உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்லர்-90

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லர்-90

கெப்லர்-90 பல்கோள் தொகுதியும் அதன் உட்சூரியக் குடும்பத்தொகுதியும் ஒரு ஒப்பீடு (14 டிசம்பர் 2017).
நோக்கல் தரவுகள்
ஊழி 2000      Equinox 2000
பேரடை டிரேக்கோ
வல எழுச்சிக் கோணம் 18h 57m 44.038s[1]
நடுவரை விலக்கம் 49° 18′ 18.58″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14
இயல்புகள்
விண்மீன் வகைG0V
வான்பொருளியக்க அளவியல்
தூரம்2545[2] ஒஆ
(780[2] பார்செக்)
தனி ஒளி அளவு (MV)-0.5
விவரங்கள்
திணிவு1.2 ± 0.1[2] M
ஆரம்1.2 ± 0.1[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.4[2]
வெப்பநிலை6080 260
−170
[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)4.6 ± 2.1[2] கிமீ/செ
அகவை~2 பில்.ஆ
வேறு பெயர்கள்
KIC 11442793, KOI-351
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கெப்லர்-90 (Kepler-90) என்பது புவியிலிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் நீண்ட அரவ விண்மீன் குழாமில் காணப்படும் ஒரு விண்மீன் ஆகும். இது சூரியக் குடும்பத்தைப் போன்றே சமமான எண்ணிக்கையிலான கோள்களைக் கொண்டுள்ளமைக்காக குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

2017 டிசம்பர் 14 இல் நாசா மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து கெப்லர் 90 விண்வெளிக் குழுமத்தில் கெப்லர்-90ஐ என்ற எட்டாவது கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அறிவித்தன: இந்த கண்டுபிடிப்பானது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முறை செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றலைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது.[3][4][5]

பெயரிடு முறை மற்றும் வரலாறு

[தொகு]

கெப்லர் திட்டத்தின் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய உற்றுநோக்கலுக்கு முன்னதாக கெப்லர்-90, 2 மைக்ரான் அனைத்து வான் கணக்கெடுப்பு (2MASS) தொகு பதிவு எண்ணாக J18574403 4918185 ஐக் கொண்டிருந்தது. இது கெப்லர் உள்ளீட்டு தொகுபதிவு எண்ணாக கேஐசி 11442793 என்பதையும், கெப்லர் விண்கலத்தால் உற்றுநோக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் கேஓஐ-351 என்ற எண்ணையும் கொண்டுள்ளது. விண்மீன் குழுவின் தோழமை கிரகங்கள் நாசாவின் கெப்லர் பணித்திட்டத்தால் நட்சத்திரங்களுக்கு இடையிலான நகர்வின் காரணமாக கோள்கள் கண்டறியப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Cutri, R. M. (2003). "2MASS All-Sky Catalog of Point Sources". VizieR On-line Data Catalog. Bibcode: 2003yCat.2246....0C. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Kepler-90". NASA Exoplanet Archive. பார்க்கப்பட்ட நாள் July 16, 2016.
  3. Shallue, Christopher J.; Vanderburg, Andrew (16 December 2017). "Identifying Exoplanets With Deep Learning: A Five Planet Resonant Chain Around Kepler-80 And An Eighth Planet Around Kepler-90" (பி.டி.எவ் preprint). பார்க்கப்பட்ட நாள் 14 December 2017 – via Harvard–Smithsonian Center for Astrophysics.
  4. Chou, Felecia; Hawkes, Alison; Northon, Karen (14 December 2017). "Release 17-098 - Artificial Intelligence, NASA Data Used to Discover Eighth Planet Circling Distant Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 14 December 2017.
  5. Chou, Felicia; Hawkes, Alison; Landau, Elizabeth (14 December 2017). "Artificial Intelligence, NASA Data Used to Discover Eighth Planet Circling Distant Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-90&oldid=2749385" இலிருந்து மீள்விக்கப்பட்டது