ஊட்டக்கூறுச் சுழற்சி
ஊட்டக்கூறுச் சுழற்சி (அல்லது சூழலியல் மறுசுழற்சி) (Nutrient cycle) என்பது ஊட்டக்கூறுகள் மறுசுழற்சிக்குட்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படக் கூடிய வகையில், ஊட்டக்கூறுகளில் ஏற்படும் இயக்கம் மற்றும் பரிமாற்றத்திற்கான சுழற்சிப் பாதையாகும். இது கனிம மற்றும் கரிமப் பொருட்களில் நிகழும் மாற்றங்களாகும். இந்த சுழற்சிப் பாதையில் உயிரணுக்கள், உயிரினங்கள், குமுகம், சூழல் மண்டலம் ஆகிய அனைத்துமே பங்கெடுக்கும். இங்கே ஊட்டக்கூறுகள் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டு, இடம் மாற்றப்பட்டு, வெளியேற்றப்பட்டு மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
மண்ணின் நுண்ணுயிரிகள் ஊட்டக்கூறுச் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை ஊட்டக்கூறுகளை வெளியேற்றுவதற்காகக் சுற்றுச்சூழலில் இருக்கும் கரிமப் பொருட்களை சிதைக்கின்றன. கரிமப் பொருட்களிலிருந்து ஊட்டக்கூறுகளைப் பிரித்தெடுத்து தாவர வேர்களால் உள்ளெடுக்கப்படக்கூடிய ஊட்டக்கூறுகளாக அவற்றை மாற்றி மண்ணுக்கு வழங்குகின்றன. தாவரங்கள் மண்ணிலிருந்து அவற்றைப் பெற்று உயிர்வாழ்வதுடன், விலங்குகளின் உணவாகவும் ஆகின்றன. பின்னர் தாவரங்கள் மற்றும் விலங்குகளால் உட்கொள்ளப்படும் ஊட்டக்கூறுகள், அவற்றின் இறப்பின்போது கரிமப் பொருட்களாகின்றன. அவை மீண்டும் உயிர்ச்சிதைவுக்கு (en:Decomposition) உட்பட்டு மீண்டும் சுற்றுச்சூழலுக்குத் திரும்பும். பின்னர் மீண்டும் ஊட்டக்கூறுகள் உயிரினங்களால் உட்கொள்ளப்படுவதுடன் இது தொடர்ச்சியாக இயற்கையாக நடைபெறும் ஒரு செயல் முறையாக இருக்கும்.
ஊட்டக்கூறுச் சுழற்சி விகிதம் பல்வேறு உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளில் தங்கியிருக்கும்.
கனிம ஊட்டக்கூறுகளை ஆக்க வளமுடைய சூழல்சார் உயிர்த் திரளாக (biomass) மாற்றும் பல்வேறு சுழற்சிகளில் கார்பன் சுழற்சி, கந்தக சுழற்சி, நைதரசன் சுழற்சி, நீர்ச் சுழற்சி, பாசுபரசு சுழற்சி, ஒட்சிசன் சுழற்சி ஆகியவையும் அடங்கும்.
சுருக்கம்
[தொகு]ஊட்டக்கூறுச் சுழற்சி என்பது இயற்கையின் மறுசுழற்சி அமைப்பாகும். மறுசுழற்சியின் அனைத்து வடிவங்களும் பொருள் வளங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் செயல்பாட்டில் ஆற்றலைப் பயன்படுத்தும் பின்னூட்ட சுழல்களைக் கொண்டுள்ளன. சூழலியலில் மறு சுழற்சியானது மிக முக்கியமாக உயிர்ச்சிதைவினாலேயே சீரமைக்கப்படுகின்றது.[1] சூழல் மண்டலம்|சூழல் மண்டலமானது]], நீரையும் உள்ளடக்கிய ஊட்டக்கூறுக் கனிமங்களான இயற்கையான பொருட்களை மறு சுழற்சி செய்யும் உணவு வலை (en:Food web)யில் உயிரியல் பல்வகைமையை ஈடுபடுத்துகிறது. இயற்கை அமைப்புகளில் மறுசுழற்சி செய்வது மனித சமூகங்களின் நல்வாழ்வைத் தக்கவைக்கும் மற்றும் பங்களிக்கும் பல சூழல் மண்டலத்தின் சேவைகளில் ஒன்றாகும்.[2][3][4]
வரலாறு
[தொகு]மண்புழுக்களின் உயிர்ச்சிதைவு செயலைக் குறிப்பிடும் வகையில் சார்லசு டார்வினின் எழுத்துக்களில் ஊட்டக்கூறுச் சுழற்சி பற்றிய வலாற்றுப் படிமம் காணப்படுகிறது. டார்வின் "பூமியின் துகள்களின் தொடர்ச்சியான இயக்கம்" பற்றி எழுதினார்.[6][7][8]
முன்னதாக, 1749 ஆம் ஆண்டு கார்ல் லின்னேயஸ் தனது ஓகோனோமியா நேச்சுரே (Oeconomia Naturae) என்ற நூலில், இயற்கையின் சமநிலை பற்றிக் கூறும்போது "இயற்கையான விடயங்கள் தொடர்பில் படைப்பாளியின் அனைத்து அறிவார்ந்த மனப்பான்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இயற்கைப் பொருளாதாரம் பொதுவான முடிவுகளை உருவாக்கவும், பரஸ்பரப் பயன்பாடுகளையும் உருவாக்குகிறது" என்று எழுதியுள்ளார்.[9] இந்த நூலில் அவர் சூழலியல் மறுசுழற்சி பற்றிய கருத்தைக் கூறியுள்ளார். "பரஸ்பரப் பயன்பாடு' என்பதே இங்கு திறவுகோலாக உள்ளது. ஒரு பொருளின் மரணம் மற்றும் அழிவு எப்போதும் மற்றொன்றின் மறுசீரமைப்பிற்குக் காரணமாக உள்ளது. அதனாலேயே பூஞ்சணம் இறந்த தாவரங்களில் வாழ்ந்து அவற்றைச் சிதைத்து மண்ணை வளமாக்குகின்றது. பின்னர் நிலமானது தாவரங்களிலிருந்து பெற்றுக் கொண்டவற்றை அவற்றுக்கே திருப்பியளிக்கிறது."