கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி | |||
ஆள்கூறு | 13°24′40″N 80°07′01″E / 13.411000°N 80.117000°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
வட்டம் | கும்மிடிப்பூண்டி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,891 (2011[update]) • 1,889/km2 (4,892/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi) • 43 மீட்டர்கள் (141 அடி) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/gummidipoondi |
கும்மிடிப்பூண்டி (Gummudipoondi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
கும்முடிப்பூண்டி பேரூராட்சி ஆங்கிலேயர்கள் காலத்தில் குமரிகிரி பட்டினமாக அமைந்து வந்து, நாளடைவில் கும்முடிப்பூண்டி என்று பெயர் மருவி அழைக்கப்பட்டு வருகிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இங்கு இராணுவ முகாம்கள் இருந்து வந்துள்ளது. இது தமிழ்நாட்டிலேயே மூன்றாவது சிறுதொழில் வளர்ச்சி நகரமாக விளங்கி வருகிறது. மேலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள ஒரு பேரூராட்சியாகும். கும்மிடிப்பூண்டி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கும்மிடிப்பூண்டி, சென்னைக்கு வடமேற்கே 47 கிமீ தொலைவிலும், திருவள்ளூரிலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது. கும்மிடிப்பூண்டியில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,787 குடும்பங்களும், 18,891 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.89% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Gummidipoondi Population Census 2011