கவிதா ரமணன்
கவிதா ரமணன் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்விப் பின்னணி | |
கல்வி | |
முனைவர் பட்ட நெறியாளர் | பால் துபியசு |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் |
கவிதா ரமணன் (Kavita Ramanan) பிரெவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணித பேராசிரியராக பணிபுரியும் நிகழ்தகவு கோட்பாட்டாளரும் ஆவார்.
கல்வி மற்றும் பணி
[தொகு]ரமணன் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் அனுராதா ரமணன் மற்றும் இயற்கணித ஜியோமீட்டர் எஸ். ரமணனுக்கு மகளாகப் பிறந்தார்.[1] ரமணன் 1992-இல் மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இவள் 1996-இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.[2]:{{{3}}} பால் டுபுயிசு மேற்பார்வையிடப்பட்ட இவரது ஆய்வுக் கட்டுரையானது, தொடர்பு வலையமைப்பிற்கான பயன்பாடுகளுடன், கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் கட்டுமானம் மற்றும் பெரிய விலகல் பகுப்பாய்வு குறித்ததாகும்.[3]:{{{3}}}
டெக்னியனில் முனைவர் பட்ட பின் ஆய்வினை முடித்த பிறகு, இவர் 1997 முதல் 2002 வரை பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். மேலும் 2002 முதல் 2009 வரை கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியலில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் 2010-இல் ஆசிரியப் பணிக்கு பிரவுனுக்குத் திரும்பினார்.[2]:{{{3}}}
அங்கீகாரம்
[தொகு]ரமணன் 2006-இல் பயன்பாட்டு நிகழ்தகவு சமூகத்தின் எர்லாங் பரிசை வென்றார்.[4]:{{{3}}} இவர் 2013-இல் கணித புள்ளியியல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]:{{{3}}} அமெரிக்கன் கணிதவியல் சங்கம்[6]:{{{3}}} மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அறிவியல் கழகத்தின்[7]:{{{3}}} 2018 வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கணிதப் புள்ளியியல் நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு மெடாலியன் விரிவுரையை "சீரற்ற வலையமைப்பின் எல்லையற்ற பரிமாண அளவிடுதல் வரம்புகள்" என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.[8]:{{{3}}} 2019-இல், ரமணன் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2020ஆம் ஆண்டில், கவிதா ரமணன், "பிரவுன் பல்கலைக்கழகம், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பிரதிபலித்த செயல்முறைகள் மற்றும் சீரற்ற வலையமைப்பிற்கான பங்களிப்புகளுக்காக" என்ற மேற்கோளுடன் தொழிற்துறை மற்றும் பயன்பாட்டுக் கணிதத்திற்கான சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
கவிதா 2020இல் குகன்கெய்ம் ஆய்வு நிதியினைப் பெற்றார்.[11] 2021-இல் அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] கவிதா 2021-இல் பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி சாதனை விருதினைப் பெற்றார்.[13] மேலும் இவர் 2021 வன்னேவர் புஷ் ஆசிரிய கூட்டாளிகளின் பாதுகாப்புத் துறையின் வகுப்பில் கலந்துகொள்ளப் பரிந்துரையில் இடம்பெற்றார்.[14] கவிதா சனவரி-சூன் 2022இல் கிளே கணித நிறுவனத்தில் மூத்த அறிஞராக நியமிக்கப்பட்டார்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographies of Candidates 2014" (PDF). American Mathematical Society.
- ↑ 2.0 2.1 Curriculum vitae (PDF), archived from the original (PDF) on 2017-11-07, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
- ↑ கணித மரபியல் திட்டத்தில் கவிதா ரமணன்
- ↑ Erlang Prize, INFORMS, பார்க்கப்பட்ட நாள் 2017-11-03
- ↑ "Ramanan named IMS Fellow", News from Brown, Brown University, April 25, 2013, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
- ↑ 2018 Class of the Fellows of the AMS, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2017-11-03
- ↑ Fellows: Alphabetical List, Institute for Operations Research and the Management Sciences, archived from the original on 2019-05-10, பார்க்கப்பட்ட நாள் 2019-10-09
- ↑ "Medallion Lecture preview: Kavita Ramanan", IMS Bulletin, Institute of Mathematical Statistics, May 17, 2015, archived from the original on 2017-10-30, பார்க்கப்பட்ட நாள் 2017-11-04
- ↑ "AAAS".
- ↑ "SIAM Announces Class of 2020 Fellow". பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
- ↑ "Guggenheim Fellowship in 2020".
- ↑ "New Members Elected in 2021". பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
- ↑ "Professor Kavita Ramanan receives a Distinguished Research Achievement Award". பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
- ↑ "2021 Class of Vannevar Bush Faculty Fellowship".
- ↑ "Kavita Ramanan | Clay Mathematics Institute". பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- முகப்பு பக்கம்
- Kavita Ramanan வெளியீடுகள்