் முடிவற்ற சுழற்சியான பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்றார் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.[104][105][106][107][k]
தம்மசக்கபவத்தன சுத்தா (சம்யுத்த நிகயா 56)[108] நூலானது ததாகதர், இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளாக இல்லாது ஒரு மிதமான வழியான "நடு வழி" அல்லது உன்னதமான எண்வகை மார்க்கங்களை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. இந்த ததாகதர் என்ற சொல்லைத் தான் கௌதமர் பெரும்பாலும் அடிக்கடி தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ள பயன்படுத்தினார்.[108] பிந்தைய நூற்றாண்டுகளில் தான் கௌதமர் புத்தர் அல்லது "விழிப்படைந்த ஒருவர்" என்று இவர் அறியப்பட ஆரம்பித்தார். புத்தர் என்ற இந்த பட்டமானது "தூங்கி கொண்டிருக்கும்" பெரும்பாலான மக்களிலிருந்து வேறுபடுத்தி, ஒரு புத்தர் என்பவர் நடைமுறையின் உண்மையான இயல்புக்கு "விழிப்படைந்த ஒருவரென்றும்", உலகம் "எவ்வாறு உள்ளதோ அவ்வாறே" (யுத-புதம்) அதைக் காண்பவர் என்றும் குறிக்கிறது.[109] துன்ப சுழற்சி மற்றும் மறு பிறப்பு ஆகியவற்றை தொடர வைக்கும் ஆசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய "நெருப்புகளை" அணைத்ததாக அறியப்படுகிற விடுதலை (விமுத்தி) அல்லது நிர்வாணத்தை அடைந்த ஒருவராக ஒரு புத்தர் அறியப்படுகிறார்.[110]
தன்னுடைய தியான ஆசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் தன்னுடைய முடிவைத் தொடர்ந்து மத்தியம ஆகமம் 204 மற்றும் பிற ஆரம்ப இணை நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, முழுமையான விழிப்படைதலை (சம்ம-சம்போதி) அடையும் வரை தான் எழுந்திருக்கக் கூடாது என்ற முடிவுடன் கௌதமர் அமர்ந்தார். ஆரியபரியேசன-சுத்தா நூலானது "முழுமையான விழிப்படைதலை" பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இவர் நிர்வாணத்தை அடைந்தார் என்று மட்டும் குறிப்பிடுகிறது.[111] இந்நிகழ்வானது பீகாரின் புத்தகயையில் உள்ள, "போதி மரம்" என்று தற்போது அறியப்படும் ஓர் அரச மரத்தின் கீழ் நடந்தது என்று கூறப்படுகிறது.[112]
பாளி திரு முறையைச் சேர்ந்த பல்வேறு நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, போதி மரத்தின் கீழ் புத்தர் ஏழு நாட்களுக்கு அமர்ந்திருந்தார். "விடுதலையின் நிறைவான மகிழ்ச்சியை" உணர்ந்தார்.[113] இவர் தொடர்ந்து தியானம் செய்தார் என்றும், நைரஞ்சன ஆற்றின் அருகில் வாழ்ந்து தம்மத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்தித்தார் என்றும் பாளி நூல்கள் மேலும் குறிப்பிடுகின்றன. இந்த அம்சங்களில் ஒரு தம்மமானது மற்றொரு தம்மத்திலிருந்து உருவாகிறது, ஐந்து ஆன்மிக புலன்கள் மற்றும் துன்பம் (துக்கம்) ஆகியவையும் அடங்கும்.[114]
மகாவஸ்து, ஜாதக கதைகள் மற்றும் லலிதாவிஸ்தாரா போன்ற புராணம் கலந்த வரலாறுகள், ஆசைகள் உலகின் மன்னனான மாறன் புத்தர் நிர்வாணம் அடைவதை தடுப்பதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியையும் குறிப்பிடுகின்றன. அவன் புத்தரை மயக்குவதற்காக தன்னுடைய மகள்களை அனுப்பினான், தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான், இராட்சதர்களின் இராணுவத்தைக் கொண்டு புத்தரைத் தாக்கினான்.[115] எனினும், புத்தர் இதனால் சலனம் அடையவில்லை. தன்னுடைய முதன்மை நிலையை பூமி அறிந்து கொள்வதற்காக பூமியை அழைத்து தரையை தொட்டார். புராணங்களின் சில பதிப்புகளின் படி, பிருத்வியை அழைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு தியானத்தை மேற்கொண்டார்.[116] இது தவிர பிற அதிசயங்கள் மற்றும் மந்திர நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல் சமயச் சொற்பொழிவும், சங்கம் உருவாக்கப்படுதலும்
[தொகு]மச்சிம நிகயம் 26இன் படி, தன்னுடைய விழிப்படைதலுக்கு பின் உடனடியாக, தன் தம்மத்தை பிறருக்கு போதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் புத்தருக்கு ஏற்பட்டது. "நுட்பமான, ஆழமான மற்றும் பின்பற்ற கடினமான" ஒரு பாதையை அறியாமை, பேராசை மற்றும் வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், கடவுள் பிரம்ம சகம்பதி புத்தரை இணங்க வைத்தார். குறைந்தது "தம் கண்களில் சிறு தூசி" உள்ள யாரேனும் இதை புரிந்து கொள்வார்கள் என்று வாதிட்டார். புத்தர் தணிந்தார். போதிக்க ஒப்புக் கொண்டார். மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றுக்கு இணை சீன நூலான அனலயோவின் நூலில் இக்கதை காணப்படவில்லை. ஆனால், லலிதவிஸ்தாராவின் கதுஸ்பரிசத்-சூத்திரத்தின் எகோத்தரிக-ஆகம கருத்தாடல் போன்ற பிற இணை நூல்களில் இந்நிகழ்வு காணப்படுகிறது.[111]
மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204இன் படி, போதிக்க முடிவு செய்ததற்கு பிறகு புத்தர் ஆரம்பத்தில் தன்னுடைய முந்தைய ஆசிரியர்களான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோரை சந்திக்க விரும்பினார். தன்னுடைய போதனைகளின் தன்மையை அவர்களுக்கு கூற எண்ணினார். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தனர். எனவே, தன்னுடைய ஐந்து முன்னாள் தோழர்களை சந்திக்க இவர் முடிவு செய்தார்.[117] மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகிய இரு நூல்களுமே புத்தர் தான் வாரணாசிக்கு (பனாரசு) செல்லும் வழியில் மற்றொரு அலைந்து திரிந்த துறவியை சந்தித்தார். அவர் ஆசீவகத் துறவியான உபகர் ஆவார். இது மச்சிம நிகயம் 26இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தான் முழுமையான விழிப்படைதலை அடைந்து விட்டதாக புத்தர் தெரிவித்தார். ஆனால் உபகர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவர் "மாற்று (ஆன்மிக) பாதையை" தேர்ந்தெடுத்தார்.[118]
மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகியவை புத்தர் சாரநாத்தின் மான் பூங்காவை அடைந்ததுடன் தொடர்கின்றன. இவ்விடம் மிரிகவதம் மற்றும் ரிஷிபட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. ரிஷிபட்டணம் என்பதன் பொருள் "துறவிகளின் சாம்பல் விழும் தளம்" என்பதாகும்.[119] இது வாரணாசிக்கு அருகில் அமைந்திருந்தது. இங்கு புத்தர் ஐந்து துறவிகளின் குழுவை சந்தித்தார். அத்துறவிகளை தான் உண்மையில் முழுமையான விழிப்படைதலை அடைந்ததை நம்புமாறு செய்தார்.[120] மத்தியம ஆகமம் 204லும் (மச்சிம நிகயம் 26இல் இது குறிப்பிடப்படவில்லை), மேலும் தேரவாத வினயம் எனும் ஓர் எகோத்தரிக-ஆகம நூல், தருமகுப்தக வினயம், மகிசசக வினயம், மற்றும் மகாவஸ்து ஆகியவற்றின் படி, புத்தர் இவர்களுக்கு "முதல் சமயச் சொற்பொழிவை" போதித்தார். இது "பனாரசு சமயச் சொற்பொழிவு" என்றும் அறியப்படுகிறது.[119] இதன் பொருள், "இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளில் இருந்து விலகி உன்னதமான எண்வகை மார்க்கங்கள் எனும் ஒரு நடு வழியை போதிப்பதாகும்.[120] முதல் சமயச் சொற்பொழிவுக்கு பிறகு துறவி கௌந்தேயன் முதல் அருகதராகவும் (விடுதலை பெற்ற மனிதன்), முதல் பௌத்த பிக்குவும் ஆனார் என பாளி நூல் குறிப்பிடுகிறது.[121] பிற துறவிகளுக்கு போதிப்பதை பிறகு புத்தர் தொடர்ந்தார். பௌத்த துறவிகளின் குழுவான முதல் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.[h]
மகாவஸ்து, தேரவாத வினயத்தின் மகாகந்தகம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் போன்ற பல்வேறு நூல்கள் இவர்களுக்கு புத்தர் "தான்-அற்ற" (அனாத்மலக்சண சூத்திரம்) என்ற தன் இரண்டாவது கருத்தாடலையும் இந்நேரத்திலோ[122] அல்லது ஐந்து நாட்கள் கழித்தோ[119] போதித்தார் என்று குறிப்பிடுகின்றன. இந்த இரண்டாவது சமயச் சொற்பொழிவை கேட்டதற்கு பிறகு மீதமிருந்த நான்கு துறவிகளும் அருகதர் நிலையை அடைந்தனர்.[119]
தேரவாத வினயம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் ஆகியவையும் யசா என்ற ஓர் உள்ளூர் கழக எசமானர் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மதம் மாறியதை குறிப்பிடுகின்றன. மதம் மாறி பௌத்த சமூகத்துக்குள் நுழைந்த முதல் உபாசகர்களில் இவர்களும் முதன்மையானோர் ஆவர்.[123][119] கசப்பா என்ற பெயருடைய மூன்று சகோதரர்கள் இதைத் தொடர்ந்து மதம் மாறினர். முன்னர் "சடை முடி துறவிகளாக" இருந்த ஐநூறு பேரை இவர்கள் தங்களுடன் அழைத்து வந்தனர். இந்த ஐநூறு பேரின் முந்தைய ஆன்மீக வழக்கமானது நெருப்பு பலியிடலாக இருந்தது.[124][125] தேரவாத வினயத்தின் படி, கயைக்கு அருகில் இருந்த கயாசிசா குன்றில் பிறகு புத்தர் தங்கினார். ஆதித்தபரியாய சுத்தா (நெருப்பு கருத்தாடல்) என்ற தன் மூன்றாவது கருத்தாடலை புத்தர் ஆற்றினார்.[126] இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சி ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளன என்றும், எண் வகை மார்க்கங்களை பின்பற்றுவோர் மட்டுமே விடுதலை பெறுவர் என்றும் இதில் போதித்தார்.[119]
மழைக் காலத்தின் முடிவின் போது புத்தரின் சமூகமானது சுமார் 60 விழிப்படைந்த துறவிகள் அளவுக்கு வளர்ந்த போது அவர்களை தனியாக அலைந்து திரியுமாறு புத்தர் அறிவுறுத்தினார். பௌத்த சமூகத்துக்குள் மக்களை போதித்து சேர்க்குமாறு கூறினார். இதை உலகின் "நன்மைக்காகவும், அனுகூலத்திற்காகவும்" செய்யுமாறு கூறினார்.[127][119]
பயணங்களும், சங்கத்தின் வளர்ச்சியும்
[தொகு]தன் வாழ்வின் எஞ்சிய 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு தற்போதைய உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் தெற்கு நேபாளத்தை உள்ளடக்கியிருந்த சிந்து-கங்கை சமவெளியில் புத்தர் பயணம் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு இப்பயணத்தில் புத்தர் போதித்தார். உயர்குடியினர் முதல் பணியாளர்கள் வரை, துறவிகள் முதல் இல்லற வாழ்வைப் பின்பற்றியவர் வரை, அங்குலிமாலா போன்ற கொலைகாரர்கள் முதல் ஆலவகன் போன்ற நரமாமிசம் உண்பவர்கள் வரை புத்தர் போதித்தார்.[128][66][129] சூமன் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருந்த கோசாம்பி (பிரயாக்ராஜுக்கு தென் மேற்கே 25 கி. மீ.) முதல் கம்பா (பாகல்பூருக்கு கிழக்கே 40 கி. மீ.) வரையிலும்" மற்றும் "கபிலவஸ்து (கோரக்பூருக்கு வட மேற்கே 95 கி. மீ.) முதல் உருவேலா (கயைக்கு தெற்கே) வரையிலும் புத்தரின் பயணமானது நடைபெற்றிருந்தது. இது 600 மற்றும் 300 கிலோமீட்டர் பரப்பளவுடைய ஒரு பகுதியாகும்.[130] கோசல மற்றும் மகத நாட்டு மன்னர்களின் புரவ்லத் தன்மையை இவரது சங்கமானது[h] பெற்றிருந்தது. இவ்வாறாக இந்நாடுகளின் தலைநகரங்களான முறையே சவத்தி மற்றும் இராஜககம் ஆகியவற்றில் ஏராளமான நேரத்தை புத்தர் செலவழித்தார்.[130]
புத்தர் என்ன மொழி பேசினார் என்பது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள போதிலும், நடு இந்தோ-ஆரிய மொழி வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை மொழிகளில் இவர் போதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் தரப்படுத்தப்பட்டதாக பாளி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சங்கமானது ஆண்டு முழுவதும் அலைந்து திரிந்தது. இதில் விதி விலக்கு வச்சா மழைக் காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும். இந்நேரத்தில் அனைத்து சமயத்தைச் சார்ந்த துறவிகளும் அரிதாகவே பயணம் மேற்கொண்டனர். இதற்கு ஒரு பங்கு காரணமானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்காமல் பயணம் மேற்கொள்வது என்பது மழைக்காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது ஆகும். [131]துறவிகளின் உடல் நலம் குறித்த ஐயப்பாடும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.[132] ஆண்டின் இந்த நேரத்தின் போது சங்கமானது மடாலயங்கள், பொதுப் பூங்காக்கள் அல்லது காடுகளில் நடத்தப்பட்டது. இவ்விடங்களுக்குத் துறவிகளைத் தேடி மக்கள் வந்தனர்.
