கேப்ரிவி
கேப்ரிவி கீற்று(Caprivi Strip) என்பது நமீபியா நாட்டின், வடகிழக்கு மூலையில் இருந்து நீண்டுகொண்டிருக்கும் புவியியல் முக்கியத்துவம் உள்ள நிலப்பகுதி ஆகும். இதனை சுருக்கமாக, காப்ரிவி என்றும் அழைக்கப்பர். இந்நிலப்பகுதிக்கு, தெற்கே போட்ஸ்வானாவும், வடக்கே அங்கோலா, சாம்பியா நாடுகள், எல்லைகளாக உள்ளன. நமீபியா, போட்ஸ்வானா, சாம்பியா ஆகியவை, இக்கீற்றின் கிழக்கு முனையில் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இது ஜிம்பாப்வே யின் 150 m (490 அடி)க்குள், கிட்டத்தட்ட ஒரு நாற்கரத்தை உருவாக்குகிறது. பேட்சுவானாவும், சாம்பியாவும் 150-மீட்டர் (490 அடி)அளவு நிலத்தினை, இதன் எல்லைக்காக பகிர்கிறது. இதனால் காசுன்குலா (Kazungula) எல்லைக்குள் புக முடிகிறது. உலகின் முக்கிய அருவியான விக்டோரியா அருவியை, இந்த நிலப்பகுதியில் ஓடும், சாம்பசி ஆறு வழியே அடைய இயலும். இதற்கு செருமானிய ஆப்பிரிக்காவின் தென்மேற்கு, கிழக்குப் பகுதிகள் வழிவகுக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jacobs, Frank (5 December 2011). "A Few Salient Points". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 17 October 2013.