கொடைக்கானல் பாதரச நஞ்சு
கொடைக்கானல் பாதரச நஞ்சு (Kodaikanal mercury poisoning) என்பது கொடைக்கானலில் இருந்த பாதரச வெப்பமானி தயாரிப்புத் தொழிற்சாலையான (ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்) இருந்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பாதரச வெப்பமாணியை தயாரித்து அதன் தயாரிப்பு செயல்முறையினால் ஏற்பட்ட பாதரச மாசுபாடுகளை நிரூபித்த வழக்கு ஆகும். இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளால் 2001 இல் தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் இதிலிருந்து இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களின் பொறுப்பின்மை மற்றும் பெருநிறுவனங்களின் அலட்சியம் போன்ற சிக்கல்கள் வெளிவரக் காரணமாயிற்று.
கொடைக்கானல்
[தொகு]கொடைக்கானலானது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பழனி மலைகளில் உயரமான இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலம் ஆகும். இது மார்ச் மாதம் முதல் சூன் மாதம் வரையிலான கோடைகாலத்தில் இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை பார்வையிடும் தென்னிந்தியாவின் பிரபலமான இடமாகும். கொடைக்கானலானது 1845 ஆம் ஆண்டு பிரித்தானிய ராஜ்ஜியத்தில், இந்தியாவின் சமவெளிகளில் நிலவும் உயர்ந்த வெப்பநிலையில் இருந்து மற்றும் வெப்பமண்டல நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் இடமாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இப் பிராந்தியத்தின் பொருளாதாரம் சுற்றுலாவினால் செழித்து வளர்கிறது, விருந்தோம்பல் தொழிற்துறையின் வளர்ச்சியால் அதிக எண்ணிக்கையிலான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் இப்பகுதியில் தோன்றியுள்ளன. மேலும் கொடைக்கானலானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், அரிதான குறிஞ்சிப் பூக்களின் இடமாகவும் உள்ளது. இப்பூக்கள் பூக்கும் பருவத்தில் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகளை கொடைக்கானல் ஈர்க்கிறது.
பாதரசம் மற்றும் அதன் பாதிப்புகள்
[தொகு]பாதரசம் என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இது சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் இருக்கும். சிறிய அளவிலான பாதரசம் கூட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஆபத்தானது ஆகும். பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன. பாதரசமானது வெப்பமானி, காற்றழுத்தமானி, ஸ்பைக்மோமோனியோமீட்டர்கள் மற்றும் உடனொளிர்வு விளக்குகள் போன்ற தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் மெல்லமெல்ல, பாதரசம் சார்ந்த சாதனங்களைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டு வருகின்றது, மேலும் பாதரச சாதனங்களுக்கு பதிலாக எண்ணியல் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
கொடைக்கானலில் பாதரச நச்சு
[தொகு]கொடைக்கானலில் இயங்கிவந்த ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் வெப்பமானி ஆலையினால் கொடைக்கானல் பகுதியில் பாதரச மாசுபாடு ஏற்பட்டது. மாசுபடுத்தும் தொழில்கள் தொடர்பாக வளர்ந்த நாடுகளில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அமேரிக்காவில் இருந்த பாண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வெப்பமானி தொழிற்சாலையை பிரித்து, 1982 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு மாற்றிப்பட்டது. 1987 ஆம் ஆண்டு, பான்ட்ஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்த வெப்பமானி தொழிற்சாலையானது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திடம் கைமாறியது.[2]
