ஐதரோவினைலேற்றம்
ஐதரோவினைலேற்றம் (Hydrovinylation) என்பது எத்திலீனின் C-H பிணைப்பில் ஓர் ஆல்க்கீனை முறையாக உட்புகுத்த மேற்கொள்ளப்படும் ஒரு வேதி வினையாகும். ஐதரோ ஆல்க்கீனைலேற்றம் என்பது எந்தவொரு விளிம்புநிலை ஆல்க்கீனின் C-H பிணைப்புடன் ஓர் ஆல்க்கீனை முறையாக உட்புகுத்த மேற்கொள்ளப்படும் வேதி வினை என்று மிகப்பொதுவாகக் கூறலாம். அணைவுச் சேர்மங்கள் இவ்வினையில் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன. இசுடைரீன் மற்றும் எத்திலீன் சேர்மங்களை 3-பீனைல்பியூட்டீனாக மாற்றும் வேதிவினை ஐதரோவினைலேற்ற வினைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் :[1]
- PhCH=CH2 CH2=CH2 → CH3-CH(Ph)-CH=CH2.
எத்திலீன் இருபடியாக்கம்
[தொகு]டைமெர்சால் மற்றும் ஆல்பாபியூட்டால் செயல்முறையில் எத்திலீனை இருபடியாக்க வினைக்கு உட்படுத்தி 1- பியூட்டீன் தயாரிக்கும் முறையும் ஐதரோவினைலேற்ற வினைக்கு மற்றொரு உதாரணமாகும். கல்லெண்ணெய் மற்றும் 1-பியூட்டீன் போன்ற இணையொருபடிகளை உற்பத்தி செய்யவே ஆல்க்கீன்கள் இருபடியாக்கம் செய்யப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு அறிக்கையின்படி உலகெங்கிலும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் ஆண்டுக்கு 40,000 டன்கள் 1-பியூட்டீன் இச்செயல்முறையில் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது [2]. 2-பியூட்டீனாக மாற்றியமாக்க 1-பியூட்டீன் உகந்ததாகும். ஒலிபீன் மாற்றுத் தொழில்நுட்ப முறையில் புரோப்பைலீன் தயாரிக்க 2-பியூட்டீன் பயன்படுகிறது.
ஐதரோ அரைலேற்றம்
[தொகு]ஐதரோ அரைலேற்ற வினையும் ஐதரோவினைலேற்ற வினைக்குரிய சிறப்பு உதாரணமாகும். ஆல்க்கைன் மற்றும் ஆல்க்கீன் அடிமூலக்கூறுகளுக்காக ஐதரோ அரைலேற்ற வினை நிருபிக்கப்படுகிறது. இதற்கு முராய் வினை தொடக்க கால உதாரணமாகும். இவ்வினையில் அசிட்டோபீனோனின் C-H பிணைப்பில் ஆல்க்கீன்கள் உட்புகுத்தப்படுகின்றன. ஓர் அரைல் இடைநிலையை நிலைப்படுத்தும் இடத்தெரிவை கீட்டோ குழு இயக்குகிறது [3]
.
பலேடியம் கார்பாக்சிலேட்டுகள் வினையூக்கியாகச் செயல்படும்போது மின்னணுகவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினையின் மூலம் Pd(II) அரைல் இடைநிலையைப் பெறுவது ஒரு முக்கியமான படிநிலையாகும் [4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hydrovinylation Reactions in Organic Synthesis". Comprehensive Organic Synthesis II (Second Edition) 5. (2014). 1582–1620. DOI:10.1016/B978-0-08-097742-3.00533-4.
- ↑ Yves Chauvin (2006). "Olefin Metathesis: The Early Days (Nobel Lecture)". Angew. Chem. Int. Ed. 45: 3740–3747. doi:10.1002/anie.200601234.
- ↑ Murai, Shinji; Kakiuchi, Fumitoshi; Sekine, Shinya; Tanaka, Yasuo; Kamatani, Asayuki; Sonoda, Motohiro; Chatani, Naoto (1993-12-09). "Efficient catalytic addition of aromatic carbon-hydrogen bonds to olefins" (in en). Nature 366 (6455): 529–531. doi:10.1038/366529a0. Bibcode: 1993Natur.366..529M. http://www.nature.com/nature/journal/v366/n6455/abs/366529a0.html.
- ↑ Jia, C.; Kitamura, T.; Fujiwara, Y. (2001). "Catalytic Functionalization of Arenes and Alkanes Via C-H Bond Activation". Acc. Chem. Res. 34: 633-639. doi:10.1021/ar000209h.