கரீம்கஞ்சு
கரீம்கஞ்ச் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°52′N 92°21′E / 24.87°N 92.35°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கரீம்கஞ்ச் |
அரசு | |
• நிர்வாகம் | கரீம்கஞ்ச் நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 56,854 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமியம் |
• பிரதேச மொழிகள் | வங்காளம், சில்லெட்டி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS 10 |
இணையதளம் | karimganj |
கரீம்கஞ்ச் (Karimganj ) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வங்காளதேசத்தின் வடகிழக்கு எல்லைப்புறத்தில் அமைந்த இந்திய ஊராகும். இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27 வார்டுகளும், 12,234 வீடுகளும் கொண்ட கரீம்கஞ்ச் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 56,854 ஆகும். அதில் 28,473 ஆண்கள் மற்றும் 28,381 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4946 (8.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.58% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 86.57%, முஸ்லீம்கள் 12.06%ன்ன் மற்றும் பிறர் 1.36% ஆகவுள்ளனர்.[2][3][4]
கரீம்கஞ்ச் தொடருந்து ஒரு வழிப்பாதையில், டீசல் இயந்திரத்தால் இயக்கப்படும் தொடருந்துகள் கொண்டது. கரீம்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து அகர்தலா, சில்சார், பாதர்பூர், துல்லப்செரா, மைசாசென் போன்ற நகரகளுக்கு பயணியர் வண்டிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sylheti". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
- ↑ Karimganj Population Census 2011
- ↑ "2011 Census - Karimganj (MB)". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
- ↑ "DISTRICT CENSUS HANDBOOK - KARIMGANJ" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
- ↑ Karimganj Junction railway station
வெளி இணைப்புகள்
[தொகு]- Karimganj news பரணிடப்பட்டது 2022-02-27 at the வந்தவழி இயந்திரம்