எட்வர்டு நியூட்டன்
எட்வர்டு நியூட்டன் Edward Newton | |
---|---|
பிறப்பு | 10 நவம்பர் 1832 |
இறப்பு | 25 ஏப்ரல் 1897 | (அகவை 64)
சர் எட்வர்டு நியூட்டன் (Edward Newton) ஒரு பிரித்தானிய காலனித்துவ நிர்வாகி மற்றும் பறவையியலாளர் ஆவார் . 1832 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் இவர் பிறந்தார்.[1] பிரித்தானியாவில் வழங்கப்படும் செயிண்ட் மைக்கேல், செயிண்ட் சியார்ச்சு கௌரவத்தை பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
எம்.பி., வில்லியம் நியூட்டனின் ஆறாவது மற்றும் இளைய மகனாக சபோல்கின் மாகாணத்தின் எல்வெடன் இல்லத்தில் பிறந்தார். இவர் பறவையியலாளர் ஆல்பிரட் நியூட்டனின் சகோதரராவார். 1857 ஆம் ஆண்டு கேம்பிரிட்சு, மாக்டலீன் கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரித்தானிய பறவையியல் வல்லுநர்கள் சங்கத்தின் இருபது நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.[1]
நியூட்டன் 1859 முதல் 1877 வரை மொரீசியசின் காலனித்துவ செயலாளராக இருந்தார். அங்கிருந்து இவர் ஏற்கனவே அழிந்துவிட்ட பறவையினங்களைச் சேர்ந்த டோடோ மற்றும் ரோட்ரிக்சு சாலிட்டர் ஆகிய பறவைகளின் பல மாதிரிகளை தனது சகோதரருக்கு அனுப்பினார்.
1878 ஆம் ஆண்டில், நியூட்டன் பூர்வீக நில பறவைகளை எங்கும் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பதற்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டங்களை இயற்றும் நடவடிக்கையை முன்னெடுத்தார்.
எட்வர்ட் 1877 ஆம் ஆண்டு முதல் 1883 ஆம் ஆன்டு வரை காலனித்துவ செயலாளராகவும், சமைக்காவின் லெப்டினன்ட்-ஆளுநராகவும் இருந்தார்[1][2] நியூட்டன் 1869 ஆம் ஆண்டில் கெரின் மகள் மேரி லூயிசா கிரான்சுடவுனை மணந்தார். அடுத்த ஆண்டிலேயே அவர் இறந்தார்.[1]
மலகாசி கெசுட்ரல் பால்கோ நியூட்டோனி பறவை இனங்களுக்காக இவர் நினைவு கூரப்படுகிறார்.
கெக்கோ இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு பெல்சுமா எட்வர்டு நுவ்டோனி என்ற பெயர் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[3]
1897 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 அன்று எட்வர்டு காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Anonymous (1908). "Original members: Sir Edward Newton". Ibis. 9th Series 2 Jubilee Supplement: 117–120. doi:10.1111/j.1474-919X.1909.tb05250.x. https://www.biodiversitylibrary.org/page/8750802.
- ↑ Wollaston AFR (1921). Life of Alfred Newton: late Professor of Comparative Anatomy, Cambridge University 1866-1907. London: Murray. p. 2.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Edward Newton", p. 80).