உள்ளடக்கத்துக்குச் செல்

ஏசுக்குலசு இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏசுக்குலசு இண்டிகா
Aesculus indica, Indian horse chestnut at RBG Kew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. indica
இருசொற் பெயரீடு
Aesculus indica
(Wall. ex Cambess.) Hook.
வேறு பெயர்கள் [2]

Pavia indica Wall. ex Cambess.
Pavia indica Royle
Pawia indica Kuntze

ஏசுக்குலசு இண்டிகா(தாவர வகைப்பாட்டியல்:Aesculus indica) என்பது சபிண்டேசியே குடும்பத்தில் உள்ள பரந்த - இலைகள் கொண்டதும், இலையுதிரும் பண்பும் கொண்ட ஒரு வகை மரமாகும். இது பொதுவாக இந்திய குதிரைகளின் கசுகொட்டை அல்லது இமாலயன் குதிரை கசுகொட்டை என்று அழைக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

ஏசுக்குலசு இண்டிகா மரமானது 11 முதல் 15 மீ (35-50 அடி) பரப்பளவில் 9 முதல் 12 மீ (30-40 அடி) வரை வளரக்கூடியதும் கவர்ச்சிகரமானதுமான மரமாகும்.[3] ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் முதல் ஜூலை வரை பூத்து, அக்டோபரில் பழங்கள் பழுத்து காணப்படும். இம்மரத்தின் மலர்கள் இருபாலுயிரி தன்மை கொண்டதாகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை மூலம் ஏராளமான வெள்ளை பூக்களுடன் இருக்கும். இதன் முதிர்ந்த மரமானது பரந்த பரப்பில் அமைந்திருப்பதால், அழகான வட்டமான விதானத்தை உருவாக்குகிறது.

பிற நாடுகளில்

[தொகு]

காஷ்மீர் மற்றும் மேற்கு நேபாளத்திற்கு இடையே இருக்கும் 900 முதல் 3,000 மீட்டர் உயரத்தில் உள்ள இமயமலையின் தாழ்நிலங்களை முதன்மை வாழிடமாக கொண்டுள்ள இம்மரமானது,[4] 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரித்தானிய தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்குள்ள பல பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் பிரபலமாக உள்ளது. மேலும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இம்மரம் காணப்படுகிறது.[3]

பயன்கள்

[தொகு]

இம்மரத்தின் இலைகள் வட இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் உலர்த்தப்பட்டு, தட்டாவாகர் எனப்படும் கசப்பான மாவாக அரைக்கப்படுகின்றன. இதன் கசப்பு தன்மை சபோனின் எனப்படும் கரிம இரசாயனங்களால் ஏற்படுகிறது, மாவை தயாரிக்கும் போது விதைகளை நன்கு கழுவுவதன் மூலம் இந்த கசப்பு தன்மை குறைக்கப்படலாம். இந்த மாவு பெரும்பாலும் கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்திகள்[5] மற்றும் அல்வா (இந்திய இனிப்பு) தயாரிக்கவும், நோன்பு காலங்களில் டாலியா எனப்படும் ஒரு வகை கஞ்சி அல்லது கூழ் உணவுப்பொருளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

பாரம்பரிய இந்திய மருத்துவத்தில், சில தோல் நோய்கள், வாத நோய் போன்றவற்றில் துவர்ப்பு மற்றும் ஆக்ரிட் தன்மை கொண்ட போதைப்பொருளாகவும், தலைவலி நிவாரணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5]

இம்மரத்தின் பெரிய இலைகள் மற்றும் பூக்கள் பெரிய அளவிலான போன்சாய்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளன.[6]

இங்கிலாந்தில், 'சிட்னி பியர்ஸ்' என்ற இம்மரமானது, ராயல் தோட்டக்கலை சங்கத்தின் கார்டன் மெரிட் விருதைப் பெற்றுள்ளது .[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lakhey, P.; Pathak, J. (2020). "Aesculus indica". IUCN Red List of Threatened Species 2020: e.T150283250A152201802. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T150283250A152201802.en. https://www.iucnredlist.org/species/150283250/152201802. பார்த்த நாள்: 5 August 2023. 
  2. "Aesculus indica (Wall. ex Cambess.) Hook. | Plants of the World Online | Kew Science". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 2020-02-05.
  3. 3.0 3.1 Aesculus indica Fact Sheet ST-63 http://hort.ufl.edu/database/documents/pdf/tree_fact_sheets/aesinda.pdf
  4. Indian Journal of Traditional Knowledge. Vol. 8(2), April 2009, pp. 285-286. Ethnobotany of Indian horse chestnut (Aesculus indica) in Mandi district, http://nopr.niscair.res.in/bitstream/123456789/3963/1/IJTK 8(2) 285-286.pdf
  5. 5.0 5.1 Plants and people of Nepal, By N. P. Manandhar, Sanjay Manandhar, Pg. 76
  6. D'Cruz, Mark. "Ma-Ke Bonsai Care Guide for Aesculus indica". Ma-Ke Bonsai. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
  7. "RHS Plantfinder - Aesculus indica 'Sydney Pearce'". பார்க்கப்பட்ட நாள் 4 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசுக்குலசு_இண்டிகா&oldid=3924746" இலிருந்து மீள்விக்கப்பட்டது