கூட்டு-பெருக்குச் சராசரி
கணிதத்தில், இரு நேர்ம மெய்யெண்களின் கூட்டு-பெருக்குச் சராசரி (arithmetic–geometric mean -AGM அல்லது agM[1]) என்பது கூட்டுச் சராசரிகளின் தொடர்வரிசைக்கும், பெருக்கல் சராசரிகளின் தொடர்வரிசைக்குமான இணை எல்லையைக் குறிக்கும். கூட்டு-பெருக்குச் சராசரியானது, அடுக்குக்குறிச் சார்புகள், முக்கோணவியல் சார்புகள், மற்ற சிறப்பு சார்புகள் ஆகியவற்றுக்கான விரைவு படிமுறைத் தீர்வுகளிலும், π போன்ற சில கணித மாறிலிகளைக் கணக்கிடுவதற்கும் பயன்படுகிறது.
ஆகிய இரு ஒன்றுக்கொன்று சார்ந்த தொடர்வரிசைகளின் எல்லையாக கூட்டு-பெருக்குச் சராசரி வரையறுக்கப்படுகிறது:
இவ்விரு தொடர்வரிசைகளின் எல்லைகளும் x, y இரண்டின் கூட்டு-பெருக்குச் சராசரிக்குச் சமமாக இருக்கும். இது M(x, y), agm(x, y), AGM(x, y) எனக் குறிக்கப்படுகிறது.
கூட்டு-பெருக்குச் சராசரியை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். வர்க்க மூலத்தின் இரு கிளைகளையும் முரண்பட்டு எடுத்துக்கொள்ளப்படும்போது, பொதுவாகக் கூட்டு-பெருக்குச் சராசரி, ஒரு பன்மதிப்புச் சார்பாக இருக்கும்.[1]
எடுத்துக்காட்டு
[தொகு]a0 = 24, g0 = 6 இன் கூட்டு-பெருக்குச் சராசரி காணும் தொடர்படிகள்:
முதல் ஐந்து தொடர்முறையால் கிடைக்கும் மதிப்புகள்:
n | an | gn |
---|---|---|
0 | 24 | 6 |
1 | 15 | 12 |
2 | 13.5 | 13.416 407 864 998 738 178 455 042... |
3 | 13.458 203 932 499 369 089 227 521... | 13.458 139 030 990 984 877 207 090... |
4 | 13.458 171 481 745 176 983 217 305... | 13.458 171 481 706 053 858 316 334... |
5 | 13.458 171 481 725 615 420 766 820... | 13.458 171 481 725 615 420 766 806... |
இவ்விரு தொடர்வரிசைகளின் பொது எல்லையே 24, 6 ஆகிய இரு எண்களின் கூட்டு-பெருக்குச் சராசரியாகும். அதன் தோராய மதிப்பு: 13.4581714817256154207668131569743992430538388544.[2]
வரலாறு
[தொகு]இந்த சோடி தொடர்வரிசைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் படிமுறைத்தீர்வு, கணிதவியலாளர் லாக்ராஞ்சியின் ஆய்வுகளில் காணப்பட்டது. மேற்கொண்டு, அதன் பண்புகள் கணிதவியலாளர் காஸால் பகுத்தாய்வு செய்யப்பட்டன.[1]
பண்புகள்
[தொகு]- இரு நேர்ம எண்களின் பெருக்கல் சராசரி, ஒருபோதும் கூட்டுச் சராசரியைவிடப் பெரியதாக இருக்காது.[3] எனவே பெருக்கல் சராசரிகள் (gn), கூடும் தொடர்வரிசையாகவும், கூட்டுச் சராசரிகள் (an), குறையும் தொடர்வரிசையாகவும் இருக்கும். மேலும் gn ≤ M(x, y) ≤ an ஆகவும் இருக்கும். x ≠ y எனில் இவை கண்டிப்பான சமனிலிகளாக இருக்கும்.
M(x, y) இன் மதிப்பு, x, y இரண்டின் பெருக்குச் சராசரிக்கும் கூட்டுச் சராசரிக்கும் இடைப்பட்ட ஓர் எண்ணாக இருப்பதோடு, x, y இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும் இருக்கும்.
- r ≥ 0 எனில், M(rx,ry) = r M(x,y).