இந்த தொழிற்சாலை அமெரிக்காவிலிருந்து பாதரசத்தை இறக்குமதி செய்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு வெப்பமானிகளை ஏற்றுமதி செய்தது. 2001 ஆம் ஆண்டய காலகட்டத்தில், தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலருக்கு சிறுநீரகம் மற்றும் அது தொடர்புடைய நோய்பாதிப்புகளுக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன. பாதரசத்துக்கு எதிரான தமிழ்நாடு கூட்டணி (TNAAC) போன்ற பொது நலக் குழுக்களானது நிறுவனம் முறையான நெறிமுறைகளை பின்பற்றாமல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதாகக் கூறினர். 2001 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொது நலக் குழுக்கள் உடைந்த கண்ணாடி வெப்பமாணிகளின் ஒரு குவியலைக் கண்டறிந்தன, அவை சோலைக்காடு வனத்தின் உட்பகுதியிலிருந்தன, அவை தொழிற்சாலையில் இருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்தது.[3] மார்ச் மாதத்தில், உள்ளூர் தொழிற் சங்கம் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் தலைமையில் பொதுமக்கள் தொழிற்சாலையை மூடக்கோரிப் போராடினர். விரைவில் நிறுவனமானது பாதரசத்தால் மாசுபடுத்தப்பட்ட கழிவுகளை அகற்றுவதாக ஒப்புக் கொண்டது.[4][5] 2002 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஆண்ட றிக்கையிலும் அதன் அண்மை நிலைத்தன்மை அறிக்கையிலும் தனது தொழிற்சாலைக்கு பின்னால் உள்ள நிலத்தில் பாதரச மாசுபட்டுக்குள்ளான கண்ணாடிக் கழிவுகளை மூடிவிடவில்லை என்றது. ஆனால் 5.15 மெட்ரிக் டன் கண்ணாடி அளவில் 0.15% எஞ்சியுள்ள பாதரசம் மட்டுமே தொழிற்சாலைகளில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குப்பை மறுசுழற்சி செய்யும் காய்லான் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்றது. மேலும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆலோசகரால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை மேற்கோளிட்டு யுனிலீவர் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கோ[6] அல்லது சுற்றுச்சூழலிலுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியது.[7]
திருப்பி அனுப்பும் கோரிக்கை
[தொகு]தொழிற்சாலை மூடப்பட்டவுடன், அங்கு மீதமுள்ள பாதரசக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், தொழிற்சாலை வளாகத்தை தூய்மையாகவும், தொழிலாளர்களின் உடல்நல பாதிப்புகளை கவணிக்கவேண்டியும் செயற்பாட்டாளர்கள் கோரினர். கிரீன்பீஸ் தலைமையில் உள்ளூர் அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கம், அரசாங்கப் பிரதிநிதிகள், நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கினர்.[8]
பொது மக்களின் அமைப்புகள் மற்றும் தொழிலாளர் போன்றோர் ஒத்துழைப்புடன் கிரீன்பீஸ் பிரச்சாரகர் அமிர் சாகுல் நிறுவனத்தால் ஷோலா வனப்பகுதியில் கொட்டப்பட்ட 290 டன் பாதரசத்தை சேகரித்து, அதை மறுசுழற்சிக்கு அமெரிக்காவிற்கு அனுப்பக்கோரி 2003 இல் வலியுறுத்தினார்.[9][10] இது ஊடகங்களால் 'reverse dumping' என்று பாராட்டப்பட்டது.[11] கிரீன்பீஸ் பிரச்சாரகர்கள் அமீர் சாஹூல் மற்றும் நவ்ரோஸ் மோடி ஆகியோர் குழுக்களை வழிநடத்தி,[12] அதன்வழியாக இந்திய அரசின் அணுசக்தித் துறையால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது, இதில் கொடைக்கானலில் வளிமண்டலத்தில் இயல்பான அளவை விட பாதரச நிலையானது 1000 மடங்குக்குக்கும் அதிகமாக இருந்தது என அறியப்பட்டது.[13][14][15] அணுசக்தித் துறை அறிவியலாளர் குழுவினால் கொடைக்கானல் ஏரிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர், வண்டல் மற்றும் மீன் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்பட்டதில், பாதரச வெளியேற்றம் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதரசம் அளவு உயர்ந்த அளவில் இருப்பதைக் காட்டியது.[16] சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தொழிற்சாலையில் பாதரசத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் தொடர்ச்சியாக அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்பட்டன.[17]