சங்கம் தொடங்கப்பட்ட போது முதல் மழைக் காலமானது வாரணாசியில் கழிக்கப்பட்டது. பாளி நூல்களின் படி சங்கம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சீக்கிரமே புத்தர் மகத நாட்டின் தலைநகரமான இராஜககத்திற்கு பயணம் மேற்கொண்டார். மன்னர் பிம்பிசாரரை சந்தித்தார். பிம்பிசாரர் சங்கத்திற்கு ஒரு மூங்கில் வன பூங்காவை பரிசளித்தார்.[133]
புத்தரின் சங்கமானது வட இந்தியாவில் இவருடைய ஆரம்ப கால பயணங்களின் போது தொடர்ந்து வளர்ந்தது. எளிதில் நம்பிக்கை கொள்ளாத சிரமனரான சஞ்சய பெலத்திப்புத்தரின் மாணவர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை அசாஜி எவ்வாறு மதம் மாற்றி புத்தரின் முதன்மையான சீடர்களாயினர் என்ற கதையை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன.[134][135] புத்தர் கபிலவஸ்துவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு வருகை புரிந்த போது புத்தரின் மகனான இராகுலன் எவ்வாறு தன்னுடைய தந்தையுடன் ஒரு பிக்குவாக இணைந்தார் என்ற கதையையும் இவை கூறுகின்றன.[136] புத்தரின் உறவினரான ஆனந்தர், அனுருத்தர், முடி திருத்துபவரான உபாலி, புத்தரின் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் மற்றும் தேவதத்தன் போன்ற பிற சாக்கியர்களும் எவ்வாறு புத்தரின் சங்கத்தில் பிக்குகளாக காலப்போக்கில் இணைந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றன.[137][138] அதே நேரத்தில், புத்தரின் தந்தையான சுத்தோதனர் தன்னுடைய மகனின் போதனைகளை பற்றிய தகவல் அறிந்ததால் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். தம்மத்தை அறிந்த, முதல் மூன்று பிணைகளிலிருந்து விடுபட்ட சொதபன்னர் ஆனார்.
ஆரம்ப கால நூல்கள் ஒரு முக்கியமான உபாசக சீடரான வணிகர் அனாதபிண்டிகனை பற்றியும் குறிப்பிடுகின்றன. புத்தருக்கு ஒரு வலிமையான உபாசக ஆதரவளிப்பவராக இவர் உருவானார். ஒரு பெரும் பணம் செலவழித்து (தேரவாத வினயமானது ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை பற்றி கூறுகிறது) சங்கத்திற்கு ஜேதவனத்தை பரிசாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.[139][140]
பிக்குணி அமைப்பை உருவாக்குதல்
[தொகு]புத்தரின் சமூகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய பங்காக ஆண் பிக்குகளை ஒத்த பெண் துறவிகளுக்குமான (பிக்குணி) ஓர் இணையான அமைப்பு உருவாக்கப்பட்டதை கூறலாம். இந்த தலைப்பு குறித்த அனலயோவின் ஒப்பீட்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வேறுபட்ட ஆரம்ப கால புத்த நூல்களில் இந்நிகழ்வை பற்றிய குறிப்பானது பல்வேறு பதிப்புகளாக உள்ளது.[l]
அனலயோவால் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து முதன்மையான பதிப்புகளின் படியும், புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமி தனக்கும், சில பிற பெண்களுக்கும் புத்த சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுதலை வைத்த போது ஆரம்பத்தில் புத்தரால் அது நிராகரிக்கப்பட்டது. மகாபிரஜாபதியும், அவரது ஆதரவாளர்களும் பிறகு தமது முடியை மழித்து விட்டு, அங்கிகளை அணிந்து கொண்டு புத்தரை அவரது பயணங்களின் போது பின் தொடர ஆரம்பித்தனர். ஆண் மற்றும் பெண் துறவிகளின் புதிய அமைப்புக்கு இடையிலான உறவு முறையை கவனக் குவியலாகக் கொண்ட கருதம்மத்தின் (சமக்கிருதம்: குருதர்மம்) எட்டு நிபந்தனைகளை மகாபிரஜாபதி ஒப்புக்கொண்டால் அவரை பிக்குணி அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம் என ஆனந்தர் இறுதியாக புத்தரை இணங்கச் செய்தார்.[142]
அனலயோவின் ஆய்வுப் படி, அனைத்து பதிப்புகளிலும் பொதுவாக காணப்படும், ஆனந்தரால் புத்தரை இணங்கச் செய்ய பயன்படுத்தப்பட்ட வாதமானது விழிப்படைதலின் அனைத்து நிலைகளையும் அடைய ஆண்களைப் போன்ற அதே ஆற்றலை பெண்களும் கொண்டுள்ளனர் என்பதாகும்.[143] பல்வேறு முரண்பாடுகள் காரணமாக எட்டு கருதம்மங்களை அவற்றின் தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்வதை சில நவீன அறிஞர்கள் கேள்விக்கு உள்ளாகின்றனர் என்பதையும் அனலயோ குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எட்டு கருதம்மங்களின் பட்டியலின் வரலாற்று தன்மையானது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இவை ஒருவேளை புத்தரால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம் என்றும் கருதுகிறார்.[144][145]
ஓர் அலைந்து திரியும் சிரமண வாழ்வானது, தம் ஆண் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் இல்லாத பெண்களுக்கு, பாலியல் தாக்குதல் மற்றும் கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம் என்ற காரணமே பெண்களை சங்கத்தில் இணைத்துக் கொள்ள புத்தருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பத்திகள் புலப்படுத்துகின்றன என அனலயோ குறிப்பிடுகிறார். இதன் காரணமாக, "ஓர் உபாசக பெண் தன் ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சாத்தியப்படக் கூடிய பாதுகாப்பை முடிந்த வரை ஒத்த, உறவு முறையை ஆண் பிக்குகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பிக்குணி அமைப்பில் உள்ளவர்களும் பெற வேண்டும்" என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக கருதம்ம வழி முறைகள் இருந்திருக்கலாம் என கருதபப்டுகிறது.[146]
பிந்தைய ஆண்டுகள்
[தொகு]யோவான் இசுடிராங் என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி, தான் போதித்த ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு புத்தர் கோசல இராச்சியத்தின் தலைநகரான சிரவஸ்தியில் மெதுவாக வாழ ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது. தன்னுடைய பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலானவற்றை இந்த நகரத்தில் கழித்தார்.[140]
சங்கம்[h] அதன் அளவில் வளர்ந்த போது, சங்கத்திற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அமைப்பிற்கான தேவையானது ஏற்பட்டது. சங்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட அளவிலான வழிமுறைகளை புத்தர் உருவாக்கினார் என்றும் தோன்றுகிறது. "பிரதிமோச்சம்" என்று அழைக்கப்படும் பல்வேறு நூல்களில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புத்த சமூகத்தால் இந்நூல்கள் போதிக்கப்பட்டன. பொதுவான அற நெறி விதிமுறைகள், மேலும் கிண்ணங்கள் மற்றும் அங்கிகள் போன்ற துறவற வாழ்வுக்கு இன்றியமையாத பொருட்கள் குறித்துமான விதிகளை பிரதிமோச்சம் உள்ளடக்கியிருந்தது.[147]
இவரது பிந்தைய ஆண்டுகளில் புத்தரின் புகழானது அதிகரித்தது. சாக்கியர்களின் புதிய அரசவை மண்டபத்தின் திறப்பு விழா (மச்சிம நிகயம் 53) மற்றும் இளவரசர் போதியின் ஒரு புதிய அரண்மனை திறப்பு (மச்சிம நிகயம் 85) போன்ற முக்கியமான அரச குல நிகழ்வுகளுக்கு இவர் அழைக்கப்பட்டார்.[148] புத்தரின் முதுமை காலத்தின் போது எவ்வாறு மகத இராச்சியத்தின் அரியணையானது அஜாதசத்ரு எனும் ஒரு புதிய மன்னனால் நேர்மையற்ற முறையில் கைப்பற்றப்பட்டது என்பதையும் ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. அஜாதசத்ரு தனது தந்தை பிம்பிசாரரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து ஆட்சிக்கு வந்தார். சமன்னபால சுத்தா நூலின் படி, புதிய மன்னர் வேறுபட்ட துறவி ஆசிரியரிடம் பேசினார். இறுதியாக புத்தரிடம் தஞ்சமடைந்தார்.[149] எனினும், சைன நூல்களும் அஜாசத்ரு தங்களது நம்பிக்கைக்கு ஆதரவளித்தார் என்று குறிப்பிடுகின்றன. அஜாதசத்ரு புத்தரின் சங்கத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், வேறுபட்ட சமய குழுக்களுக்கும் ஆதரவளித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[150]
புத்தர் பயணித்து, போதிப்பதை தொடர்ந்த போது பிற சிரமண பிரிவுகளின் உறுப்பினர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதில் சில நபர்களை புத்தர் சந்தித்தார் என்றும், அவர்களது கொள்கைகளின் நிறை குறைகளை சுட்டிக் காட்டினார் என்றும் ஆரம்ப கால நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன. சமன்னபால சுத்தா நூலானது இத்தகைய ஆறு சமயப் பிரிவுகளை அடையாளப்படுத்துகிறது.[151]
ஆரம்ப கால நூல்கள் முதுமை காலத்தில் புத்தர் எவ்வாறு முதுகு வலியுடன் இருந்தார் என்பதையும் குறிப்பிடுகின்றன. தனது உடல் தற்போது மேற்கொண்ட ஓய்வை வேண்டியதால் தன்னுடைய முதன்மையான சீடர்களிடம் போதிக்கும் பணியை அளித்தார் என்று பல்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன.[152] எனினும், புத்தர் தானும் தொடர்ந்து தன்னுடைய முதுமைக் காலம் வரை போதித்தார்.