- M(x,y) இன் தொகையீட்டு-வடிவம்:[4]
இதில் K(k) என்பது, முதல்வகை முழுமையான நீள்வட்டத் தொகையீடு:
கூட்டு-பெருக்குச் சராசரி, விரைவாக ஒருங்குவதால், நீள்வட்ட தொகையீடுகளைக் கணிப்பதற்குத் திறனுள்ள வழியைத் தருகிறது.[5]
கூட்டு-பெருக்குச் சராசரியானது ஜேக்கோபி தீட்டா சார்புடன் ( ) கீழுள்ளவாறு இணைக்கப்படுகிறது:[6]
இதில் எனக் கொள்ள கீழுள்ள முடிவு கிடைக்கும்:
தொடர்புள்ள கருத்துருக்கள்
[தொகு]1, 2 இன் வர்க்கமூலம் ஆகியவற்றின் கூட்டு-பெருக்குச் சராசரியின் தலைகீழி காஸின் மாறியாகும்:
1799 இல், காஸ் பின்வரும் முடிவை நிறுவினார்.[note 1]
- என்பது கிடையெட்டுவடிவ மாறிலி.
1941 இல், (and hence ) ஆனது விஞ்சிய எண் எனச் செருமானியக் கணிதவியலாளர் தியோடர் சினைடெரால் நிறுவப்பட்டது.[note 2][7][8]
என்ற கணம், இன் மீது இயற்கணித சார்பற்றது[9][10] ஆனால் (இதிலுள்ள மேற்சுட்டு ' என்பது இரண்டாவது மாறியைப் பொறுத்த வகையிடலைக் குறிக்கிறது) என்ற கணம் இன் மீது இயற்கணித சார்பற்றது அல்ல. மேலும்,[11]
கூட்டு-பெருக்குச் சராசரியைப் போலவே, பெருக்குச் சராசரி, இசைச் சராசரி ஆகிய இரண்டின் தொடர்வரிசைகளின் மூலம் பெருக்கு-இசைச் சராசரியை (GH), பெறலாம்:
- GH(x,y) = 1/M(1/x, 1/y) = xy/M(x,y).[12]
கூட்டு-இசைச் சராசரியானது, பெருக்கல் சராசரிக்குச் சமானமானதாக இருக்கும்.
மடக்கைகள், முழுமையான முதல், இரண்டாம் வகை நீள்வட்டத் தொகையீடுகள், முழுமையற்ற முதல், இரண்டாம் வகைநீள்வட்டத் தொகையீடுகளின் முதல், இரண்டாம் வகைத் தொகையீடுகள்,[13] ஜேக்கோபி நீள்வட்டச் சார்புகள்[14]ஆகியவற்றைக் கணிப்பதற்குக், கூட்டு-பெருக்குச் சராசரி பயன்படுகிறது.
இருத்தலுக்கான நிறுவல்
[தொகு]கூட்டு, பெருக்கல் சராசரிகளின் சமனிலியின் விளைவாக என்ற முடிவு கிடைக்கிறது. இதிலிருந்து எனப் பெறலாம். அதாவது gn என்ற தொடர்வரிசையானது குறையாத் தொடர்வரிசையாகவும் x, y ஆகிய இரண்டில் பெரியதைவிட அதிகவளவு வரம்புடையதாகவும் இருக்கும்.
மேலும், ஒருபோக்கு ஒருங்கல் தேற்றத்தின்படி, இத்தொடர்வரிசை, ஒருங்குமென்பதால், என்பதை நிறைவு செய்யும்விதத்தில் ஒரு g இருக்கும்.
மேலும், என்பதால் கீழுள்ள முடிவு கிடைக்கிறது:
தொகையீட்டு வடிவின் நிறுவல்
[தொகு]கூட்டு-பெருக்குச் சராசரியின் தொகையீட்டு வடிவம், காஸால் நிறுவப்பட்டது.[1]
என எடுத்துக்கொள்ளப்படுகிறது.
என்றமையும் வுக்கு தொகையீட்டின் மாறியை மாற்ற:
எனவே கிடைப்பது,
என்பதிலிருந்து மேலுள்ள கூற்றிலுள்ள இறுதிச் சமன் கிடைக்கிறது.
,
பயன்பாடுகள்
[தொகு]π என்ற எண்
[தொகு]காஸ்-இலெஜன்ட்ரே படிமுறைத்தீர்வின்படி:[15]
இதில்,
- , ,
- என்பதைப் பயன்படுத்தி நுட்பமாகக் கணிக்கலாம்.
