உயர்வு நேரம்
உயர்வு நேரம் (rise time) என்பது மின்னழுத்தம் அல்லது மின்சாரப் படிச் சார்பினை விளக்கும்பொழுது, ஒரு குறித்த குறைந்த மதிப்பில் இருந்து குறித்த உயர்ந்த மதிப்பை குறிகையான மாற எடுத்துக்கொள்ளும் நேரம். அதே போன்று ஒப்புமை மின்னணுவியலில், இந்த மதிப்புகள் 10% இருந்து 90% வரை படியுயரம் அடையும். கட்டுப்பாட்டு கோட்பாடில், லெவைன் (லெவைன் 1996, ப. 158) கூற்றின் படி, உயர்வு நேரம் என்பது முடிவு மதிப்புடைய x% முதல் y% வரை உயர எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும். மேலும் குறைந்த ஒடுக்க இரண்டாம் நிலை கட்டகங்களுக்கு 0%-100% என்றும், உய்ய ஒடுக்கத்திற்கு 5%-95% வரை என்றும், மிகையொடுக்கத்திற்கு 10%-90% என்றும் விளக்கியுள்ளார்.[1] வெளியீடு குறிகையின் வீழ் நேரத்தையும் சார்ந்துள்ளது. இரண்டு அளப்புருக்களும் (உயர்வு நேரம் மற்றும் வீழ் நேரம்) உள்ளீடு குறிகையையும், கட்டகத்தின் தன்மையும் சார்ந்ததாக உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Precisely, (Levine 1996, ப. 158) states: "The rise time is the time required for the response to rise from x% to y% of its final value. For overdamped second order systems, the 0% to 100% rise time is normally used, and for underdamped systems...the 10% to 90% rise time is commonly used". See also the textbook Nise 2008.
மேற்கோள்கள்
[தொகு]- Levine, William S. (1996), The control handbook, Boca Raton, FL: CRC Press, p. 1548, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8570-9.