புத்தரின் முதுமைக் காலத்தின் போது மிகுந்த இடர்பாடு ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக தேவதத்தன் பிரிந்து சென்றது திகழ்ந்தது. புத்தரின் மைத்துனனான தேவதத்தன் புத்த அமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற எவ்வாறு முயற்சித்தான் என்று ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. பிறகு பல்வேறு புத்த துறவிகளுடன் சங்கத்திலிருந்து பிரிந்து ஓர் எதிர்ப் பிரிவை உருவாக்கினான். இந்த பிரிவானது மன்னன் அஜாதசத்ருவால் ஆதரவளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.[153][154] பாளி நூல்கள் புத்தரை கொல்லவும் தேவதத்தன் திட்டமிட்டான் என்பதை குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன.[155] தன்னுடைய இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை பிரிந்து சென்ற சமூகத்துடன் பேசுவதற்காக புத்தர் அனுப்பியதையும் குறிப்பிடுகின்றன. தேவதத்தனுடன் சென்ற துறவிகளை இணங்க வைத்து திரும்ப அழைத்து வருவதற்காக இரு சீடர்களும் சென்றனர்.[156]
அனைத்து முதன்மையான ஆரம்ப கால பௌத்த வினய நூல்களும் புத்த சமூகத்தை பிரிக்க முயற்சித்த ஒரு பிரிவினைவாத நபராக தேவதத்தனை குறிப்பிடுகின்றன. ஆனால், புத்தருடன் அவன் எந்தெந்த விஷயங்களில் முரண்பட்டான் என்பது குறித்து இந்து நூல்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. இசுதவிர நிகய நூல்கள் "ஐந்து கருத்துகள்" எனப்படும் மட்டு மீறிய துறவற பழக்கங்களின் மீது பொதுவாக பிரச்சினைக்குக் காரணம் என கவனம் கொள்கின்றன. மகாசங்கிக வினயமானது அதே நேரத்தில் ஒரு மிகுந்த விரிவான அனைத்தையும் உள்ளடக்கிய முரண்பாட்டை பற்றி பேசுகிறது. புத்தரின் போதனைகள் மற்றும் மேலும் துறவற ஒழுங்குகளையும் தேவதத்தன் மாற்றியதாக குறிப்பிடுகின்றன.[157]
தேவதத்தன் பிரிந்த இதே நேரத்தின் போது அஜாதசத்ருவால் தலைமை தாங்கப்பட்ட மகத இராச்சியத்திற்கும், அவரை விட வயது முதியவரான மன்னர் பசேனதியால் தலைமை தாங்கப்பட்ட கோசல இராச்சியத்திற்கும் இடையில் ஒரு போர் ஏற்பட்டது.[158] அஜாதசத்ரு இதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் புத்தருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.[159]
கடைசி நாட்களும், பரிநிர்வாணமும்
[தொகு]புத்தரின் கடைசி நாட்கள், இறப்பு மற்றும் இவரது இறப்பை தொடர்ந்த நிகழ்வுகளின் முதன்மையான விளக்கமானது மகாபரினிப்பன சுத்தா (திக நிகயம் 16) மற்றும் அதன் பல்வேறு சமக்கிருத, சீன மற்றும் திபெத்திய மொழி இணை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[160] அனலயோவின் கூற்றுப் படி, இதில் சீன நூலான திர்க ஆகமம் 2, "மகாபரிநிர்வாண சூத்திரத்தின் சமக்கிருத துணுக்குகள்" மற்றும் "சீன மொழியில் தனி மொழிபெயர்ப்பாக பாதுகாக்கப்பட்டுள்ள மூன்று கருத்தாடல்களும்" இதில் அடங்கும்.[161]
மகாபரினிப்பன சுத்தா நூலானது போர் காலத்தின் போது புத்தரின் கடைசி ஆண்டை குறிப்பிடுகிறது. வஜ்ஜி நாடு மீது போர் தொடுக்க அஜாதசத்ரு முடிவு எடுத்ததுடன் இது தொடங்குகிறது. புத்தரிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒரு மந்திரியை அஜாதசத்ரு அனுப்புவதற்கு இது இட்டு சென்றது.[162] ஏழு நியதிகளை தொடர்ந்து செய்யும் வரையில் வஜ்ஜி நாட்டவர் செழிப்படைந்து வருவார்கள் என்ற பதிலை புத்தர் கூறுகிறார். பிறகு, இந்த ஏழு நியதிகளை புத்த சங்கத்தில் பின்பற்றுமாறு கூறுகிறார். புத்த சங்கத்தின்[h] எதிர் கால நலன் குறித்து புத்தர் அக்கறை கொண்டார் என்பதை இது காட்டுகிறது.
