குறுகியகால சேவை ஆணையம்
குறுகியகால சேவை ஆணையம் (Short Service Commission (SSC) மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 5 நாட்கள் கொண்ட உடல் தகுதித் தேர்வு, திறனறிதல் சோதனை, தனிமனித ஒழுக்கம், குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில், இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக சேர்வதவற்கு சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் வாயிலாக, 49 வார பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்திய இராணுவத்தின் குறுகியகால சேவை ஆணையப் பணியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப் படிப்பாகும். மேலும் இதற்காக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றிருக் வேண்டும். தேசிய மாணவர் படையில் சி சான்றிதழ் பெற்றவர்கள், மருத்துவப் பட்டம், சட்டப் பட்டம் மற்றும் தொழில் நுட்ப பட்டம் பெற்றோர் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நுழைவுத் தேர்வின்றி, நேரடியாக சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகம் நடத்தும் உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.[1] தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகம் 49 வாரப் பயிற்சி வழங்கப்படுகிறது.
குறுகியகால சேவை ஆணையத்தால் தேர்வு செய்யப்படும் இராணுவ அதிகாரிகளின் குறைந்தபட்ச பணிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும். விரும்பினால் மேலும் 4 ஆண்டுகள் பணியில் நீடிக்கலாம். 14 ஆண்டு கால பணி முடித்த ஆண் அதிகாரிகள் மட்டும் தொடர்ந்து பணிபுரிய விரும்பினால், பணியில் தொடரலாம். பெண் அதிகாரிகளுக்கு 10 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய அனுமதிககப்படுவர்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ What is SSC Short Service Commission in Indian Army?
- ↑ Short Service Commission to be made more attractive
வெளி இணைப்புகள்
[தொகு]