மலேசிய கூட்டரசு சாலை 1
மலேசிய கூட்டரசு சாலை 1 (Malaysia Federal Route 1) என்பது மலேசியாவின் முதல் நெடுஞ்சாலை; மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் விளங்குகிறது. இதுவரை தீபகற்ப மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடக்கக்கால பொது சாலைகளில் மிகப் பழைமையானது.
கூட்டரசு சாலை 1 என்பது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப் படுவதற்கு முன்னர் தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களின் சாலை அமைப்பில் முதுகெலும்பாக விளங்கியது.[1]
பொது
[தொகு]கூட்டரசு சாலை 1 என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தவிர மேலும் இரண்டு கூட்டரசு சாலைகள் உள்ளன. கூட்டரசு சாலை 3; கூட்டரசு சாலை 5.[2]
மலேசியா-சிங்கப்பூர் எல்லை நகரமான ஜொகூர் பாருவில் தொடங்கும் கூட்டரசு சாலை 1-இன் ’0’ கிலோமீட்டர் தஞ்சோங் புத்திரி சிஐக்யூ வளாகத்தில் (Tanjung Puteri CIQ Complex) தொடங்குகிறது. இப்போது அந்த வளாகம் இப்போது இடிக்கப்பட்டு விட்டது.
கூட்டரசு நெடுஞ்சாலை 5
[தொகு]ஜொகூர் பாரு நகரில் முதல் கிலோமீட்டர் தொலைவில் தொடங்கும் இந்தச் சாலை தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையின் பிரதான நெடுஞ்சாலையான கூட்டரசு நெடுஞ்சாலை 3 உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
அடுத்து ஸ்கூடாய் பகுதியில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை 5 உடன் கிலோமீட்டர் 19-இல், இந்தப் பாதை இணைக்கப்பட்டு உள்ளது. கூட்டரசு நெடுஞ்சாலை 5, தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கிய நெடுஞ்சாலையாகும்.
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை E1
[தொகு]கூட்டரசு நெடுஞ்சாலை 1 தீபகற்ப மலேசியாவின் உள் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையாகும். அனைத்து மேற்கு மாநிலங்களையும் கடந்து செல்கிறது. தம்பின் முதல் சுங்கை சிப்புட் வரை, எப்.டி. 1 (FT1 highway) நெடுஞ்சாலை தித்திவாங்சா மலைத்தொடரின் மேற்கு அடிவாரத்தில் ஓடுகிறது.
இந்தப் பாதை ஜித்ரா, கெடாவில் உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை E1 உடன் சந்திக்கிறது.
கூட்டரசு நெடுஞ்சாலை 1-ஐ ஒரு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தங்களின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக நம்பியுள்ளனர்.
மேலும் காண்க
[தொகு]- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு
- மலேசிய விரைவுச்சாலை முறைமை
- அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை
- வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா)
- ஈப்போ சாலை
காட்சியகம்
[தொகு]-
கூட்டரசு சாலை 1-இன் முதல் கிலோமீட்டர் அடையாளம்
-
சிரம்பான், டத்தோ பண்டார் துங்கல் சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roads in Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2011. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-5399-17-6.
- ↑ "Kenali rangkaian laluan tulang belakang negara kita". Blog Jalan Raya Malaysia. 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.