கிருஷ்ண கான சபை
Appearance
கிருஷ்ண கான சபை (Sri Krishna Gana Sabha (SKGS) தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் தியாகராய நகர் பகுதியில் 1953 முதல் செயல்படுகிறது. இச்சபை புகழ்பெற்ற பண்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இச்சபை இந்திய இசை, நடனம், நாடகம் மற்றும் சமயச் சொற்பொழிவுகளை ஆண்டு முழுவதும் நடத்துகிறது. [1][2]
சபையில் நடைபெறும் முக்கிய விழாக்கள்
[தொகு]- சித்திரை நாடகத் திருவிழா
- கோலாஷ்டமி சங்கீத உற்சவம்
- யக்ஞராமன் சூலை திருவிழா
- கலை & நாட்டியத் திருவிழா
- மார்கழி இசை விழா
வழங்கும் விருதுகள்
[தொகு]- சங்கீத சூடாமணி விருது: சபையின் கோலாஷ்டமி சங்கீத உற்சவத்தின் போது, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம், சால்வை மற்றும் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுவது.
- ஆச்சாரியா சூடாமணி விருது: கர்நாடக இசை மற்றும் நாட்டிய உலகின் முதிர்ந்த குருமார்களுக்கு சால்வையுடன், ரொக்கப்பரிசு.
- நாடக சூடாமணி விருது: நாடக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தங்கப்பதக்கம், சால்வை மற்றும் ரொக்கப் பரிசுடன்.
- நாடக சூடாமணி விருது: ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை நாடகத் விழாவின் துவக்கத்தின் போது, புகழ்பெற்ற மேடை நாடக நடிகர், நடிகைகளுக்கு, தங்கப்பதக்கத்துடன், சால்வை மற்றும் ரொககப்பரிசு.
- ரொக்க விருது: கோலாஷ்டமி சங்கீத உற்சவம் மற்றும் மார்கழி இசை விழாவின் போது, வளரிளம் திறமையான நுண்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கும் ரொக்கப்பரிசு
- சங்கீர்த்தன சூடாமணி விருது
சென்னையின் பிற இயல், இசை, நாடக மன்றங்கள்
[தொகு]- மியூசிக் அகாதெமி
- கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
- நாரத கான சபா
- பிரம்ம ஞான சபை
- நந்தலாலா கந்தர்வ கான சபா
- ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
- ரசிக ரஞ்சனி சபா
- நாத இன்பம் (NAADA INBAM)
- வாணி மகால், சென்னை (ஸ்ரீ தியாகப் பிரம்ம கான சபை)
- இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்
- தி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சங்கம்
- மதுரவானி
- கலாரசனா
- முத்ரா
- நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாதெமி
- ஹம்சத்வனி என். ஆர். ஐ. சபா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நாளை எம்.எஸ். நூற்றாண்டு விழா
- ↑ கிருஷ்ண கான சபாவில் நடந்த அருமையான "ப்யூஷன் இசை'