உள்ளடக்கத்துக்குச் செல்

கலங்குட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலங்குட் கடற்கரை முகப்பு
நகரம்
மாநிலம்கோவா
மாவட்டம்வட கோவா
வட்டம்பார்டேசு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,776
நேர வலயம்ஒசநே 5:30 (இ.சீ.நே)
PIN
403516
இடக் குறியீடு0832

கலங்குட் அல்லது கலாங்குட் (ஆங்கிலம்: Calangute) கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இது வடக்கு கோவாவில் உள்ளது. இது கடற்கரைக்குப் பெயர் பெற்ற ஊர் ஆகும். இது பணஜி/பஞ்சிம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவாவின் உச்ச சுற்றுலா பருவம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மே கோடை காலத்தில் இருக்கும். பருவமழையின் போது குறிப்பாக சூன் முதல் செப்டம்பர் வரை, கடல் அலைகள் கடினமான இருப்பதால், இக்காலத்தில் கலங்குட் கடற்கரையில் நீச்சல் தடை செய்யப்படுகிறது. கலங்குட்டில் அதிக உணவகங்களும் கடைகளும் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கலங்குட்டின் மக்கள் தொகை 15.776. இதில் ஆண்கள் 54%, பெண்கள் 46% ஆகும்.

பள்ளிகள்

[தொகு]

லிட்டில் பிளவர், புனித ஜோசப் ஹை ஸ்கூல், டான் பாஸ்கோ பள்ளி, மார்க் நினைவு உயர்நிலைப் பள்ளி.

கலங்குட் கடற்கரை

[தொகு]

கலங்குட்டில் அழகான கடற்கரை உள்ளது. இங்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சர்வதேச சுற்றுலா பயணிகளும் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். குறிப்பாக உருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [1]. உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர்[2]. இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள், சைவ உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன.

கடற்கரைகளில் ஓரங்களில், ஓய்வு எடுக்கும் படுக்கைகள் உள்ளன். இவற்றை உபயோகிப்பதற்கு, சில நேரங்களில் 2 மணி நேரத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் குடில்களில் ஹோட்டல் உடன் சேர்ந்தது. இவற்றில் உணவருந்தும் பட்சத்தில், ஓய்வு எடுக்கும் படுக்கைகள் உபயோகிப்பதற்கு தனிக் கட்டணம் எதுவும் இல்லை. ஓய்வு எடுக்கும் படுக்கைகள் குடைகளின் கீழ் உள்ளதால், வெயிலின் தாக்கம் இல்லை.

கலங்குட் கடற்கரை அருகில் அதிக தங்கு விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் 1500 ரூபாய் முதல் வாடகைக்கு கிடைக்கின்றன. கலங்குட் கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன. இங்கு உள்ள தண்ணீர் விளையாட்டுகள் வான்குடை மூலமாக பறப்பது(பாராசெய்லிங்), தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) ஆகும். டிசம்பர் 2014லின் படி வான்குடை மூலமாக பறப்பதற்கு(பாராசெய்லிங்) ஒருவருக்கு ஏறத்தாழ 800 ரூபாய் ஆகிறது. தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) செய்ய ஒருவருக்கு ஏறத்தாழ 250 ரூபாய்[N 1] ஆகிறது. டால்பின் நோக்குதல் செய்ய படகில் செல்ல வேண்டும். டால்பின் அதிக அளவில் காண அதிகாலையில் செல்வது நல்லது. ஒரு படகிற்கு ரூபாய் 1500 [N 1] ஆகிறது. படகில் 4 முதல் 6 பேர் வரை செல்லலாம்.

கலங்குட் கடற்கரையில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஹொண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனம், ஏறத்தாழ 300 ரூபாய்[N 1] நாள் வாடகைக்கும், பல்சர் இரு சக்கர வாகனம் ஏறத்தாழ 500 ரூபாய் நாள் வாடகைக்கும் கிடைக்கிறது. எரிபொருள் செலவு, வாடகைக்கு எடுப்பவரை சார்ந்தது ஆகும். கண்டோலிம், பாகா கடற்கரைகளுக்கு நடுவே கலங்குட் கடற்கரை அமைந்துள்ளது. கலங்குட்டில் இருந்து எளிதாக இரு சக்கர வாகனம் மூலம் சாலை வழியாக கண்டோலிம், பாகா கடற்கரைக்கு செல்லலாம்.

கலங்குட் கடற்கரை குளிப்பதற்கு உகந்த கடற்கரை ஆகும். இங்கு பாறைகள் இல்லை. கடலில் தத்தளிக்கும் சுற்றுலா பயணிகளைக் காப்பற்ற உயிர் காக்கும் படை உள்ளது. உயிர் காக்கும் படை ஜீப்களில் ரோந்து செல்கிறது. உயிர் காக்கும் படை மாலை 6.15 மேல் இல்லை. கோவா கடற்கரையில் ராட்சச அலைகள் இல்லாததால், குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக உள்ளது.

சின்குரியம், கண்டோலிம், கலங்குட், மற்றும் பாகா ஆகியவை தொடர்ச்சியாக உள்ள கடற்கரைகள் ஆகும். சின்குரியம் தெற்கு திசையில் தொடங்கி, கண்டோலிம், கலங்குட், பாகா கடற்கரையில்(வடக்கு திசை) முடிகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

குறிப்பு

[தொகு]
  1. 1.0 1.1 1.2 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாதக் கணக்கின்படி

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கலங்குட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலங்குட்&oldid=4179647" இலிருந்து மீள்விக்கப்பட்டது