"வாடிக்கையாக அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள், ஒத்திசைவுடன் நடைபெறும் சந்திப்பு, பயிற்சியின் நியதிகளை மாற்றாமல் இருப்பது, தங்களுக்கு முன்னர் சங்கத்தில் இணைந்த அனுபவசாலிகளுக்கு மரியாதை செலுத்துதல், உலக ஆசைகளுக்கு இரையாகாமல் இருத்தல், காட்டில் துறவியாக வாழும் முறைக்கு உண்மையாக இருத்தல் மற்றும் தங்களது சொந்த விழிப்புணர்வை தக்க வைத்துக் கொள்ளுதல்" ஆகிய நியதிகளை கடைபிடிக்கும் வரையில் சங்கமானது தொடர்ந்து செழிப்படையும் என்று புத்தர் கூறினார். சங்கத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான அறநெறி நடத்தைகளின் பட்டியலையும் புத்தர் மேலும் அளித்தார்.[163]
புத்தரின் இறப்பிற்கு சற்று முன்னர் புத்தரின் இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் இறந்தனர் என்பதை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன.[164] மகாபரினிப்பன சுத்தா நூலானது தன்னுடைய வாழ்வின் கடைசி மாதங்களின் போது புத்தர் எவ்வாறு உடல் நலம் குன்றியதை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், தொடக்கத்தில் இவர் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டார். தனக்குப் பிந்தைய தலைவராக யாரையும் கூற இயலாது என புத்தர் கூறியதாகவும் இது குறிப்பிடுகிறது. ஆனந்தர் இதற்காக வேண்டிய போது புத்தர் கூறிய பதிலாக மகாபரினிப்பன சுத்தா நூலானது பின்வருவனவற்றை பதிவிட்டுள்ளது:[165]
ஆனந்தா, துறவிகளின் அமைப்பானது ஏன் என்னிடம் இதை எதிர்பார்க்கிறது? நான் தம்மத்தை போதித்துள்ளேன். "உள்" மற்றும் "வெளி" ஆகியவற்றுக்கு எந்த வித வேறுபாட்டையும் நான் கொடுக்கவில்லை. ததாகதனிடம் (ஒரு சில உண்மைகள் அதில் மறைக்கப்பட வாய்ப்புள்ள) "ஆசிரியரின் மூடப்பட்ட கை" என்று எதுவும் கிடையாது. "நான் அமைப்பின் தலைமையை ஏற்றுக் கொள்வேன்" அல்லது "அமைப்பானது என்னுடைய தலைமையின் கீழ் உள்ளது" என்று யாரேனும் எண்ணினால் அத்தகைய நபர் அமைப்பு குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ததாகதன் அத்தகைய முறையில் சிந்திப்பதில்லை. அமைப்பிற்காக ஏற்பாடுகளை ததாகதன் ஏன் செய்ய வேண்டும்? நான் இப்பொழுது முதுமையடைந்து விட்டேன், தளர்ந்துள்ளேன் … என்னுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டேன், எனக்கு 80 வயதாகிறது. பட்டைகளால் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் மூலம் இயக்கப்படும் ஒரு பழைய வண்டியைப் போல் ததாகதனின் உடலானது பட்டைகளால் இணைக்கப்பட்டதன் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது … எனவே ஆனந்தா உங்களுக்கென்ற தீவுகளைப் போல நீங்கள் வாழ வேண்டும், உங்களுக்கு நீங்களே புகலிடமாக இருக்க வேண்டும், வேறு எந்த புகலிடத்தையும் நீங்கள் தேடக்கூடாது; தம்மத்தை ஒரு தீவாகவும், தம்மத்தை ஒரு புகலிடமாகவும் கொள்ள வேண்டும், வேறு எந்த புகலிடத்தையும் தேடக்கூடாது... என்னுடைய காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ வாழும் இத்தகைய துறவிகள் தங்களிடமே ஒரு தீவையும், ஒரு புகலிடத்தையும் தேட வேண்டும், தம்மத்திடம் புகலிடத்தை தேட வேண்டும், வேறு எங்கும் அவர்கள் புகலிடம் தேடக்கூடாது, இந்த செயல் முனைப்பு மிக்கவர்கள் உண்மையிலேயே என் துறவிகளாவர், (பிறவிச் சுழற்சி என்ற) இருளை இவர்கள் வெற்றி கொள்வார்கள்.
பயணம் செய்து சில மேற்கொண்டவர்களுக்கு போதித்ததற்கு பிறகு புத்தர் தனது கடைசி உணவை உண்டார். சுந்தா கம்மரபுத்தா என்று பெயருடைய ஓர் இரும்பு கொல்லரிடமிருந்து யாசகமாக இந்த உணவை இவர் பெற்றார். இதன் பிறகு இவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னுடைய இறப்பிற்கு சுந்தாவின் இடத்தில் தான் உண்ட உணவு காரணமல்ல என்று அவருக்கு கூறுமாறு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். புத்தருக்கு கடைசி உணவாக இது அமைந்ததன் காரணமாக இந்த உணவானது உயர் நிலையை அடைந்தது என்றும் கூறுமாறு கூறினார்.[166] பிக்கு மெத்தனந்தோ மற்றும் செருமானிய இந்தியவியலாளர் ஆசுகர் வான் இனுபெர் ஆகியோர் உணவு விடமாக மாறியதால் அல்லாமல் வயது முதிர்வின் ஓர் அறிகுறியான மிகையான குடலுரிசார் குருதிக் குழாய் திசு இறப்பால் புத்தர் இறந்தார் என்று வாதிடுகின்றனர்.[167][168]
புத்தரின் கடைசி உணவின் துல்லியமான உணவு பொருட்கள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு காரணம் வேறுபட்ட புனித நூல் மரபுகள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தெளிவற்ற தன்மை ஆகியவை காரணமாகும். தேரவாத பௌத்த மரபானது புத்தருக்கு ஒரு வகை பன்றி இறைச்சி கொடுக்கப்பட்டது என்று பொதுவாக நம்புகிறது. அதே நேரத்தில், மகாயான பௌத்த மரபானது புத்தர் ஒரு வகை பூங்கிழங்கு அல்லது பிற காளான்களை உண்டார் என்று நம்புகிறது. பௌத்த சைவம் மற்றும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான நியதிகள் ஆகியவற்றின் மீதான வேறுபட்ட மரபு வழி பார்வைகளை இவை பிரதிபலிக்கின்றன.[169] நவீன அறிஞர்கள் கூட இந்த நிகழ்வில் முரண்படுகின்றனர். இது பன்றி இறைச்சியாகவோ அல்லது பன்றிகள் விரும்பி உண்ணும் ஒரு வகை தாவரமாகவோ அல்லது காளானாகவோ இது இருந்திருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.[m] எது எவ்வாறு இருந்தாலும், கடைசி உணவை குறிப்பிடும் எந்த ஓர் ஆதாரங்களும் புத்தரின் உடல் நலக்குறைவிற்கு இந்த கடைசி உணவு தான் காரணம் என குறிப்பிடவில்லை.[170]
மகாபரினிப்பன சுத்தா நூலின் படி, சுந்தாவுடனான உணவிற்கு பிறகு புத்தர் மிகவும் பலவீனமானதால் புத்தரும், அவரது சீடர்களும் பயணத்தை நிறுத்தினர். இதனால் குசி நகரத்தில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது. அங்கு குங்கிலிய மரங்களின் ஒரு தோப்பில் புத்தர் தங்குவதற்கு ஆனந்தர் ஓர் இடத்தை உருவாக்கினார்.[171][172] சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தான் கடைசி நிர்வாணத்திற்குச் செல்வேன் என்று அறிவித்ததற்குப் பிறகு, சங்கத்திற்கு ஒரு கடைசி பிக்குவை தானாகவே புத்தர் இணைத்தார். இந்த பிக்குவின் பெயர் சுபத்தா ஆகும்.[171] பிறகு சங்கத்திற்கான தனது கடைசி அறிவுரையாக, தன்னுடைய இறப்பிற்கு பிறகு தம்மமும், வினயமும் அவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் என்று புத்தர் மீண்டும் கூறினார். தன்னுடைய போதனை குறித்து யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். ஆனால், ஒருவரும் சந்தேகம் உள்ளதாக கூறவில்லை.[173] புத்தரின் கடைசி வார்த்தைகளாக "அனைத்து சங்கரங்களும் (ஒன்றாக இணைக்கப்பட்ட அமைப்புகள்) படிப்படியாக அழிவுறுகின்றன. தளரா ஊக்கத்துடன் (அப்பமதம்) உங்களுடைய இலக்குகளுக்காக கடும் முயற்சி செய்யுங்கள்" (பாளி: "வயதம்ம சங்கர அப்பமதேன சம்பதேதா") என்றார் என்று குறிப்பிடப்படுகிறது.[174][175]
பிறகு புத்தர் தனது கடைசி தியானத்தில் மூழ்கினார். பிறகு இறந்தார். பரிநிர்வாணம் என்று அறியப்படும் நிலையை அடைந்தார். பரிநிர்வாணம் (உடலின் இறப்பிற்கு பிறகு பிறவி சுழற்சி மற்றும் துன்பத்தின் முடிவை அடைவதை இது குறிக்கிறது) என்பதன் பொருள் கடைசி நிர்வாணம் என்பதாகும். நான்கு தியான நிலைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்ததற்கு பிறகு, நான்கு பொருட்படுத்த வேண்டியதல்லாத அடைதல்களையும், இறுதியாக நிரோத-சம்பத்தி என்று அறியப்படும் தியான நிலைக்குச் சென்று, தன்னுடைய இறப்பின் தருணத்தின் போது நான்காவது தியானத்திற்கு மீண்டும் வந்தார் என்று மகாபரினிப்பன சுத்தாவானது குறிப்பிடுகிறது.[176][172]
