கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி
கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி | |
---|---|
இரயில்வே அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி | |
மத்திய இணை அமைச்சர், இந்திய இரயில்வே அமைச்சகம் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 ஜனவரி 2014 | |
பின்னவர் | மனோஜ் சின்கா |
தொகுதி | கர்நூல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1951 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கே. சுஜாதா |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
வாழிடம் | கர்நூல் |
As of 16 September, 2006 மூலம்: [permanent dead link] |
கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி (Kotla Jayasurya Prakasha Reddy) (பிறப்பு 18 செப்டம்பர் 1951) இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] மேலும் இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் ஐதராபாத்தில் சியாமளா தேவி மற்றும் முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஐதராபாத்து நிசாம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்
[தொகு]ரெட்டி, முதன்முதலில் 1991 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முறையே 14 மற்றும் 15 வது மக்களவைக்கு கர்நூல் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார்.