[10] இன்னும் பின்னோகிய ஆய்வில் இயற்கையின் சமநிலை பற்றிய அடிப்படைக் கருத்து டெமோக்கிரட்டிசு, எபிகியூரசு ஆகிய கிரேக்கர்களிடம் இருந்தும், அவர்களின் ரோமானிய சீடரான லுக்ரேடியஸ் இடமிருந்தும் கிடைக்கப்பெறுகின்றது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ohkuma, M. (2003). "Termite symbiotic systems: Efficient bio-recycling of lignocellulose". Applied Microbiology and Biotechnology 61 (1): 1–9. doi:10.1007/s00253-002-1189-z. பப்மெட்:12658509.
- ↑ Elser, J. J.; Urabe, J. (1999). "The stoichiometry of consumer-driven nutrient recycling: Theory, observations, and consequences". Ecology 80 (3): 735–751. doi:10.1890/0012-9658(1999)080[0735:TSOCDN]2.0.CO;2. http://www.fish.washington.edu/people/naiman/contemporary/papers/elser_urabe_1999.pdf.
- ↑ Doran, J. W.; Zeiss, M. R. (2000). "Soil health and sustainability: Managing the biotic component of soil quality". Applied Soil Ecology 15 (1): 3–11. doi:10.1016/S0929-1393(00)00067-6. http://ddr.nal.usda.gov/dspace/bitstream/10113/10766/1/IND22068646.pdf.
- ↑ Lavelle, P.; Dugdale, R.; Scholes, R.; Berhe, A. A.; Carpenter, E.; Codispoti, L. (2005). "12. Nutrient cycling" (PDF). Millennium Ecosystem Assessment: Objectives, Focus, and Approach. Island Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55963-228-7. Archived from the original (PDF) on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ Montes, F.; Cañellas, I. (2006). "Modelling coarse woody debris dynamics in even-aged Scots pine forests". Forest Ecology and Management 221 (1–3): 220–232. doi:10.1016/j.foreco.2005.10.019.
- ↑ Darwin, C. R. (1881). The formation of vegetable mould, through the action of worms, with observations on their habits. London: John Murray. http://darwin-online.org.uk/content/frameset?viewtype=text&itemID=F1357&pageseq=1.
- ↑ Stauffer, R. C. (1960). "Ecology in the long manuscript version of Darwin's "Origin of Species" and Linnaeus' "Oeconomy of Nature"". Proceedings of the American Philosophical Society 104 (2): 235–241. https://archive.org/details/sim_proceedings-of-the-american-philosophical-society_1960-04-19_104_2/page/235.
- ↑ Worster, D. (1994). Nature's economy: A history of ecological ideas (2nd ed.). Cambridge University Press. p. 423. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-46834-3.
- ↑ Linnaeus, C. (1749). London, R.; Dodsley, J. (eds.). Oeconomia Naturae [defended by I. Biberg]. Holmiae: Laurentium Salvium (in லத்தின்). Vol. 2 (Translated by Benjamin Stillingfleet as 'The Oeconomy of Nature,' in Miscellaneous Tracts relating to Natural History, Husbandry, and Physick. ed.). Amoenitates Academicae, seu Dissertationes Variae Physicae, Medicae, Botanicae. pp. 1–58.
- ↑ Pearce, T. (2010). "A great complication of circumstances". Journal of the History of Biology 43 (3): 493–528. doi:10.1007/s10739-009-9205-0. பப்மெட்:20665080. http://home.uchicago.edu/~/trpearce/Pearce2010.pdf. பார்த்த நாள்: 2022-09-25.
- ↑ Gorham, E. (1991). "Biogeochemistry: Its origins and development". Biogeochemistry 13 (3): 199–239. doi:10.1007/BF00002942. http://www.soils.wisc.edu/soils/courses/451/01. Gorham 1991.pdf. பார்த்த நாள்: 2011-06-23.