மறைவிற்கு பிந்தைய நிகழ்வுகள்
[தொகு]மகாபரினிப்பன சுத்தாவின் படி புத்தரின் இறப்பை தொடர்ந்து வந்த நாட்களை குசி நகரின் மல்லர்கள் இவரது உடலுக்கு பூக்கள், இசை மீட்டுதல் மற்றும் வாசனை திரவியங்களால் மரியாதை செலுத்தினர்.[177] உடலை எரியூட்டுவதற்கு முன்னர் மதிப்பிற்குரிய மூத்தவரான மகாகாசியபர் வருகை புரிந்து தனது மரியாதையை செலுத்தும் வரை சங்கமானது[h] காத்திருந்தது.[178]
பிறகு புத்தரின் உடலானது எரியூட்டப்பட்டது. இவரது எலும்புகள் உள்ளிட்டவை இவரின் வாழ்வுடன் தொடர்புடைய பொருட்களாக பாதுகாக்கப்பட்டன. மகதம், சாக்கியம் மற்றும் கோலியம் போன்ற பல்வேறு வட இந்திய இராச்சியங்களுக்கு மத்தியில் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.[179] தாது கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அல்லது மேடுகளில் இந்த பொருட்கள் வைக்கப்பட்டன. அந்நேரத்தில் இருந்த ஒரு பொதுவான இறுதிச் சடங்கு பழக்க வழக்கமாக இது இருந்தது. நூற்றாண்டுகள் கழித்து இவை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசு முழுவதும் பல புதிய தூபிக்களில் அசோகரால் இவை புனிதப்படுத்தப்பட்டன.[180][181] புத்த மதம் பரவிய நேரத்தில் புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் என்று கூறப்பட்டப் பொருட்களின் வரலாற்றை சுற்றிலும் பல்வேறு இயற்கைக்கு மீறிய புராணக் கதைகள் சுற்றியிருந்தன. இதை வைத்திருந்த ஆட்சியாளர்களின் ஆட்சியின் முறைமையை அதிகமாக்கின.
பல்வேறு புத்த நூல்களின் படி புத்தரின் இறப்பிற்கு பிறகு இவரது போதனைகளை சேகரித்து, ஒப்புவித்து, மனனம் செய்வதற்காக புத்த மாநாடுகள் சீக்கிரமே நடத்தப்பட்டன. சபையின் தலைவராக சங்கத்தால் மகாகாசியபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முதல் சபையின் வரலாற்றுத் தன்மை குறித்து மரபு வழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நவீன அறிஞர்கள் விவாதத்துக்கு உள்ளாக்குகின்றனர்.[182]
குடும்பம்
[தொகு]கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் – மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.[183] சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார்.
புத்தரின் கூற்றுக்கள்
[தொகு]புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.
புத்தரின் கொள்கைகள்
[தொகு]கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.
துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள்
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர்.
புத்தரின் சீடர்கள்
[தொகு]புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர், மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர்.
புத்தரும் பிற மதங்களும்
[தொகு]சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை.
மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார்.
புத்தரின் மற்ற பெயர்கள்
[தொகு]ததாகதர்
[தொகு]சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
மற்ற மதங்களில் புத்தர்
[தொகு]பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது.[184] ஆனால் தமிழகத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியே வந்த சைவ சித்தாந்தமும், ஶ்ரீ வைஷ்ணவமும் சாக்கியமுனி புத்தரை பரம விரோதியாக பாவிப்பது, பதிகங்களில் தெளிவாக பாடப்பட்டுள்ளது. பாகவத புத்தர் அந்தணர் குலத்தில் கீகட நகரத்தில் உதித்தவர் எனக்குறிப்பிடுவதால், சாக்கிய புத்தரை மற்றொருவராகக் கருதும் வழக்கமுள்ளது. சமணர் கழுவேற்றத்திற்கு முன், தன்னுடன் வாதிட்ட பௌத்தர் பெயர்களும் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரது அத்துவித ஸ்மார்த்தர்களும், அவரது வழியில் புத்தரை ஐற்பதில்லை.
பக்தி காலத்திற்கு முன்பான சங்க இலக்கியங்களில், பத்து அவதாரங்களில் புத்தர் இல்லை. பலராமர்தான் அதற்குமாறாக உள்ளார்
இந்திய புத்தர் கோயில்கள்
[தொகு]இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Cousins (1996), ப. 57–63. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FOOTNOTECousins199657–63" defined multiple times with different content - ↑ Norman (1997), ப. 33.
- ↑ Prebish (2008).
- ↑ பக். 22, அத். 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 7720 0399
- ↑ பக்கம் 35, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 7720 0399
- ↑ "பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி". Archived from the original on 2016-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
- ↑ Rawlinson, Hugh George. (1950) A Concise History of the Indian People, Oxford University Press. p. 46.
- ↑ Muller, F. Max. (2001) The Dhammapada And Sutta-nipata, Routledge (UK). p. xlvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1548-7.
- ↑ India: A History. Revised and Updated, by John Keay: "The date [of Buddha"s meeting with Bimbisara] (given the Buddhist "short chronology") must have been around 400 BCE."
- ↑ Smith 1924, ப. 34, 48.
- ↑ Schumann 2003, ப. 1–5.
- ↑ Carrithers 2001, ப. 3.
- ↑ Buswell 2003, ப. 352.
- ↑ Lopez 1995, ப. 16.
- ↑ Schumann 2003, ப. 10–13.
- ↑ Bechert 1991–1997.
- ↑ Ruegg 1999, ப. 82–87.
- ↑ 18.0 18.1 Narain 1993, ப. 187–201.
- ↑ Prebish 2008, ப. 2.
- ↑ Gombrich 1992.
- ↑ Hartmann 1991.
- ↑ Gombrich 2000.
- ↑ Norman 1997, ப. 39.
- ↑ Schumann 2003, ப. xv.
- ↑ Wayman 1997, ப. 37–58.
- ↑ 26.0 26.1 Vergano, Dan (25 November 2013). "Oldest Buddhist Shrine Uncovered In Nepal May Push Back the Buddha"s Birth Date". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
- ↑ Gombrich, Richard (2013), Recent discovery of "earliest Buddhist shrine" a sham?, Tricycle, archived from the original on 2015-09-10, பார்க்கப்பட்ட நாள் 2019-10-23
- ↑ Tan, Piya (21 December 2009), Ambaṭṭha Sutta. Theme: Religious arrogance versus spiritual openness (PDF), Dharma farer, archived from the original (PDF) on 9 ஜனவரி 2016, பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2019
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Samuels 2010, ப. 140–52.
- ↑ 30.0 30.1 Gombrich 1988, ப. 49.
- ↑ 31.0 31.1 Warder 2000, ப. 45. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FOOTNOTEWarder200045" defined multiple times with different content - ↑ Walshe 1995, ப. 20.
- ↑ 33.0 33.1 33.2 Keown & Prebish 2013, ப. 436. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FOOTNOTEKeownPrebish2013436" defined multiple times with different content - ↑ 34.0 34.1 Nakamura 1980, ப. 18. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FOOTNOTENakamura198018" defined multiple times with different content - ↑ Srivastava 1979, ப. 61–74.
