உள்ளடக்கத்துக்குச் செல்

குராமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குராமைட்டு
Kuramite
பொதுவானாவை
வகைசல்பைடு
வேதி வாய்பாடுCu3SnS2
இனங்காணல்
நிறம்சாம்பல், வெள்ளி சாம்பல்
படிக இயல்புஊடுறுவல்கள், நூண்ணோக்கியளவு படிகங்கள்
படிக அமைப்புநாற்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்உலோகத்தன்மை
அடர்த்தி4.56 கி/செ.மீ3
மேற்கோள்கள்[1][2][3][4]

குராமைட்டு (Kuramite) என்பது Cu3SnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சிடாணைட்டு குழு கனிமமாகக் கருதப்படும் இது சல்பைட்டு வகை கனிமமாகும். உசுபெக்கிசுதானில் உள்ள சட்கல்-குராமின்சுகி மலைகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள கோச்புலாக்கு Au-Ag-Te படிவுகளில் குராமைட்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

தோற்றம்

[தொகு]

குராமைட்டு கனிமம் தங்க-சல்பைடு-குவார்ட்சு இழைகளில் கோல்டுபீல்டைட்டு கனிமத்துடன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உசுபெக்கித்தானில் உள்ள கோச்புலாக்கு படிவுகளில் இது காணப்படுகிறது. நுண்ணிய படிகங்களாகவும் குராமைட்டு தோன்றுகிறது.[4]

ஆர்க்டிக் பெருங்கடல், அர்கெந்தினா, சிலி, காங்கோ, கிரீசு, அங்கேரி, சப்பான், ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குராமைட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

மோவின் அளவு கோலில் குராமைட்டின் கடினத்தன்மை 5 ஆகும். மேலும் இதன் அடர்த்தி 4.56 ஆகும்.[2] உலோகப் பளபளப்பும் உலோகக் கோடுகளுடன் கூடிய ஒளிபுகா எஃகு சாம்பல் நிறமாகவும் குராமைட்டு காணப்படுகிறது.

வேதிப் பண்புகள்

[தொகு]

குராமைட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu3SnS4 என்பதாகும். இரும்பு, துத்தநாகம் மற்றும் இண்டியம் தனிமங்கள் இதனுடன் இருக்கும் அசுத்தங்களாகும்.[4][3]

இயைபு
தாமிரம் 43.56%
வெள்ளீயம் 27.13%
கந்தகம் 29.31%

எக்சுகதிர் படிகவியல் ஆய்வு

[தொகு]

குராமைட்டின் எக்சு-கதிர் ஆய்வு தூள் முறையைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. உருசியாவின் அறிவியல் அகாடமியின் கனிமவியல் ஆய்வகத்தில், வசோவா என்பவரால் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. குராமைட்டு கனிமம் சிடானைட்டு -கெசுட்டரைட்டு குழுவுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது. a=5.445±0.005 Å, c=10.75±0.02 Å, c/a=1.972 என்ற அலகு செல் அளவுருக்களும் கண்டறியப்பட்டன.

தூள் மாறுபாடு தரவு
d-இடைவெளி வலிமை
3.13 Å (10)
1.914 Å (8)
1.640 Å (6)
1.108 Å (4)
1.244 Å (3)
2.70 Å (2)
1.044 Å (2)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kovalenker, V.A., Evstigneeva,T.L., Troneva, N.V., Vyal´sov, L.N. (1979) Kuramite, Cu3SnS4, a new mineral of the stannite group. Zapiski Vsesoyuznogo Mineralogicheskogo Obshchestva: 108: 564-569.
  2. 2.0 2.1 John W. Anthony, Richard A. Bideaux, Kenneth W. Bladh, and Monte C. Nichols, Eds., Handbook of Mineralogy, Mineralogical Society of America, Chantilly, VA 20151-1110, USA.
  3. 3.0 3.1 http://www.webmineral.com/data/Kuramite.shtml (accessed December 2023)
  4. 4.0 4.1 4.2 Hudson Institute of Mineralogy, 2023, Kuramite: https://www.mindat.org/min-2291.html (accessed December 2023)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராமைட்டு&oldid=4146913" இலிருந்து மீள்விக்கப்பட்டது