தளத்தை சரிசெய்தல்
[தொகு]கிரீன்பீஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன சூழலியல் மாசுபாடு குற்றத்துக்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டி அழுத்தம் கொடுத்தன.[18] மேலும் அவை நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர ஒழுங்குமுறைக் குழுக்களைக் கேட்டுக் கொண்டன.[19] 2006 ஆம் ஆண்டு, வெப்பமானி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட ஆலை, இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் மாசுபட்டவையாக கருதி தொழில்துறையில் மறுசுழற்சி செய்யத்தக்க காய்லான் பொருள்களாக மாற்றப்பட்டன. அடுத்த ஆண்டு, ஆலையினால் மாசுபடுத்தப்பட்ட மண் போன்ற சிக்கல்களின் தீர்வுக்காக தொழிற்சாலைகளில் நீரி நிறுவனமானது (NEERI) சோதனைகளை நடத்தியது. அது மண் கழுவுதல் மற்றும் வெப்ப மறுபயன்பாட்டின் மாற்று நெறிமுறையை போன்றவற்றை பரிந்துரைத்தது. இறுதியாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (தமாகவா) மண்ணில் உள்ள பாதசர செரிவை சரிசெய்ய, மண்ணில் 20 மில்லி / கி.கி. பாதரச செறிவு வரையிலான ஒரு மாற்று சிகிச்சை தரத்தை பரிந்துரைத்தது, அதாவது மாற்று சிகிச்சை முறை 20 மில்லி / கி.கி. இதன் விளைவாக, 2009 மே மாதம் முன்கூட்டியே சீராக்கும் வேலை தொடங்கியது.[20]
பொது நலக் குழுக்கள் மண் தூய்மைப்படுத்தும் அளவுகோல்களை எதிர்த்தும், யூனிலீவர் செலவுகளை குறைக்க குறைந்த தரத்தில் சுத்தமாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் உதவுவதாக குற்றம்சாட்டின. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதரச அளவானது யுனிலீவர் நிறுவனம் இதுபோன்ற மாசுபாட்டை இங்கிலாந்தில் ஏற்படுத்தியிருந்தால், இவர்கள் நிர்ணயித்ததைவிட குறைந்தது 20 மடங்கு தூய்மையாக்கவேண்டி இருக்கும் என்றனர். சுத்திகரிப்பு மற்றும் தூய்மையாக்கல் போன்றவற்றிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
தொழிலாளர் உடல் கோளாறுகள்
[தொகு]தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர், பெங்களூர் சமூக நல மையத்தில் இருந்து சுகாதார வல்லுநர்கள் தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்களிலிடம் ஒரு ஆய்வை நடத்தினர்.[21] அதில் தொழிலாளர்களிடையே பாதரச நச்சுத்தன்மையின் அறிகுறிகளான தோல் ஒவ்வாமை மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் போன்றவற்றைக் கண்டறிந்தனர்.
கொடைக்கானல் தொழிற்சாலையானது 2001 ஆம் ஆண்டு மூடப்படுவதற்கு முன் மேம்பட்ட தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் இருந்ததாக நிறுவனம் கூறியது[22][23] தொழிற்சாலையில் இருந்த உள் கண்காணிப்பு மற்றும் தொழிற்சாலை செயல்பாட்டின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நடத்தப்பட்ட வெளிப்புற தணிக்கை ஆகியவை தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்த காலகட்டத்தைப் பொறுத்தமட்டில் தொழிலாளர்களிடம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைக் காட்டின.
நிறுவனமானது அதன் தொழில் சுகாதார கண்காணிப்பு அதன் முடிவுகளை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மற்றும் தொழில் சுகாதார தேசிய நிறுவனம் (NIOH) ஆகியவை ஒப்புக்கொண்டதாகக் கூறியது.
