கோல்பாரா
கோல்பாரா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கோல்பாரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°10′N 90°37′E / 26.17°N 90.62°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கோல்பாரா |
அரசு | |
• நிர்வாகம் | கோல்பாரா நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 48,911 |
மொழி | |
• அலுவல் | அசாமி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-18 |
இணையதளம் | goalpara |
கோல்பாரா (Goalpara) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு மேற்கே 134 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து.
புவியியல்
[தொகு]கோல்பாரா நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[2]இது கடல்மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் உள்ளது. கோல்பாரா நகரத்தைச் சுற்றிலும் ஹலுகண்டா மலைகள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 19 வார்டுகளும், 11,617 வீடுகளும் கொண்ட கோல்பாரா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 53,430 ஆகும். அதில் 26,970 ஆண்கள் மற்றும் 26,460 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6125 (11.46%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.77% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 44.99%, முஸ்லீம்கள் 53.65%, கிறித்தவர்கள் 0.83% மற்றும் பிறர் 0.53% ஆகவுள்ளனர்.[3] இந்நகரத்தில் வங்காளதேச முஸ்லீம்கள் மக்கள்தொகை பெரும்பான்மையாக உள்ளது. [4]
தொடருந்து நிலையம்
[தொகு]கவுகாத்தி-கொல்கத்தா-தில்லி-சென்னை-மும்பை-பெங்களூரு-திருவனந்தபுரம் செல்லும் தொடருந்துகள், கோல்பாரா தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. [5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin Code of Goalpara". citypincode.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ Falling Rain Genomics, Inc - Goalpara
- ↑ Goalpara Population Census 2011
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Goalpara Railway Station
- ↑ GOALPARA TOWN GLPT Railway Station Trains Schedule