கட்னி
Appearance
கட்னி (Katni) நகரம் முர்வாரா காத்னி (Murwara Katni) அல்லது முத்வாரா (Mudwara) என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது கட்னி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரானது கட்னி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியில் அமைந்துள்ளது. ஜபல்பூர் நகரிலிருந்து 90 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகர் கடல் மட்டத்திலிருந்து 304 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 2,21,875 ஆகும். இதில் 11.3% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 87.43% ஆகும்.
புற இணைப்புகள்
[தொகு]- Katni government website பரணிடப்பட்டது 2019-08-10 at the வந்தவழி இயந்திரம்