உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் பாய்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் பாய்டின் 1732 நாவலின் தலைப்புப் பக்கம்

எலிசபெத் பாய்ட் (c. 1710 - 1745) ஒரு ஆங்கில எழுத்தாளர். இவர் கவிதைகள், நாடகம் மற்றும் பருவ இதழ்களில் எழுதி அதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை ஆதரித்தார்.[1] டி ப்ளூம் லூயிசா அல்லது எலோயிசா என்ற பெயர்களின் கீழ் இவர் எழுதி வந்தார். ஷேக்ஸ்பியர் லேடீஸ் கிளப்பின் அறியப்பட்ட மூன்று உறுப்பினர்களில் எலிசபெத் பாய்டும் ஒருவர்.[2]

வாழ்க்கை மற்றும் வேலை

[தொகு]

அவருடைய பிறப்பு அல்லது தொழில் பற்றி அதிகம் அறியப்படவில்லை எனினும் ஸ்டூவர்ட் போராட்டத்தை ஆதரித்த ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து அறியலாம்.[3] அவரது தந்தை ஸ்டூவர்ட்டின் ஆதரவை பெற்றவர் என்றும், அவரது தாயார் பல குழந்தைகளை கவனிப்பதால் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை ஆதரிப்பதற்காகவே அவர் எழுதத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. இவரது எழுத்துக்களின் மூலமாக இவரது குடும்பம் நன்கு இணைக்கப்பட்டிருந்தாலும் கடினமான காலங்களில் வீழ்ச்சியடைந்ததாகக் கூறுகிறது.[4][5]

அவர் முதலில் லூயிசா என்ற பெயரில், வெரைட்டி:எ போம் (1727) மற்றும் வெர்சஸ் ஆன் தி கிங்ஸ் பர்த்டே (1730) என்ற கவிதைகளை வெளியிட்டார்.[4] அதை தொடர்ந்து இவரின் முதல் பெரிய நாவல் தி ஹேப்பி அன்ஃபர்ட்டுனேட் அல்லது பெண் பக்கம் என்ற தலைப்பில் வெளியிடபட்டது .இது 1732 தோன்றி 1737 மீண்டும் அச்சிடப்பட்டது [6] இது ஒரு முகமூடி காதல் என்று சொல்லாம். இதில் முன்னணி பெண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. சிறு பணம் கொண்டு அவர்கள் ஜார்ஜ் நீதிமன்றம், பிரின்சஸ் தெரு, லண்டன், அருகில் லீசெஸ்டர் புலங்கள் என்ற இடத்தில் கடையை அமைக்கின்றனர் [4]

1733 ஆம் ஆண்டில் யஹுமரஸ் மிஸ்சிலணி' என்ற தலைப்பில் ஐந்து நாட்களே ஆன ஒரு குழந்தையின் மரணம்; அழகான ஆனால் கருச்சிதைவு பெற்ற பிறப்பு, பற்றிய அவரது கவிதை சிறந்தாக கருதப்படுகிறது; அவர் டான் சாஞ்சோ, அல்லது தி ஸ்டூடண்ட்ஸ் விம், (1739) என்ற நாடகத்தை எழுதினார், ஆனால் இது ஒருபோதும் நாடகமாக நிகழ்த்தப்படவில்லை.[4] இருப்பினும், ட்ரூரி லேனின் தியேட்டர் ராயல் கிரீன் அறையில் டான் சாஞ்சோவுக்கு ஒரு வாசிப்பு வழங்கப்பட்டது. டான் சாஞ்சோ ஆக்ஸ்போர்டு கல்லூரி தோட்டத்தில் நடைபெறுகிறது . நாடகத்தின் முடிவில், பேய்கள் மறு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு, மினெர்வா ஷேக்ஸ்பியருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குகிறார்; பல ஷேக்ஸ்பியர் அறிஞர்கள் பாய்ட் ஷேக்ஸ்பியர் லேடீஸ் கிளப்பில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள போயட்ஸ் கார்னரில் உள்ள ஷேக்ஸ்பியர் நினைவுச் சிலைக்காக கிளப்பின் நிதி திரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டதாக பல ஷேக்ஸ்பியர் அறிஞர்கள் நம்புகின்றனர்.[2]

நூல் பட்டியல்

[தொகு]

நாவல்கள்

[தொகு]
  • தி ஹேப்பி அன்ஃபர்ட்டுனேட்; அல்லது, பெண்-பக்கம்: ஒரு நாவல், முதலியன

நாடகங்கள்

[தொகு]
  • டான் சாஞ்சோ, அல்லது மாணவர்கள் விம்
  1. The Snail: or The lady's lucubrations. Being entertaining letters between a lady at St. James's, and her friend at Dover, on new and curious subjects. By Eloisa. (To be continued monthly.) [London]: E. Boyd, 1745.
  2. 2.0 2.1 Dobson, Michael (1992), The Making of the National Poet: Shakespeare, Adaptation and Authorship, 1660-1769, Oxford, England: Clarendon Press, pp. 151–154, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198183232.
  3. Brown, Susan (2006). "Elizabeth Boyd". The Orlando Project. Archived from the original on 27 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 Lonsdale, Roger (ed) (1990). Eighteenth Century Women Poets: An Oxford Anthology. Oxford University Press. page 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0192827758.
  5. Brackett, Virginia (2008). The Facts on File Companion to British Poetry: 17Th and 18th Centuries. Infobase Publishing. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  6. Schofield, Mary Ann, Masking and Unmasking the Female Mind  Disguising Romances in Feminine Fiction 1713–1719, Chapter 2, University of Delaware Press (1999) ISBN 0874133653
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_பாய்ட்&oldid=3928222" இலிருந்து மீள்விக்கப்பட்டது