உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (KOTTAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மேலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொட்டாம்பட்டியில் இயங்குகிறது.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக வளர்மதி என்பவரும், துணைப் பெருந்தலைவராக கௌசல்யா குலோத்துங்கன் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர் சமூகத்தினரே பெரும்பான்மையாக கிட்டத்தட்ட 85% க்கும் மேல் வசிக்கின்றனர்.


பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Madurai District Census, 2011
  3. கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 27 கிராம ஊராட்சிகள்