உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படை நிறுவனம் (United States Armed Forces Institute) அமெரிக்க ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக இருந்த ஒரு கல்வி அமைப்பாகும். 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓர் இராணுவ நிறுவனமாக இது நிறுவப்பட்டது.

1942 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்நிறுவனம் கல்லூரி அளவில் பொதுத் தேர்வுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படை நிறுவன பாடங்களை உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, அவாய் மற்றும் சப்பான் ஆகிய நாடுகளில் உள்ள இராணுவ சேவை உறுப்பினர்களுக்கு வழங்கியது.[1]

விசுகொன்சின் மாகாணத்தின் தலைநகரமான மேடிசன் நகரில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படை நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Exams Program Guide" (PDF). DANTES. 2014. p. 34.
  2. Palmer, Miles R. (1955). "The United States Armed Forces Institute". Public Administration Review 15 (4): 272–274. doi:10.2307/972982. https://archive.org/details/sim_public-administration-review_autumn-1955_15_4/page/272. 
  3. "United States Armed Forces Institute | Photograph | Wisconsin Historical Society". Wisconsin Historical Society. 2008-09-30. https://www.wisconsinhistory.org/Records/Image/IM49615.