உறவு (திரைப்படம், கனடா)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உறவு | |
---|---|
இயக்கம் | வி. திவ்வியராஜன் |
தயாரிப்பு | கவின் கலாலயா |
கதை | வி. திவ்வியராஜன் |
திரைக்கதை | வி. திவ்வியராஜன் |
இசை | பயாஸ் சவாஹீர் |
நடிப்பு | சுதாகர் சங்கீதா நவம் கதிர் துரைசிங்கம் சித்திரா பீலிக்ஸ் ஸ்ரீமுருகன் நர்த்தனன் குட்டி பாலா |
ஒளிப்பதிவு | ஜீவன் ஜெயராம் |
படத்தொகுப்பு | கீர்த்தனன் |
விநியோகம் | கவின் கலாலய |
வெளியீடு | 2010 |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
கனடாவில் கவின் க்லாலயாவினால் தயாரிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றத் திரைப்படம்.
புலம்பெயர் வாழ்வில் கணவன் - மனைவி உறவு சிதைவடைவதற்கான உளவியல் ரீதியான காரணங்களை முன்வைக்கும் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு போன்ற முக்கியமான பொறுப்புகளை கலைஞர் வி. திவ்வியராஜன் ஏற்றுள்ளார்.
சுதாகர், சங்கீதா, நவம், சித்திரா, சிறீமுருகன், நர்த்தனன், தம்பிராஜா சேகர், கதிர் துரைசிங்கம், பாலா(குட்டி) இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கான மெட்டுக்களை திவ்வியராஜன் வழங்க, பயாஸ் சவாஹீர் இசை அமைத்துள்ளார். பாரதி, சேரன் யாத்த பாடல்களுடன் திவ்வியராஜன் இயற்றி பாடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. நடன அமைப்பை திருமதி திவ்வியராஜன் கவனித்துள்ளார். ஒளிப்பதிவை ஜீவன் ஜெயராமும், படத்தொகுப்பை கீர்த்தனன் திவ்வியராஜனும் கவனித்திருக்கிறார்கள்.