குவிட் ப்ரோ கோ
க்விட் ப்ரோ கோ (லத்தீன் சொல்: Quid pro quo)( லத்தீன் மொழியில் "ஏதோவொன்றுக்கு எதாவது ஒன்று") என்பது ஒரு லத்தீன் சொற்றொடராகும், இது பொருட்கள் அல்லது சேவைகளின் பரிமாற்றத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, இதில் ஒரு பரிமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே மற்றோரு பரிமாணம் நிகழும்; மாறாக கூறினால் "ஒரு ஆதரவுக்கு ஒரு உதவி". இதேபோன்ற அர்த்தங்களைக் கொண்ட சொற்றொடர் "பழிக்கு பழி" ஆகும்.
சொற்றடரின் மூலம்
[தொகு]லத்தீன் சொற்றொடர் 'க்விட் ப்ரோ கோ' முதலில் எதையாவது ஈடாக்குவதை குறித்தது. ஆங்கில மொழி பேசுபவர்களின் ஆரம்பகால பயன்பாடு அசல் லத்தீன் பொருளைப் பின்பற்றியது, 1530 களில் அந்த சொற்றொடர் வேண்டுமென்றோ இல்லை எதாச்சையாகவோ ஒரு மருந்தை மற்றொரு மருந்தை இடாக்குவதை குறித்தது . அதே நூற்றாண்டின் முடிவில், சமமான பரிமாற்றங்களை விவரிக்க 'க்விட் ப்ரோ குவோ' மிகவும் தற்போதைய பயன்பாடாக உருவெடுத்தது. [2]
1654 ஆம் ஆண்டில், 'க்விட் ப்ரோ கோ' என்ற வெளிப்பாடு, பொதுவாக தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது எதாவது ஆதாயத்தை எதிர்பார்த்தோ 'தி ரீன் ஆஃப் கிங் சார்லஸ்: காலபதிவெட்டில் அகற்றப்பட்ட ஒரு வரலாறு', நூலில் நேர்மறையாய் குறிப்பிடப்பட்டுள்ளது .[3]
'க்விட் ப்ரோ குவோ' சொற்றோடர் ஆங்கிலம் பேசுபவர்களால், சட்டபூர்வமான அல்லது தூதரக சூழல்களில், சமநிலை மதிப்பு கொண்ட பொருட்கள் அல்லது சேவைகளை பரிமாறுவதை குறிப்பதற்கு, அந்த காலத்தில் இருந்து இப்போது வரை பயன்பாட்டில் உள்ளது.[4]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Passional Christi und Antichristi Full view on Google Books
- ↑ "Definition of QUID PRO QUO". merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
- ↑ L'Estrange, Hamon; L'Estrange, Hamon; Faithorne, William (1656-01-01). The reign of King Charles : an history disposed into annalls. London : Printed by F.L. and J.G. for Hen: Seile, Senior and Junior, over against St. Dunstans Church in Fleetstreet, and Edw: Dod, at the Gun in Ivy-lane.
- ↑ Drew (2014-10-22). "Understanding "Quid Pro Quo"". https://mises.org/library/understanding-quid-pro-quo.