உள்ளடக்கத்துக்குச் செல்

காலா (மீன் குடும்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காலா (மீன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காலா
அட்லாண்டிக் காலா, Polydactylus octonemus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கீளி வடிவி
குடும்பம்:
காலா
இனங்கள்

Eleutheronema
Filimanus
Galeoides
Leptomelanosoma
Parapolynemus
Pentanemus
Polydactylus
Polynemus

காலா (ஆங்கிலம்:Threadfin) என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன, இக்குடும்பத்தில் 8 பேரினங்களாக மொத்தம் 40 இனங்கள் உள்ளன.[1]

இக் குடும்பத்தில் 20 சதம மீட்டர் நீளம் கொண்ட பாலிடாக்டிலசு நிகிப்பினிசு (Polydactylus nigripinnis) என்னும் இனத்திலிருந்து 2.0 மீட்டர் நீளம் வளரக்கூடிய எலியூதெரோனிமா டெட்ராடாக்டிலம் (Eleutheronema tetradactylum) என்னும் இனம் வரை பல அளவுகளைக் கொண்ட இனங்கள் அடங்கியுள்ளன. இவ்வகை மீன்கள் உணவுக்கான மீன்களாக வணிக அடிப்படையில் முக்கியமானவை. இவை பெரிய கூட்டங்களாக இருப்பதனால், இவற்றைப் பிடிப்பது நம்பகமானதாகவும், மலிவானதாகவும் உள்ளது.

இயல்புகள்

[தொகு]

பாலினெமைடீக்களின் உடல் நீளமானவையாகவும், இருமுனையும் குவிந்த உருளை வடிவானதாகவும் அமைந்துள்ளன. இவற்றில் முட்கள் கொண்டவையும், மென்மையானவையுமான முதுகுத் துடுப்புக்கள் பிரிந்து காணப்படுகின்றன. வால்கள் பெரிய துடுப்புக்களோடு கூடியவையாகவும் ஆழமாகப் பிரிந்தும் உள்ளன. இது அவற்றின் வேகத்தையும், துரிதமாகச் செயற்படும் தன்மையையும் காட்டுகின்றது. இவற்றின் வாய்கள் பெரிதாக, தலையின் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தின் தனித்துவமான இயல்பு இவற்றின் முன் துடுப்புக்கள் ஆகும். இவை இரண்டு வேறுபட்ட பகுதிகளாக அமைந்துள்ளன. இவற்றுள் கீழேயுள்ளது, 3-7 எண்ணிக்கையிலான, நூல்போன்ற தனித்தனியான அமைப்புக்களைக் கொண்டுள்ளது. பாலினெமசு இனங்களில் இத்தகைய 15 வரையான நூலமைப்புக்கள் காணப்படுவதுண்டு.

பென்டானெமசு குயின்குவாரியசு (Pentanemus quinquarius) போன்ற இனங்களில் நூல்போன்ற உவ்வமைப்புக்கள் வால் துடுப்புக்களையும் தாண்டி நீளமாக அமைந்திருப்பது உண்டு. இந்த அமைப்புக்களே பாலினெமைடீ என்னும் பெயருக்குக் காரணமாகும். கிரேக்க மொழியில் பாலி என்பது பல என்னும் பொருளையும், நெமா என்பது இழை என்னும் பொருளையும் கொடுக்கும் சொற்களாகும். இக் குடும்ப மீன்களைப் போன்ற தோற்றம் கொண்ட, முகிலிடீ (Mugilidae), சனிடீ (Chanidae) ஆகிய இன மீன்களிலிருந்து பாலினெமைடீக்களை வேறுபடுத்தி அறிவதற்கும் இந்த உருமாறிய முன் துடுப்புக்கள் உதவுகின்றன.

இக் குடும்ப மீன்கள் திறந்ததும்; ஆழம் குறைந்ததும்; சேறான, மணற்பாங்கான அல்லது வண்டற்பாங்கான தளங்களைக் கொண்ட கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. பவளப்பாறைத் திட்டுக்களில் இவற்றை அரிதாகவே காண முடியும்.

வகைப்பாடு

[தொகு]

பேரினங்கள்:

எலியுதேரோனெமா (Eleutheronema)
ஃபிலிமனசு (Filimanus)
கலியோய்டீசு (Galeoides)
லெப்தோமெலனோசோமா (Leptomelanosoma)
பராபாலினெமசு (Parapolynemus)
பென்டானெமசு (Pentanemus)
பாலிடக்டிலசு (Polydactylus)
பாலினெமசு (Polynemus)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலா_(மீன்_குடும்பம்)&oldid=2655397" இலிருந்து மீள்விக்கப்பட்டது