கிரிகோரைட்டு
கிரிகோரைட்டு | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Na2,K2,Ca)CO3 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்பு, பால் நிற வெண்மை |
படிக இயல்பு | லாவா கார்போனடைட்டின் பெருமப்பரல்கள் |
படிக அமைப்பு | அறுமுகப் படிக வடிவம் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுருவக்கூடியதிலிருந்து அரைகுறையாக ஒளி ஊடுருவும் தன்மை வரை |
ஒப்படர்த்தி | 2.27 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு |
கரைதிறன் | நீரில் கரையக்கூடியது |
மேற்கோள்கள் | [1][2][3] |
கிரிகோரைட்டு (Gregoryite) என்பது பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிக அளவில் காணப்படக்கூடிய நீரற்ற கார்பனேட்டு கனிமம் ஆகும்.[4] இதன் வேதி வாய்ப்பாடு (Na2,K2,Ca)CO3 ஆகும்.[1][5][6] இது இயற்கையில் ஓல் டோய்னியோ லெங்கை எரிமலைக் குழம்பில் காணப்படும் நேட்ரோகார்பனாடைட்டில் காணப்படும் இரு முக்கியக் கூறுகளில் ஒன்றாகும். அந்த மற்றொரு கனிமம் நையிரெரெய்ட்டே ஆகும். [7]
இதன் நீரற்ற தன்மையின் காரணமாக, கிரிகோரைட்டு சுற்றுப்புறத்துடன் விரைந்து வினைப்பட்டு மிக அடர் தன்மையுள்ள கற்குழம்பாக மாறி பின்னர் சில மணி நேரங்களிலேயே ஒரு வெண்ணிறத் திண்மமாக மாறுகிறது.[4]
கிரிகோரைட்டானது 1980 ஆம் ஆண்டில் முதன்முதலாக பிரித்தானிய மண்ணியலாளர் மற்றும் எழுத்தாளர் ஜான் வால்டர் கிரெகோரியால் (1864–1932) கிழக்கு ஆப்பிரிக்க ரிஃப்ட்டு பள்ளத்தாக்கில் ஆய்வு மேற்கொண்ட போது குறிப்பிடப்பட்டது.[1][2] இது நையிரெரெய்ட்டே, அலபன்டைட்டு, பாறை உப்பு, சில்வைட்டு, புளோரைட்டு மற்றும் கால்சைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்தே காணப்படுகிறது.[3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிரிகோரைட்டு கனிமத்தை Ggy[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Mindat.org
- ↑ 2.0 2.1 Webmineral.com
- ↑ 3.0 3.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-08-30.
- ↑ 4.0 4.1 "Gregoryite definition". Dictionary of Geology. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
- ↑ Mitchell, Roger H.; Bruce A. Kjarsgaard (2010). "Experimental Studies of the System Na2CO3–CaCO3–MgF2 at 0·1 GPa: Implications for the Differentiation and Low-temperature Crystallization of Natrocarbonatite". Journal of Petrology (Oxford Journals) 52 (7–8): 1265–1280. doi:10.1093/petrology/egq069.
- ↑ Hay, Richard L (1989). "Holocene carbonatite-nephelinite tephra deposits of Oldoinyo Lengai, Tanzania". Journal of Volcanology and Geothermal Research (Elsevier (Netherlands)) 37 (1): 77–91. doi:10.1016/0377-0273(89)90114-5. Bibcode: 1989JVGR...37...77H. https://archive.org/details/sim_journal-of-volcanology-and-geothermal-research_1989-03_37_1/page/77.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "World's Coolest Lava is in Africa". Volcano Watch. USGS Hawaiian Volcano Watch. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.