கோரிப்பாளையம் தர்கா
கோரிப்பாளையம் தர்கா, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள (மதுரை நகரின் ஒரு பகுதி) ஒரு இசுலாமிய அடக்கத்தலமாகும். இங்கு யேமனைச் சேர்ந்த அசரத் காஜா சையது அலாவுத்தீன் பாதுசா ராசி மற்றும் மதுரை சுல்தானகத்தின் அசரத் காஜா சையது சுல்தான் சமசுத்தீன் ஆகிய இருவரின் கல்லறைகளும் அமைந்துள்ளன. இது மட்டுமன்றி இந்தியாவிற்கு இசுலாத்தை பரப்ப வந்த அசரத் காஜா சையது சுல்தான் அபிபுத்தீன் ராசியின் (கைபி சுல்தான் என அறியப்படுபவர்) மறை கல்லறையும் இங்கு உள்ளது.[1] இக்கல்லறை 70 அடிகள் (21 m) விட்டமும், 20 அடிகள் (6.1 m) உயரத்துடன் அழகர் மலையில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. இது திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
வரலாறு
[தொகு]கோரிப்பாளையம் என்ற பெயர் பாரசீக வார்த்தையான கோர் என்பதிலிருந்து வந்தது. இதற்கு கல்லறை என்பது பொருள். எனவே தான் இப்பகுதி கோரிப்பாளையம் என அழைக்கப்படுகிறது. வைகையின் வடகரையில் அமைந்துள்ள இக்கல்லறைகள் வைகை ஆற்றின் பாலத்தின் மீது செல்லும் போதே தென்படும் வண்ணம் உயரமானவை. காசிமார் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மதுரை மக்பராவின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் பண்டைய தமிழ் கல்வெட்டு இத்தர்காவின் பழமைக்குச் சான்றாக உள்ளது.[2]
கந்தூரி விழா
[தொகு]இத்தர்காவின் கந்தூரி (உரூசு) விழா ஒவ்வொரு ஹிஜிரி ஆண்டு ரபியுல் அவ்வல் பதினைந்தாம் இரவில் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ↑ http://books.google.co.in/books?id=ta6AD7MNFioC&pg=PA109&dq=goripalayam&hl=en&sa=X&ei=TMoeUrjYNJHprQfy_4HQAQ&ved=0CDsQ6AEwAw#v=onepage&q=goripalayam&f=false
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-16. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.