ஐதராக்சிகுயினால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்-1,2,4-டிரையால்
| |
வேறு பெயர்கள்
ஐதராக்சி ஐதரோகுயினோன்
ஆக்சி ஐதரோகுயினோன் 1,2,4-பென்சீன்டிரையால் 1,2,4-டிரை ஐதராக்சிபென்சீன் பென்சீன்-1,2,4-டிரையால் 4-ஐதராக்சிகேட்டக்கால் 2,5-டை ஐதராக்சிபீனால் 1,3,4-பென்சீண்டிரையால் 1,3,4-டிரை ஐதராக்சிபென்சீன் | |
இனங்காட்டிகள் | |
533-73-3 = | |
ChEBI | CHEBI:16971 |
ChemSpider | 10331 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02814 |
பப்கெம் | 10787 |
| |
பண்புகள் | |
C6H6O3 | |
வாய்ப்பாட்டு எடை | 126.11 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதராக்சிகுயினால் (Hydroxyquinol) என்பது C6H3(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன்டிரையால் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் ஒன்றாக ஐதராக்சிகுயினால் விளங்குகிறது. நிறமற்ற திண்மமான இது தண்ணீரில் கரைகிறது. காற்றுடன் வினைபுரிந்து கருப்பு நிறத்தில் உள்ள கரையாத ஒரு திண்மத்தை இது கொடுக்கி்றது [1]
தயாரிப்பு
[தொகு]பாராகுயினோனுடன் அசிட்டிக் நீரிலியைச் சேர்த்து தொடர்ந்து உருவாகும் மூவசிட்டேட்டை நீராற்பகுப்பு செய்யும் அசிட்டைலேற்ற முறையினால் ஐதராக்சிகுயினால் தயாரிக்கப்படுகிறது [1]. ஐதரோகுயினோன் மீது பொட்டாசியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்து பண்டைய காலத்தில் ஐதராக்சிகுயினால் தயாரிக்கப்பட்டது [2]. மேலும், பிரக்டோசை ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [3][4]
- C6H12O6 → 3 H2O C6H6O3.
இயற்கைத் தோற்றம்
[தொகு]பிராடிரைசோபியம் யப்போனிகம் போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை பீனால், கேட்டகின் உயிரியாற் சிதைவடைந்து பொதுவாக ஐதராக்சிகுயினால் இயற்கையில் தோன்றுகிறது. சில உயிரினங்களில் வளர்சிதை மாற்றப்பொருளாகவும் ஐதராக்சி குயினால் தோன்றுகிறது [5]. உதாரணமாக, ஐதராக்சிகுயினால் 1,2-டைஆக்சிசனேசு என்ற நொதி தளப்பொருளான ஐதராக்சிகுயினாலுடன் ஆக்சிசனைப் பயன்படுத்தி 3-ஐதராக்சி- ஒருபக்க, ஒருபக்க – மியுகோனேட்டை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Fiege, Helmut; Heinz-Werner, Voges; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef et al. (2005). "Phenol Derivatives". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry (Weinheim, Germany: Wiley-VCH). doi:10.1002/14356007.a19_313.
- ↑ Roscoe, Henry (1891). A treatise on chemistry, Volume 3, Part 3. London: Macmillan & Co. p. 199.
- ↑ Luijkx, Gerard; Rantwijk, Fred; Bekkum, Herman (1993). "Hydrothermal formation of 1,2,4-benzenetriol from 5-hydroxymethyl-2-furaldehyde and D-fructose". Carbohydrate Research 242 (1): 131-139. doi:10.1016/0008-6215(93)80027-C.
- ↑ Srokol, Zbigniew; Anne-Gaëlle, Bouche; Estrik, Anton; Strik, Rob; Maschmeyer, Thomas; Peters, Joop (2004). "Hydrothermal upgrading of biomass to biofuel; studies on some monosaccharide model compounds". Carbohydrate Research 339 (10): 1717-1726. doi:10.1016/j.carres.2004.04.018.
- ↑ Mahadevan, A.; Waheeta, Hopper (1997). "Degradation of catechin by Bradyrhizobium japonicum". Biodegradation 8 (3): 159-165. doi:10.1023/A:1008254812074.