உள்ளடக்கத்துக்குச் செல்

காராக்

ஆள்கூறுகள்: 3°24′N 102°2′E / 3.400°N 102.033°E / 3.400; 102.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காராக்
Karak Town
Bandar Karak
காராக் நகரத்திற்கு செல்லும் விரைவுச்சாலையில் கெந்திங் செம்போ சுரங்கப் பாதை
காராக் நகரத்திற்கு செல்லும் விரைவுச்சாலையில் கெந்திங்
செம்போ சுரங்கப் பாதை
காராக் is located in மலேசியா
காராக்
      காராக்
ஆள்கூறுகள்: 3°24′N 102°2′E / 3.400°N 102.033°E / 3.400; 102.033
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே 08:00
அஞ்சல் குறியீடு
28xxx
தொலைபேசி 6-09 (தரைவழித் தொடர்பு)
வாகனப் பதிவெண்கள்C
இணையதளம்www.mpbentong.gov.my/en/

காராக் என்பது (மலாய்: Karak; ஆங்கிலம்: Karak; சீனம்: 加叻) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் நகருக்குச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலை 2-இல் ஓய்வு நகரமாக அறியப் படுகிறது.[1][2][3]

காராக் நகரம் மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காராக் நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகரையும் காராக் நகரையும் இணைக்கிறது.

நிலவியல்

[தொகு]

மலேசியாவின் பிரதான மலைத் தொடரான தித்திவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த இடம் பகாங் மாநிலத்திற்கு மட்டும் அல்ல; கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் ஒரு முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது.

பொது

[தொகு]

காராக் நெடுஞ்சாலையின் கிழக்கு முனையிலும் ; மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை -இன் தொடக்கமாகவும் காராக் நகரம் அமைகின்றது. பொதுவாகச் சொன்னால் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையையும் கிழக்குக் கரையையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவகப் படுத்தலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Balai Polis, Direktori PDRM Pahang - Bentong. Retrieved on 17 April 2022.
  2. Elevation of Karak, Pahang, Malaysia, Worldwide Elevation Map Finder. Retrieved on April 19, 2022.
  3. Table 1.0: Selected statistics of basic information, Parliament of Bentong, Pahang, 2020, P.089 Bentong, Pahang, Statistik Subnasional Parlimen dan DUN, Department of Statistics, Malaysia. Retrieved on April 19, 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காராக்&oldid=4091578" இலிருந்து மீள்விக்கப்பட்டது