உள்ளடக்கத்துக்குச் செல்

கோப் வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோப் வைரம்
எடை45.552 காரட்டுகள் (9.1104 g)
நிறம்அடர் சாம்பல் நீலம்
வெட்டுபழங்கால மெத்தை
மூல நாடு இந்தியா
எடுக்கப்பட்ட சுரங்கம்கொல்லூர் சுரங்கம்
கண்டுபிடிப்புதெரியாது. தற்போதைய சான்று முதலில் 1812 இல் நகை வியாபாரி டேனியல் எலியசனின் சரக்குகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
வெட்டியவர்தெரியாது. 1791 க்குப் பிறகு டேவர்னியர் பிரஞ்சு நீல வைரத்திலிருந்து மீண்டும் வெட்டப்பட்டதுதிரும்பப் பெறுங்கள்; 1949 மற்றும் 1958 க்கு இடையில் ஹாரி வின்ஸ்டன் சற்று மாற்றியமைத்தார்
உண்மையான உடைமையாளர்தெரியாது. ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர்
பிரான்சின் பதினான்காம் லூயி
ஹென்றி பிலிப் ஹோப்; உட்பட பல உரிமையாளர்கள்.
தற்போதைய உடைமையாளர்சிமித்சோனிய நிறுவனம் மற்றும் அமெரிக்க மக்கள்
கணப்பிடப்பட்ட பெறுமதி$200–$350 million USD
Picture of a diamond.
1974 இல் ஹோப் வைரம்

ஹோப் வைரம் (Hope Diamond) என்பது உலகின் மிகப் பிரபலமான இரத்தினக்கற்களில் ஒன்றாகும். இதன் உரிமையாளர் குறி்த்த பதிவுகளானது கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. போரான் அணுக்களின் சுவடு அளவு காரணமாக இது மிகவும் போற்றப்படும் அரிய நீல நிற வைரமாக உள்ளது. இது 45.52 காரட் எடையுள்ளது.

இந்த இரத்தினக் கல்லானது இந்தியாவில் தோன்றியதாக நம்ப்படுகிறது. இந்த அசல் (பெரிய) கல்லானது 1666 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ரத்தின வணிகர் ஜீன்-பாப்டிஸ்ட் தாவர்னீரால் டாவர்னியர் புளூ என்ற பெயர்கொண்ட வைரக்கல்லாக வாங்கப்பட்டது.[1] தாவர்னீரால் புளூ வைரக்கல் வெட்டப்பட்டு பிரெஞ்சு நீலம் ( லு புளூ டி பிரான்ஸ் ) என்ற பெயர் சூட்டப்பட்டு, 1668 ஆம் ஆண்டு தாவர்னீரால் அரசர் லூயிஸ் XIV க்கு விற்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டில் இந்த வைரம் திருடப்பட்டது. பின்னர் பல கைகளில் மாறிவந்த இந்த வைரமானது, 1839 ஆம் ஆண்டில் இலண்டனில் ஹோப் அண்ட் கோ என்ற நிறுவன உரிமையாளரால் வாங்கப்பட்டு அவரின் குடும்பத்தின் இரத்தின சேகரிப்பில் இருந்தபோது இது "ஹோப்" பெயரைப் பெற்றது. அதன்பிறகு ஏராளமான உரிமையாளர்களிடமிருந்து கடந்து சென்று, அது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவாலின் வால்ஷ் மெக்லீனுக்கு விற்கப்பட்டது. அவர் அடிக்கடி இதை அணிந்திருந்தார். பின்னர் இது 1949 ஆம் ஆண்டில் நியூயார்க் இரத்தின வணிகரான ஹாரி வின்ஸ்டன் என்பவரால் வாங்கப்பட்டது, அவர் அதை 1958 ஆம் ஆண்டில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு பரிசாக வழங்கினார். அதன் பின்னர் இந்த வைரமானது நிரந்தரமாக அருங்காட்சியக கண்காட்சியில் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Wise, Richard W. (2010). "Historical Time Line, The French Blue / Part III". The French Blue. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்_வைரம்&oldid=3715277" இலிருந்து மீள்விக்கப்பட்டது