கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம்
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் (KALLIKUDI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கள்ளிக்குடியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்கள்;[3]
- ஆவல்சூரன்பட்டி
- உலகாணி
- உன்னிபட்டி
- எம். புதுப்பட்டி
- எம். புலியன்குளம்
- எம். போத்தநதி
- எஸ். பி. நத்தம்
- எஸ். வெள்ளாகுளம்
- ஓடைபட்டி
- கரிசல்களாம்பட்டி
- கல்லணை
- கள்ளிக்குடி
- குராயூர்
- கூடக்கோவில்
- கே. வெள்ளாகுளம்
- சித்தூர்
- சிவரக்கோட்டை
- செங்கபடை
- சென்னம்பட்டி
- டி. அரசப்பட்டி
- டி. கொக்குளம்
- திருமால்
- தூம்பக்குளம்
- தென்னமநல்லூர்
- நல்லமநாயக்கன்பட்டி
- நெடுங்குளம்
- நேசனேரி
- பேய்குளம்
- மரவபட்டி
- மருதங்குடி
- மேலஉப்பிலிகுண்டு
- மையிட்டான்பட்டி
- வளையங்குளம்
- வில்லூர்
- வீரபெருமாள்புரம்
- வேப்பங்குளம்
வெளி இணைப்புகள்
[தொகு]- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்