2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்களின் ஒரு குழுவானது, புதிய சுகாதார ஆய்வை நடத்தி, தங்களுக்கு பொருளாதார மறுவாழ்வு கோரி சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். ஒரு வருடம் கழித்து, தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உடல் நலச் சிக்கல்களுக்கு அவர்கள் அதற்கு முன்பு இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட பாதரச கசிவுதான் காரணமா என ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஐ.டி.ஆர்.சி., எய்ம்ஸ் மற்றும் என்.ஐ.ஓ.ஹெச்.எல் ஆகியவற்றின் பிரதிநிதிகளையுடைய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைத்தது. இந்தக் குழுவானது 2007 அக்டோபரில் தொழிற்சாலைக்கு விஜயம் செய்தும் அதைத் தொடர்ந்து முன்னாள் தொழிலாளர்களை ஆய்வு செய்த பின்னர் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "தொழிற்சாலையின் தொழிலாளர்களின் தற்போதைய மருத்துவ நிலைக்கும் " கடந்த காலத்தில் தொழிற்சாலைகளில் பாதரசத்தின் வெளிப்பாடுக்கும் " தொடர்பு என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டது. இந்த அறிக்கை ஏற்று, சென்னை உயர்நீதி மன்றம், புதிய சுகாதார ஆய்வுக்கான தேவை என்ற கோரிக்கையை நிராகரித்தது. இதற்கிடையில், வழக்கு தொடர்புடைய ஒரு பிரதிவாதியுடனான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு அமைச்சகம் பல்வேறு துறைகளில் உள்ள வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினால் ஒரு விரிவான ஆய்வு நடத்தியது. அதில் தொழிலாளர்களின் குழந்தைகள் கூட, பாதரசத்தின் வெளிப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றது. அமைச்சகம் 2011 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு பாதரசத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதைப் பொறுத்து, தொழிலாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் வேலை இழப்பீட்டு ஆணையரிடம் இழப்பீடு பெறலாம் என்பதை ஆய்வு செய்ய பரிந்துரைத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முன்பே வழக்கு தொடரப்பட்டுள்ளது.[24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Hindu,
- ↑ Los Angeles, Times. "Unilever Acquires Chesebrough Ponds Globally". LA Times. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ Lawrence M, Salinger. "Encyclopedia of White-Collar & Corporate Crime, Volume 1". Sage Publications. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Basel Action Network, NGO. "Hindustan Lever admits dumping Mercury Waste". Ban NGO. Archived from the original on 28 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Toxic, Link. "Hindustan Lever Admits Dumping Mercury Waste". Toxic Link. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.
- ↑ "Update on Kodai for online sustainability report for Unilever.com" (PDF). Archived from the original (PDF) on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "HINDUSTAN LEVER LIMITED Report and Accounts 2002" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Hindu, Business Line. "Mercury Waste to Leave for NY". The Hindu. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
:|first=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ New York, Times. "Unilever's Mercury Waste Sends Backs to the US". NY Times. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ High, Beam. "Mercury Waste Sends Back to the US". High Beam. Archived from the original on 11 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Times of India, New Delhi. "First Ever Case of Reverse Dumping". Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Fernando, A C (1 Sep 2010). Business Ethics And Corporate Governance. New Delhi: Pearson Education India. p. 9.14.
- ↑ Journal, Environmental Pollution. "Studies of mercury pollution in a lake due to a thermometer factory situated in Kodaikkanal". Elsevier.
{{cite web}}
:|access-date=
requires|url=
(help); Missing or empty|url=
(help)Missing or empty|url=
(help);|access-date=
requires|url=
(help) - ↑ Deccan, Herald. "Closed Unilver factory source of Mercury Pollution". Deccan Herald. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Greenpeace, International. "Mercury Levels in Kodai still High". Greenpeace. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ Journal, Environmental Pollution. "Mercury pollution in a lake due to a thermometer factory situated in Kodaikkanal". Elsevier. பார்க்கப்பட்ட நாள் 6 February 2014.
- ↑ Cuddalore, SIPCOT. "Studies and Reports on environmental pollution and public health hazard caused by Hindustan Lever in Kodaikanal". SipcotCuddalore. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Greenpeace, International. "Prosecute HLL for Forest Crimes". Greenpeace. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ Greenpeace, International. "Prosecute HLL". Greenpeace. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ Unilever, Inc. "Facts About Kodaikanal Thermometer Factory". Unilever. Archived from the original on 4 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
:|first=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ Health, Problems. "Workers Health Issues due to Mercury Exposure". India Together. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ "Kodaikanal Mercury Factory – Contamination Response, India". Archived from the original on 17 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Latest response from HUL". Archived from the original on 6 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Unilever. "Workers Health Issues and Unilever's Stand". Unilever. Archived from the original on 4 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)