கில்லா அப்துல்லா மாவட்டம்
கில்லா அப்துல்லா மாவட்டம் Killa Abdullah District | |
---|---|
கில்லா அப்துலா மாவட்ட மேட்டுநிலத்தின் வரைபடம் | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பலுசிசுதான் |
கோட்டம் | குவெட்டா கோட்டம் |
நிறுவப்பட்டது | 1993 |
தலைமையகம் | சமான் |
அரசு | |
• துணை ஆணையர் | முகம்மது அசுகர் ஆரிஃபால் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,293 km2 (1,271 sq mi) |
நேர வலயம் | ஒசநே 5 (PST) |
தாலுக்காக்கள் | 4 |
கில்லா அப்துல்லா (Killa Abdullah) அல்லது அப்துல்லா கில்லா என்பது பாக்கித்தானின் பலூசிசுதான் மாகாணத்திற்கு வடமேற்கில் இருக்கும் ஒரு மாவட்டமாகும். இந்நகரத்திலுள்ள மக்களில் 99 சதவீதத்தினர் இசுலாமியர்கள் ஆவர். 2012 இல் இந்நகரின் மக்கள் தொகை 1,20,000 நபர்களாக மதிப்பிடப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர் பக்தூன் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாகும்.
பிசுகின் மாவட்டத்திலிருந்து 1993 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு கில்லா அப்துல்லா புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது[1]. இம்மாவட்டத்தின் பரப்பளவு 3,293 சதுர கிலோமீட்டர்களாகும்[1].
இடவமைப்பு
[தொகு]சீலா பாக் மலைத்தொடரின் அடிவாரத்தில் 30 - 04 ' முதல் 31 - 17 ' வரையிலான வடக்கு தீர்க்கரேகையில் கில்லா அப்துல்லா மாவட்டம் பரவியுள்ளது. கிழக்கில் பிசுகின் மாவட்டம், தெற்கில் குவெட்டா மாவட்டம், மேற்கில் ஆப்கானிசுதான் ஆகியன கில்லா அப்துல்லா மாவட்டத்திற்கு எல்லைகளாக அமைந்துள்ளன. 5264 கிலோமீட்டர் 2 புவியியல் பரப்பளவைக் கொண்டுள்ள இம்மாவட்டம் கலிசுதான், சமான் என்ற மேலும் இரண்டு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கில்லா அப்துல்லா மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த பிரதேசமாகக் காணப்படுகிறது. மாவட்டத்தின் வடக்குப் புறம் தோபா பீடபூமியால் சூழப்பட்டுள்ளது. மலைத் தொடர்கள் யாவும் கிட்டத்தட்ட ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் நீளமான மைய்ய முகடுகள் மிகப்பல நீட்சிகளுடன் காணப்படுகின்றன. இந்நீட்சிகள் 1500 முதல் 3300 மீட்டர்கள் வரையிலும் கடல்மட்ட உயரத்தில் மாறுபடுகின்றன.
மண்
[தொகு]கில்லா அப்துல்லா மாவட்டம் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய பள்ளத்தாக்கு ஆகும். இப்பள்ளத்தாக்கின் தரைப் பரப்பு வண்டல் படிவுகளின் தொகுப்பால் ஆனதாகும், இத்தொகுப்பு பெருவாரியாக களிமண், வண்டல், வண்டல்களிமண், களிமண்வண்டல் படிவுகளால் ஆக்கப்பட்ட தொகுப்பாக உள்ளது. இப்படிவுகள் யாவும் பள்ளத்தாக்கின் குறுக்கே வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் பருவகால சிற்றோடைகளால் சேர்க்கப்பட்டவையாகும். குலிசுதான் பகுதியில் இயற்கையான பசளை மண்ணும் ,சமான் பகுதியில் மணற்பாங்கான களிமண் கலவையும் காணப்படுகின்றன. மலைத்தொடர்களை நெருங்குகையில் மணற்பாங்குத் தன்மை அதிகரிக்கின்றது. தண்ணீர் பற்றாக்குறையும், பகுதிப் பாலைவனக் காலநிலையும் இப்பகுதியில் நிலவுவதால் மரங்களும் புதர்களும் சிறிய எண்ணிக்கையிலேயே வளர்ந்து காணப்படுகின்றன.
