குன்லுன் மலைத்தொடர்
குன்லுன் மலைத்தொடர் | |
---|---|
崑崙山 | |
திபெத்-சிங்சியாங் நெடுஞ்சாலையிலிருந்து மேற்கு குன்லுன் சானின் தோற்றம் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | லியுசி சான் |
உயரம் | 7,167 m (23,514 அடி) |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | Kūnlún Shān Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
நாடு | சீனா |
பகுதி | திபெத் தன்னாட்சிப் பகுதி, கின்காய் மாகாணம், சிஞ்சியாங் |
தொடர் ஆள்கூறு | 36°N 84°E / 36°N 84°E |
எல்லைகள் | கோபி பாலைவனம் |
குன்லுன் மலைத்தொடர் | |||||||||||
"Kunlun" in Simplified (top) and Traditional (bottom) Chinese characters | |||||||||||
நவீன சீனம் | 昆仑山 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 崑崙山 | ||||||||||
Postal | Kwenlun Mountains | ||||||||||
|
குன்லுன் மலைத்தொடர் (The Kunlun Mountains) (simplified Chineseஎளிய சீனம்: 昆仑山; மரபுவழிச் சீனம்: 崑崙山; பின்யின்: Kūnlún Shāntraditional Chineseஎளிய சீனம்: 昆仑山; மரபுவழிச் சீனம்: 崑崙山; பின்யின்: Kūnlún Shān, வார்ப்புரு:IPA-cmn; மொங்கோலியம்: Хөндлөн Уулс, Khöndlön Uuls) ஆசியாவிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர்களினல் ஒன்றாகும். இம்மலைத்தொடர் 3000 கிலோமீட்டர்களுக்கும் (1900 மைல்கள்) அதிகமான நீளமுடையது. விரிவான நோக்கில் பார்க்கும் போது, டாரிம் வடிநிலத்திற்குத் தெற்கில், திபெத்திய பீடபூமியின் வடக்கு எல்லை வரை நீண்டு விரிந்து கிடக்கிறது.
இம்மலைத்தொடர் குறித்த விளக்கம் வேறுபடுகிறது. ஒரு பழைய ஆதாரம்[1] குன்லுன் என்பது சீனாவின் மையப்பகுதியில் குறுக்காகச் செல்லும் மலைத்தொடர் என்கிறது. அதாவது, குன்லுன் என்பது, குறுகிய பொருளில்: அல்டைன் டாக், க்யீலியன் மலைத்தொடர் மற்றும் கின் மலைத்தொடர் ஆகிவை சேர்ந்த மலைத்தொடர் என்கிறது. ஒரு சமீபத்திய ஆதாரம்[2] ஒன்று குன்லுன் தொடர் டாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மையான தெற்கு பக்கப்பரப்பையும் மற்றும் அல்டைன் டாக் மலைத்தொடரின் கிழதென் பகுதியைத் தொடர்வதாகவும் உள்ளதாகக் கூறுகிறது. சிமா சியான் (ஷிஜி, சுருள் 123) கூற்றுப்படி, பேரரசர் வூ ஹான் மஞ்சள் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பியதாகவும், அவ்வாறு சென்ற போது இம்மலைத்தொடரின் மூலத்திற்கு குன்லுன் என்று பெயரிட்டதாகவும் தெரிகிறது. பாரம்பரிய நுாலான சாங்காய் ஜிங் படி இந்தப்பெயரானது புராணச்சார்புடைய அமைவிடம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
பரப்பெல்லை
[தொகு]தஜிகிஸ்தானின், பாமிர் மலைகளிலிருந்து தொடங்கி இம்மலைத்தொடர் சிஞ்சியாங் மற்றும் கிங்காய் மாகாணத்தில் திபெத் தன்னாட்சிப் பகுதிகளில், சீன-திபெத்திய எல்லைகள் இடையிலான பகுதிகளில் நீண்டு கிடக்கிறது. [3] இதன் தெற்கு முனையில் தற்போது டாரிம் வடிநிலம் என்றழைக்கப்படும் பகுதியின் தெற்கு எல்லை, பிரபலமற்ற தக்கிலமாக்கான் பாலைவனம் அல்லது மணலில் புதைந்த வீடுகளின் பாலைவனம் மற்றும் மற்றும் கோபி பாலைவனம் வரை நீண்டு கிடக்கிறது. பல முக்கியமான ஆறுகளான, கோடான் சோலை மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனம் வழியாக பாய்ந்து செல்லும் நதிகளான, காரகாஷ் நதி ('கருப்பு ஜேட் நதி') மற்றும் யுருங்காஷ் நதி ('வெள்ளை ஜேட் நதி') ஆகியவை இங்கிருந்து தொடங்குகின்றன.
அல்டைன்-டாக் அல்லது அல்டுன் மலைத்தொடர் குன்லுன் மலைத்தொடரின் முக்கிய வடபகுதித் தொடர்களில் ஒன்றாகும். இதன் கிழக்கு நீட்சியான கிலியன் சான் குன்லுன் தொடரின் மற்றொரு முக்கிய மலைத்தொடராகும். தெற்கில் முக்கிய நீட்சியானக மின் சானாக இருக்கிறது.பாயன் ஹர் மலைகள் குன்லுன் மலைத்தொடரின் தெற்கு கிளையாக உள்ளது. இந்த பாயன் ஹர் மலைத்தொடர் சீனாவின் இரண்டு நீளமான நதிகளான, யாங்சே மற்றும் மஞ்சள் நதி ஆகியவற்றுக்கிடைப்பட்ட நீர் வடிநிலப்பகுதியை உருவாக்குகிறது.
குன்லுன் மலைத்தொடரின் மிக உயரமான மலையானது, கெரியா பகுதியில் காணப்படும் லியசி சான் (7,167 மீ) ஆகும். ஆர்க்கா டாக் (ஆர்ச் மலை) குன்லுன் சான் மலைப்பகுதியின் மையத்தில் காணப்படுவதாகும். இதன் மிக உயரமான பகுதியானது, உலுக் முஸ்டாக் (6,973 மீ) ஆகும். சில அமைப்புகள் குன்லுன் வடமேற்கு திசையில் கோங்கூர் டாக் (7,649 மீ) மற்றும் புகழ் பெற்ற முஸ்டாக் அடா (7,546 மீ) வரையிலும் நீண்டிருப்பதாக வாதிடுகின்றனர். ஆனால், இந்த மலைத்தொடரானது இயல்பாக பாமிர் மலைத்தொடருடனேயே அதிக நெருக்கமாக காணப்படுகின்றன.
குறிப்புகள்
[தொகு]- ↑ L. Richard, 'Comprehensive Geography of the Chinese Empire',1905
- ↑ National Geographic Atlas of China,2008
- ↑ "Kunlun Mountains". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.