கங்கைகொண்டான் (கடலூர்)
கங்கைகொண்டான் | |
ஆள்கூறு | 11°32′24″N 79°29′12″E / 11.539928°N 79.486685°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
வட்டம் | விருத்தாச்சலம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
6,434 (2011[update]) • 330/km2 (855/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) |
பரப்பளவு | 19.50 சதுர கிலோமீட்டர்கள் (7.53 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/gangaikondan |
கங்கைகொண்டான் (ஆங்கிலம்:Gangaikondan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]கடலூர் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு கிழக்கில் கடலூர் 45 கிமீ; மேற்கில் விருத்தாச்சலம் 18 கிமீ; வடக்கில் சிதம்பரம் 40 கிமீ மற்றும் தெற்கில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 10 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]19.50 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,620 வீடுகளும், 6,434 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 609 மற்றும் 39 ஆகவுள்ளனர். [5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கங்கைகொண்டான் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Gangaikondan Population Census 2011