கலா அகாதமி, கோவா
கலா அகாதமி (Kala Academy) இந்தியாவின் கோவாவில் உள்ள கோவா அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு முக்கிய பண்பாட்டு மையமாகும். பிப்ரவரி 1970-ல் பனஜி, காம்பலில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் சார்லசு கோர்ரியாவால் வடிவமைக்கப்பட்டது. இது "இசை, நடனம், நாடகம், நுண்கலை, நாட்டுப்புறக் கலை, இலக்கியம் போன்றவற்றை வளர்ப்பதற்கும், அதன் மூலம் கோவாவின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துவதற்குமான உச்ச அமைப்பாக" உள்ளது.[1]
கோவா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இந்த மையம், இதன் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கிறது. மேலும் திருவிழாக்கள், போட்டிகள், கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் உள்ளூர் கலைகளின் பல்வேறு வடிவங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறது.[2][3] இது 28 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவினையும், 14 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவினையும் பல்வேறு ஆலோசனைக் குழுக்களையும் கொண்டுள்ளது. 2019, ஆகத்து 29ஆம் தேதி, கோவா அரசு இந்த கட்டிடத்தைச் சரிசெய்யவோ அல்லது புதுப்பிக்கவோ முடியவில்லை எனத் தெரிவித்து இடிக்கப்பட வேண்டியிருக்கும் என அறிவித்தது.[4]
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ About us பரணிடப்பட்டது 25 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம் Official website.
- ↑ "Kala Academy's Tiatr contest begins, but with a twist". 2 September 2014. Archived from the original on 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
- ↑ "A teacher never truly retires: Parsekar". 6 September 2014. Archived from the original on 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
- ↑ Menezes, Vivek (2019-08-02). "Trashing the magic of Charles Correa". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.