காட் ஆஃப் வார்:பிட்ரயல்
காட் ஆஃப் வார்: பிட்ரயல் (God of War: Betrayal ) என்பது இரு பரிமாண அதிரடி-சாகச திறன்பேசி விளையாட்டு ஆகும். இதனை ஜவாக்ரவுண்ட் மற்றும் சோனி ஆன்லைன் என்டர்டெயின்மென்ட்டின் (SOE) லாஸ் ஏஞ்சல்ஸ் பிரிவு உருவாக்கியது மற்றும் சோனி பிக்சர்ஸ் டிஜிட்டல் நிறுவனம் இதனை வெளியிட்டது. ஜாவா இயங்குதளம் கொண்ட செல்லிடத் தொலைபேசிகளுக்கான பதிப்பு ஜூன் 20, 2007 அன்று வெளியிடப்பட்டது, இது காட் ஆஃப் வார் தொடரின் மூன்றாவது தவணையாகும், மேலும் ஐந்தாவது காலவரிசைப்படி. கிரேக்க புராணங்களில் உள்ள பழி தீர்க்கும் கதையினை அடிப்படையாகக் கொண்டது.ஒலிம்பியன் கடவுள்களுக்கு சேவை செய்யும் எசுபார்த்தா வீரரான கிராடோஸை இந்த விளையாட்டினை விளையாடும் வீரர் கட்டுப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.கிராடோசினைக் எராஸ் குழப்பமுறச் செய்து அவரின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்கிறார். முன்னாள் கடவுளான ஏரஸ் என்பவரை இவர் கொலை செய்கிறார்.
விளையாட்டு
[தொகு]இரு பரிமாண வடிவத்தில் வழங்கப்பட்டாலும், இது அதன் முன்னோடிகளின் செயல் சார்ந்த அணுகுமுறையைத் தக்க வைத்துக் கொள்கிறது, காட் ஆஃப் (God of War ) ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும். மெய்நிகர் ஒளிப்படக் கருவி அமைப்பு மூலமாக இதனைக் கானும் வகையில் விளையாட்டானது அமைக்கப்பட்டிருக்கும். இந்த விளையாட்டினை விளையாடுபவர்கள் கதையின் நாயகனான கிராடோஸ் என்பவரினைக் கட்டுப்படுத்தலாம் மேலும் புதிர் விளையாட்டு மற்றும் போர்களில் கிரேக்க புராண இறவாத வீரர்கள், உள்ளிட்ட பகைவர்களை , மெதூசா மற்றும் கோர்கன், சைக்ளோப்ஸின், ராய்த்ஸ , செண்ட்டார்கள், மற்றும் எதிரிகள்- லேர்னியன் ஐதரா மற்றும் பண்டோராவின் கார்டியன் என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் மினோட்டோர் போன்றவற்றில் கிராடோசின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம். விளையாடும் போது அந்த வீரர் சுவர்கள் மற்றும் ஏணிகளை ஏற வேண்டும், இடைவெளிகளில் குதிக்க வேண்டும், கயிறுகளில் ஊசலாடலாம், மேலும் விளையாட்டின் பிரிவுகளைத் தொடர விட்டங்களின் குறுக்கே சமப்படுத்த வேண்டும். சில புதிர்கள் பெட்டியை நகர்த்துவது போன்று எளிதானதாக இருக்கும். ஆனால் மற்றவை மிகவும் சிக்கலானவை, அதாவது விளையாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல உருப்படிகளைக் கண்டுபிடிப்பது அடுத்த பகுதிக்குச் செல்வற்கான ஒரு கதவைத் திறக்க வேண்டும். விளையாட்டின் நீளம் தோராயமாக இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஆகும்,[1] மேலும் இது பத்து படி நிலைகளைக் கொண்டுள்ளது.[2]
கதை
[தொகு]கிராடோஸ் எசுபார்த்தா இராணுவத்தை வழிநடத்துகிறார். அப்போது, கிராடோஸைத் தடுக்க தெய்வங்களால் அனுப்பப்பட்ட ஆர்கோஸ் தலைமையிலான பல மிருகங்களால் அவர் தாக்கப்படுகிறார். தொடர்ச்சியான மோதல்களுக்குப் பிறகு, ஆர்கோஸ் யாரோ ஒருவரால் கொல்லப்படுகிறார், அவர் கிராடோஸை கடவுள்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.இரானுவமானது கொலையாளியின் அடையாளத்தைக் கண்டறிய கிரீஸ் நகர் முழுவதும் தேடுகின்றனர், ஆனால் பாதாள உலகத்தின் கடவுளான ஹேடீஸின் கூட்டாளிகளுடனான மோதல்களினால் இந்த பணி மந்தமாகிறது.
விருதுகள்
[தொகு]ஐ.ஜி.என் நிறுவனம் 2007 ஆம் ஆண்டிற்கான சூன் மாதத்திற்கான சிறந்த கம்பியில்லா விளையாட்டு என அறிவித்தது.[3] மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயங்குதள விளையாட்டு விருதினையும் பெற்றது.[4]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Adams, Dan (May 10, 2007). "God of War Mobile". IGN. Ziff Davis Media. Archived from the original on November 20, 2012. பார்க்கப்பட்ட நாள் January 16, 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Podolsky, Andrew (May 10, 2007). "God of War: Betrayal". 1UP.com. Ziff Davis Media. Archived from the original on May 30, 2013. பார்க்கப்பட்ட நாள் May 30, 2013.
- ↑ IGN Wireless (June 29, 2007). "Wireless Game of the Month: June 2007". IGN. Ziff Davis Media. Archived from the original on June 4, 2013. பார்க்கப்பட்ட நாள் June 4, 2013.
- ↑ "Best Platform Game: God of War: Betrayal". IGN. Ziff Davis Media. Archived from the original on June 4, 2013. பார்க்கப்பட்ட நாள் June 4, 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)