முழுமையான நீள்வட்டத் தொகையீடு, K(sinα)
[தொகு]- என எடுத்துக்கொள்ளக் கிடைக்கும் கூட்டு-பெருக்குச் சரசரி:
இதிலுள்ள K(k) ஆனது, முழுமையான முதல்வகை நீள்வட்டத் தொகையீடு, ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Cox, David (January 1984). "The Arithmetic-Geometric Mean of Gauss". L'Enseignement Mathématique 30 (2): 275–330. https://www.researchgate.net/publication/248675540.
- ↑ agm(24, 6) at வொல்பிராம் அல்பா
- ↑ Bullen, P. S. (2003). "The Arithmetic, Geometric and Harmonic Means". Handbook of Means and Their Inequalities (in ஆங்கிலம்). Dordrecht: Springer Netherlands. pp. 60–174. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-017-0399-4_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-6383-0. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
- ↑ Carson, B. C. (2010). "Elliptic Integrals". In Olver, Frank W. J.; Lozier, Daniel M.; Boisvert, Ronald F.; Clark, Charles W. (eds.). NIST Handbook of Mathematical Functions. Cambridge University Press. ISBN 978-0-521-19225-5. MR 2723248..
- ↑ Dimopoulos, Hercules G. (2011). Analog Electronic Filters: Theory, Design and Synthesis. Springer. pp. 147–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-2189-0.
- ↑ Borwein, Jonathan M.; Borwein, Peter B. (1987). Pi and the AGM: A Study in Analytic Number Theory and Computational Complexity (First ed.). Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-83138-7. pages 35, 40
- ↑ Schneider, Theodor (1941). "Zur Theorie der Abelschen Funktionen und Integrale". Journal für die reine und angewandte Mathematik 183 (19): 110–128. doi:10.1515/crll.1941.183.110. https://www.deepdyve.com/lp/de-gruyter/zur-theorie-der-abelschen-funktionen-und-integrale-mn0U50bvkB.
- ↑ Todd, John (1975). "The Lemniscate Constants". Communications of the ACM 18 (1): 14–19. doi:10.1145/360569.360580.
- ↑ G. V. Choodnovsky: Algebraic independence of constants connected with the functions of analysis, Notices of the AMS 22, 1975, p. A-486
- ↑ G. V. Chudnovsky: Contributions to The Theory of Transcendental Numbers, American Mathematical Society, 1984, p. 6
- ↑ Borwein, Jonathan M.; Borwein, Peter B. (1987). Pi and the AGM: A Study in Analytic Number Theory and Computational Complexity (First ed.). Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-83138-7. p. 45
- ↑ Newman, D. J. (1985). "A simplified version of the fast algorithms of Brent and Salamin". Mathematics of Computation 44 (169): 207–210. doi:10.2307/2007804. https://archive.org/details/sim_mathematics-of-computation_1985-01_44_169/page/207.
- ↑ Abramowitz, Milton; Stegun, Irene Ann, eds. (1983) [June 1964]. "Chapter 17". Handbook of Mathematical Functions with Formulas, Graphs, and Mathematical Tables. Applied Mathematics Series. Vol. 55 (Ninth reprint with additional corrections of tenth original printing with corrections (December 1972); first ed.). Washington D.C.; New York: United States Department of Commerce, National Bureau of Standards; Dover Publications. pp. 598–599. ISBN 978-0-486-61272-0. LCCN 64-60036. MR 0167642. LCCN 65-12253.
- ↑ King, Louis V. (1924). On the Direct Numerical Calculation of Elliptic Functions and Integrals. Cambridge University Press.
- ↑ Eugene Salamin (mathematician) (1976). "Computation of π using arithmetic–geometric mean". Mathematics of Computation 30 (135): 565–570. doi:10.2307/2005327. https://link.springer.com/chapter/10.1007/978-3-319-32377-0_1.
ஆதாரங்கள்
[தொகு]- "Gauss-composition of means and the solution of the Matkowski–Suto problem". Publicationes Mathematicae Debrecen 61 (1–2): 157–218. 2002. doi:10.5486/PMD.2002.2713.
- Hazewinkel, Michiel, ed. (2001), "Arithmetic–geometric mean process", Encyclopedia of Mathematics, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1556080104
- Weisstein, Eric W., "கூட்டு-பெருக்குச் சராசரி", MathWorld.