- ↑ Srivastava 1980, ப. 108.
- ↑ Tuladhar 2002, ப. 1–7.
- ↑ 38.0 38.1 38.2 38.3 Huntington 1986. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FOOTNOTEHuntington1986" defined multiple times with different content - ↑ 39.0 39.1 "Lumbini, the Birthplace of the Lord Buddha". World Heritage Convention. UNESCO. Archived from the original on 31 July 2010. பார்க்கப்பட்ட நாள் 26 May 2011.
- ↑ Nagendra, Kumar Singh (1997). "Buddha as depicted in the Purāṇas". Encyclopaedia of Hinduism. Vol. 7. Anmol Publications. pp. 260–275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-168-7. பார்க்கப்பட்ட நாள் 16 April 2012.
- ↑ "The Astamahapratiharya: Buddhist pilgrimage sites". Victoria and Albert Museum. Archived from the original on 31 October 2012. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ 42.0 42.1 Gethin (1998), ப. 14.
- ↑ Trainor (2010), ப. 436–437.
- ↑ Gethin (1998), ப. 19.
- ↑ Beal (1875), ப. 37.
- ↑ Jones (1952), ப. 11.
- ↑ Beal (1875), ப. 41.
- ↑ Hirakawa (1990), ப. 21.
- ↑ 49.0 49.1 49.2 49.3 Samuel (2010).
- ↑ Hiltebeitel (2013).
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 8.
- ↑ Strong (2001), ப. 51.
- ↑ 53.0 53.1 Hirakawa (1990), ப. 24.
- [[[Wikipedia:Citing_sources|
page needed ]]]_63-0">↑ Dhammika (n.d.), ப. [page needed]. - ↑ Gethin (1998), ப. 14–15.
- ↑ Gombrich (1988), ப. 49–50.
- ↑ Thapar (2002), ப. 146.
- ↑ Turpie (2001), ப. 3.
- ↑ 59.0 59.1 Narada (1992), ப. 9–12.
- ↑ Strong (2001), ப. 55.
- ↑ Narada (1992), ப. 11–12.
- ↑ Hamilton (2000), ப. 47.
- ↑ Meeks (2016), ப. 139.
- ↑ Schumann (2003), ப. 23.
- ↑ Strong (2001), ப. 60.
- ↑ 66.0 66.1 Gethin (1998), ப. 15.
- ↑ Anālayo (2011), ப. 170.
- ↑ Wynne, Alexander (2019). "Did the Buddha exist?". JOCBS 16: 98–148.
- ↑ Schumann (2003), ப. 45.
- ↑ Schumann (2003), ப. 45–46.
- ↑ Anālayo (2011), ப. 173.
- ↑ Gethin (1998), ப. 21.
- ↑ Strong (2001), ப. 63.
- ↑ Gethin (1998), ப. 20.
- ↑ 75.0 75.1 Conze (1959), ப. 39–40.
- ↑ Warder (2000), ப. 322.
- ↑ 77.0 77.1 Schumann (2003), ப. 44.
- ↑ Strong (2001), Incitements to Leave Home.
- ↑ Monier-Williams 1899, ப. 483, entry note: .
- ↑ Analayo (2013).
- ↑ Beckwith (2015), ப. 30.
- ↑ Alexander (2019), ப. 36.
- ↑ Strong (2015), The Beginnings of Discontent.
- ↑ Narada (1992), ப. 15–16.
- ↑ Strong (2015), The Great Departure.
- ↑ Penner (2009), ப. 28.
- ↑ Strong (2001), The Great Departure.
- ↑ Hirakawa (1990), ப. 25.
- ↑ Marshall (1918), ப. 65.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 15.
- ↑ Upadhyaya (1971), ப. 95.
- ↑ Laumakis (2008), ப. 8.
- ↑ Schumann (2003), ப. 47.
- ↑ Anālayo (2011), ப. 175.
- ↑ Schumann (2003), ப. 48.
- ↑ Armstrong (2000), ப. 77.
- ↑ Narada (1992), ப. 19–20.
- ↑ Hirakawa (1990), ப. 26.
- ↑ Anālayo (2011), ப. 234–235.
- ↑ 100.0 100.1 Anālayo (2011), ப. 236.
- ↑ 101.0 101.1 Anālayo (2011), ப. 240.
- ↑ "The Golden Bowl". Life of the Buddha. Archived from the original on 3 March 2013. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012 – via BuddhaNet.
- ↑ "Maha-Saccaka Sutta: The Longer Discourse to Saccaka". Access to Insight. Translated by Bhikkhu, Thanissaro. 2008. (MN 36). Archived from the original on 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 19 May 2007.
- ↑ Anālayo (2011), ப. 243.
- ↑ Anderson (1999).
- ↑ Williams (2002), ப. 74–75.
- ↑ Lopez, Donald "Four Noble Truths". Encyclopædia Britannica.
- ↑ 108.0 108.1 "Dhammacakkappavattana Sutta: Setting the Wheel of Dhamma in Motion". Access to Insight. Translated by Bhikkhu, Thanissaro. 1993. Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ Gethin (1998), ப. 8.
- ↑ "nirvana". Encyclopædia Britannica. Archived from the original on 16 May 2008. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
- ↑ 111.0 111.1 Anālayo (2011), ப. 178.
- ↑ Gyatso (2007), ப. 8–9.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 30.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 30–35.
- ↑ Strong (2001), ப. 93.
- ↑ Strong (2001), ப. 94.
- ↑ Anālayo (2011), ப. 182.
- ↑ Anālayo (2011), ப. 183.
- ↑ 119.0 119.1 119.2 119.3 119.4 119.5 119.6 Boisselier, Jean (1994). The wisdom of the Buddha. New York: Harry N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-2807-8. இணையக் கணினி நூலக மைய எண் 31489012.
- ↑ 120.0 120.1 Anālayo (2011), ப. 185.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 44–45.
- ↑ Strong (2001), ப. 110.
- ↑ Strong (2001), ப. 113.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 48, 54–59.
- ↑ Strong (2001), ப. 116–117.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 64.
- ↑ Strong (2001), ப. 115.
- ↑ Malalasekera (1960), ப. 291–292.
- ↑ Strong (2001), ப. 131.
- ↑ 130.0 130.1 Schumann (2003), ப. 231.
- ↑ Strong (2001), ப. 132.
- ↑ Bhikkhu Khantipalo (1995). "Lay Buddhist Practice, The Shrine Room, Uposatha Day, Rains Residence பரணிடப்பட்டது 2 நவம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம்"
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 68.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 70.
- ↑ Strong (2001), ப. 119.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 78.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 79–83.
- ↑ Strong (2001), ப. 122.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 91.
- ↑ 140.0 140.1 Strong (2001), ப. 136.
- ↑ Anālayo (2016), ப. 40–41.
- ↑ Anālayo (2016), ப. 43.
- ↑ Anālayo (2016), ப. 79.
- ↑ Anālayo (2013b).
- ↑ Anālayo (2016), ப. 111–112.
- ↑ Anālayo (2016), ப. 127.
- ↑ Strong (2001), ப. 134.
- ↑ Schumann (2003), ப. 232–233.
- ↑ Jain (1991), ப. 79.
- ↑ Mahajan, V.D. (2016). Ancient India. S. Chand Publishing. p. 190.
- ↑ Schumann (2003), ப. 215.
- ↑ Schumann (2003), ப. 232.
- ↑ Anālayo (2011), ப. 198.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 257.
- ↑ Schumann (2003), ப. 236.
- ↑ Schumann (2003), ப. 237.
