உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணெய் விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணெய் விளக்கு - அகல் விளக்கு

எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள்,

  1. தாவர எண்ணெய்கள்
  2. விலங்கு நெய்கள்
  3. மண்ணெண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள்.[1][2][3]

என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை.

கிறித்தவ சமய வழிபாட்டில் பயன்பட்ட பண்டைய எண்ணெய் விளக்கு. "க் ற்" என்னும் கிரேக்க எழுத்துக்கள் கிறித்துவைக் குறிக்கின்றன

எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும்.

பாவை விளக்கு

போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழை நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Veach, Michael R. (9 April 2018). "Whiskey Taxation, Part Two: The American Civil War And Beyond". Bourbon History. Bourbon Veach LLC. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  2. Edwards, Phil (August 7, 2015). "The horrific spike in whiskey prices during the Civil War, in one chart". Vox Media. https://www.vox.com/2015/8/7/9111123/whiskey-civil-war-chart. 
  3. "PM Narendra Modi gifts Xi Jinping Annam lamp and Thanjavur painting". Times of India. 11 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்_விளக்கு&oldid=4164209" இலிருந்து மீள்விக்கப்பட்டது