காலநிலை
[தொகு]கில்லா அப்துல்லா மாவட்டத்தில் பருவநிலை பொதுவாகறண்டும் மிதமான வெப்பத்தோடும் காணப்படுகிறது. அண்டை மாவட்டங்கள் கடல் மட்ட உயரத்தில் வேறுபடுவதால் பருவநிலையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தின் பருவநிலை விவசாயத்திற்கும் தோட்டக்கலைக்கும் ஏதுவானதாக உள்ளது. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, ஆப்பிள், திராட்சை, செர்ரி முதலிய பழவகைகளும் உருளைக்கிழங்கு, வெங்கயம், தக்காளி போன்ற காய்கறிகளும் கில்லா அப்துல்லா மாவட்டத்தின் பருவநிலையில் நன்றாக வளர்கின்றன.
வரலாறு
[தொகு]1839 ஆம் ஆண்டில் குவெட்டா, பிசுகின் மண்டலங்கள் ஒன்றாக இணைந்து பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கின. முதலாம் ஆங்கிலோ ஆப்கன் போரின் விளைவாக இம்மாற்றம் நிகழ்ந்திருந்தது[2]. எனினும் 1842 ஆம் ஆண்டில் ஆப்கானியர்கள் முழு பிசுகின் பள்ளத்தாக்கையும் மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டனர். ஆனால் 1879 இல் இப்பகுதியை அவர்கள் மீண்டும் இழந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பிசுகினும் அதனைச் சுற்றியிருந்த பிற பகுதிகளும் குவெட்டா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன[2]. 1993 ஆம் ஆண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக பிசுகின் தனியாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]நிர்வாக வசதிக்காக கில்லா அப்துல்லா மாவட்டம் நான்கு தாலுக்காக்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது:[3].
1. சமான், 2. தோபாண்டி, 3. கலிசுதான், 4. கில்லா அப்துல்லா என்பன அந்த நான்கு தாலுக்காக்களாகும்.
முக்கிய இடம்
[தொகு]கோயாக் சுரங்கவழி அல்லது சீலாபாக் சுரங்கவழி கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு இரயில்வே சுரங்கப்பாதையாகும். 3.91 கிலோமீட்டர் தொலைவு நீளமுள்ள இப்பாதை ஆப்கானிசுதான எல்லையில் சமான்[4] It is located 1,945 m (6,381 அடி) above sea level.[4] நகரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1945 மீட்டர் அல்லது 6381 அடி உயரத்தில் இச்சுரங்கப்பாதை உள்ளது.
கோயாக் கணவாய்க்கு கீழாக 1891 ஆம் ஆண்டில் இக்குகைப் பாதை கட்டப்பட்டது. தெற்காசியாவில் மிக நீண்டதொரு குகைப் பாதையாக இது திகழ்கிறது. பாக்கித்தானின் 5 ரூபாய் தாளில் இக்குகைப் பாதையின் தோற்றத்தை காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1998 District Census Report of Killa Abdullah, Population Census Organisation, Government of Pakistan, Islamabad, 2000. Pg 1
- ↑ 2.0 2.1 1998 District Census Report of Killa Abdullah, Population Census Organisation, Government of Pakistan, Islamabad, 2000. Pg 6
- ↑ "Tehsils & Unions in the District of Killa Abdullah - Government of Pakistan". Archived from the original on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
- ↑ 4.0 4.1 1998 District Census Report of Killa Abdullah, Population Census Organisation, Government of Pakistan, Islamabad, 2000. Pg 5