- ↑ Bhikkhu Sujato (2012), "Why Devadatta Was No Saint, A critique of Reginald Ray"s thesis of the "condemned saint"" பரணிடப்பட்டது 30 சனவரி 2020 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 280.
- ↑ Schumann (2003), ப. 239.
- ↑ Strong (2001), ப. 165.
- ↑ Anālayo (2014).
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 286–288.
- ↑ Strong (2001), ப. 165–166.
- ↑ Schumann (2003), ப. 244.
- ↑ Schumann (2003), ப. 246.
- ↑ "Maha-parinibbana Sutta", Digha Nikaya, Access insight, verse 56, archived from the original on 6 June 2011, பார்க்கப்பட்ட நாள் 5 March 2009
- ↑ Bhikkhu & von Hinüber (2000).
- ↑ Bhikkhu, Mettanando (15 May 2001). "How the Buddha died". Bangkok Post. Archived from the original on 14 November 2012. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012 – via BuddhaNet.
- ↑ Waley (1932), ப. 343–354.
- ↑ Strong (2001), ப. 176.
- ↑ 171.0 171.1 Schumann (2003), ப. 249.
- ↑ 172.0 172.1 Strong (2001), ப. 178.
- ↑ Schumann (2003), ப. 250.
- ↑ Wynne (2007), ப. 112.
- ↑ Strong (2001), ப. 183.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 324.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 327.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 330.
- ↑ Ñāṇamoli Bhikkhu (1992), ப. 331.
- ↑ Lopez, Donald "The Buddha"s relics". Encyclopædia Britannica.
- ↑ Strong (2007), ப. 136–137.
- ↑ Harvey, Peter (2013), An Introduction to Buddhism: Teachings, History and Practices (PDF) (2nd ed.), New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 88, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-88632-4
- ↑ கௌதம புத்தரின் வாழ்க்கை
- ↑ ஸ்ரீமத் பாகவதம்
துணை நூற்கள்
[தொகு]- பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 7720 0399
- பௌத்தமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி,2007, பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை, சென்னை-14 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 7735 374 8
குறிப்புகள்
[தொகு]- ↑
- 411–400: Dundas 2002, ப. 24: "...as is now almost universally accepted by informed Indological scholarship, a re-examination of early Buddhist historical material, […], necessitates a redating of the Buddha"s death to between 411 and 400 BCE..."
- 405: Richard Gombrich[20][18][21][22]
- Around 400: See the consensus in the essays by leading scholars in Narain, Awadh Kishore, ed. (2003). The Date of the Historical Śākyamuni Buddha. New Delhi: BR Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176463531..
- According to Pali scholar K. R. Norman, a life span for the Buddha of c. 480 to 400 BCE (and his teaching period roughly from c. 445 to 400 BCE) "fits the archaeological evidence better".[23] See also Notes on the Dates of the Buddha Íåkyamuni.
- ↑ In 2013, archaeologist Robert Coningham found the remains of a Bodhigara, a tree shrine, dated to 550 BCE at the Maya Devi Temple, Lumbini, speculating that it may possibly be a Buddhist shrine. If so, this may push back the Buddha"s birth date.[26] Archaeologists caution that the shrine may represent pre-Buddhist tree worship, and that further research is needed.[26]
Richard Gombrich has dismissed Coningham"s speculations as "a fantasy", noting that Coningham lacks the necessary expertise on the history of early Buddhism.[27]
Geoffrey Samuel notes that several locations of both early Buddhism and Jainism are closely related to இயக்கர்-worship, that several Yakshas were "converted" to Buddhism, a well-known example being வச்ரபானி,[28] and that several Yaksha-shrines, where trees were worshipped, were converted into Buddhist holy places.[29]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Buddha-statue
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 2.0 2.1 2.2 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;birthplace
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;dating
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;deathplace
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Based on stone inscriptions, there is also speculation that Lumbei, Kapileswar village, ஒடிசா, at the east coast of India, was the site of ancient Lumbini.(Mahāpātra 1977Mohāpātra 2000, ப. 114Tripathy 2014) Hartmann 1991, ப. 38–39 discusses the hypothesis and states, "The inscription has generally been considered spurious (…)" He quotes Sircar: "There can hardly be any doubt that the people responsible for the Kapilesvara inscription copied it from the said facsimile not much earlier than 1928."
- ↑ Some sources mention Kapilavastu as the birthplace of the Buddha. Gethin states: "The earliest Buddhist sources state that the future Buddha was born Siddhārtha Gautama (Pali Siddhattha Gotama), the son of a local chieftain—a rājan—in Kapilavastu (Pali Kapilavatthu) what is now the Indian–Nepalese border."[42] Gethin does not give references for this statement.
- ↑ According to Geoffrey Samuel, the Buddha was born into a Kshatriya clan,[49] in a moderate Vedic culture at the central Ganges Plain area, where the shramana-traditions developed. This area had a moderate Vedic culture, where the Kshatriyas were the highest varna, in contrast to the Brahmanic ideology of Kuru–பாஞ்சாலம், where the Brahmins had become the highest varna.[49] Both the Vedic culture and the shramana tradition contributed to the emergence of the so-called "Hindu-synthesis" around the start of the Common Era.[50][49]
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Upaddha
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ An account of these practices can be seen in the Mahāsaccaka-sutta (MN 36) and its various parallels (which according to Anālayo include some Sanskrit fragments, an individual Chinese translation, a sutra of the Ekottarika-āgama as well as sections of the Lalitavistara and the Mahāvastu).[99]
- ↑ According to various early texts like the Mahāsaccaka-sutta, and the Samaññaphala Sutta, a Buddha has achieved three higher knowledges: Remembering one"s former abodes (i.e. past lives), the "Divine eye" (dibba-cakkhu), which allows the knowing of others" karmic destinations and the "extinction of mental intoxicants" (āsavakkhaya).[100][103]
- ↑ Scholars have noted inconsistencies in the presentations of the Buddha"s enlightenment, and the Buddhist path to liberation, in the oldest sutras. These inconsistencies show that the Buddhist teachings evolved, either during the lifetime of the Buddha, or thereafter. See:
* (Bareau 1963)
* (Schmithausen 1981)
* (Norman 2003)
* (Vetter 1988)
* (Gombrich 2006a, Chapter 4)
* (Bronkhorst 1993, Chapter 7)
* (Anderson 1999) - ↑ Anālayo draws from seven early sources:[141]
- the Dharmaguptaka Vinaya in Four Parts, preserved in Chinese
- a *Vinayamātṛkā preserved in Chinese translation, which some scholars suggest represents the Haimavata tradition
- the Mahāsāṃghika-Lokottaravāda Vinaya, preserved in Sanskrit
- the Mahīśāsaka Vinaya in Five Parts, preserved in Chinese
- the Mūlasarvāstivāda Vinaya, where the episode is extant in Chinese and Tibetan translation, with considerable parts also preserved in Sanskrit fragments
- a discourse in the Madhyama-āgama, preserved in Chinese, probably representing the Sarvāstivāda tradition
- a Pāli discourse found among the Eights of the Aṅguttara-nikāya; the same account is also found in the Theravāda Vinaya preserved in Pāli
- ↑ Waley notes: suukara-kanda, "pig-bulb"; suukara-paadika, "pig"s foot" and sukaresh.ta "sought-out by pigs". He cites Neumann"s suggestion that if a plant called "sought-out by pigs" exists then suukaramaddava can mean "pig"s delight".
Cousins, L.S. (1996). "The Dating of the Historical Buddha: A Review Article". Journal of the Royal Asiatic Society. 3 6 (1): 57–63. doi:10.1017/s1356186300014760. பன்னாட்டுத் தர தொடர் எண்:1356-1863. http://indology.info/papers/cousins. பார்த்த நாள்: 4 April 2006.